தேவையான பொருட்கள்:
* சாதம் – 1 கப்
தாளிப்பதற்கு…
* கடுகு – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு…
* வெள்ளை எள்ளு விதைகள் – 3 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* வரமிளகாய் – 3
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களுள் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
Ellu Rice Recipe In Tamil
* பின் எள்ளு விதைகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, அனைத்தையும் குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு அகலமான பாத்திரத்தில் சாதத்தைப் பரப்ப வேண்டும்.
* பின்னர் அதில் 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஒருமுறை நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த எள்ளு பொடி மற்றும் தாளித்ததையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறினால், சுவையான எள்ளு சாதம் தயார்.
குறிப்பு:
* உங்களுக்கு உளுத்தம்பருப்பு பயன்படுத்த பிடிக்காவிட்டால், வெறும் கடலை பருப்பை மட்டுமே பயன்படுத்தலாம்.
* எள்ளு பொடி தயாரித்தால், அதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து குறைந்தது 3-4 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.