24.2 C
Chennai
Thursday, Dec 19, 2024
மருத்துவ குறிப்பு

சிறுநீரக தொற்று குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!!!

சிறுநீரக தொற்று என்பது ஒரு வகையான சிறுநீரக பாதை தொற்றுகளாகும். ஏனென்றால் பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் வடிகுழாய் மட்டுமின்றி, சிறுநீரகங்களையும் தாக்கும். எனவே தான் சிறுநீரக பாதையில் தொற்றுகள் ஏதேனும் ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இல்லாவிடின், அவற்றால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதோடு, அழுகிய புண் காரணமாக இரத்ததில் நச்சுத்தன்மை உண்டாகக்கூடும்.

பொதுவாக சிறுநீரக தொற்றுக்களை குடலில் வாழும் ஈ கோலை என்னும் உயிருக்கே உலை வைக்கும் பாக்டீரியா தான் ஏற்படுத்தும். இந்த பாக்டீரியாவானது எளிதில் சிறுநீரக பாதையில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் பிறப்புறுப்பை சுத்தம் செய்ய பயன்படுத்தும் டிஸ்யூ பேப்பர் வழியாக அல்லது உடலுறவு கொள்வதன் மூலம் கூட தாக்கக்கூடும்.

பெரும்பாலும் பெண்கள் தான் சிறுநீரக பாதை தொற்றுக்களால் அவஸ்தைப்படுவார்கள். இதற்கு காரணம், அவர்களின் சிறுநீர்ப்பையானது பிறப்புறுப்பிற்கு அருகில் இருப்பதால், எளிதில் பாக்டீரியாக்கள் தொற்றுக்களை ஏற்படுத்தும். அதற்காக ஆண்களுக்கு ஏற்படும் வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது. இது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படும்.

சிறுநீரக தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளவர்கள்

நீரிழிவு நோயினால் அவஸ்தைப்படுவோர்

* புரோஸ்டேட் சுரப்பியில் பாக்டீரியா தொற்றுகள் இருந்தால், அதனால் அந்த பாக்டீரியா பரவி சிறுநீரக தொற்றுகள் ஏற்படலாம்.

* அடிக்கடி உடலுறவு கொள்ளும் பெண்கள்

* ஆசனவாய் உடலுறவில் ஈடுபடும் ஆண்கள்

* கர்ப்பிணிகள்

* சிறுநீரக கற்கள் அல்லது மலச்சிக்கல் உள்ளோர்

சிறுநீரக தொற்றிற்கான அறிகுறிகள்

* 38 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு அதிகமாக காய்ச்சல்

* தாங்கமுடியாத குளிர்ச்சி

* குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு

* பசியின்மை மற்றும் மிகுந்த சோர்வு

* முதுகு மற்றும் இடுப்புப் பகுதியில் வலி

* அடிக்கடி சிறுநீர் கழிப்பது மற்றும் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுவது

* இரத்தம் கலந்த சிறுநீர் அல்லது மங்கலான சிறுநீர்

மருத்துவ சோதனை அவசியம்

மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகி போதிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சிறுநீரகம் மட்டுமின்றி, அழுகிய புண் காரணமாக இரத்ததில் நச்சுத்தன்மை ஏற்படக்கூடும். மேலும் சிறுநீரகம் தான் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தில் கலந்துள்ள கழிவுகளை வடிகட்டி வெளியேற்றும் உறுப்பு. எனவே கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் உயிரை விட நேரிடும்.

இயற்கை வைத்தியங்கள்

சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டிருப்பது போல் தெரிந்தால், பாக்டீரியாக்கள் பரவாமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றி வந்தால், அவற்றைத் தடுக்கலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்

1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன், 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், சிறுநீரக பாதை தொற்றின் தீவிரத்தைத் தடுக்கலாம்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், சிறுநீரக பாதை தொற்றுக்கள் மற்றும் சிறுநீரக தொற்றுக்கள் குணமாகும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா சிறுநீரக பதையில் அல்கலைனை உருவாக்கி, தொற்றுக்களை எளிதில் நீக்கிவிடும். அதற்கு தினமும் 1 டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, குடித்து வர வேண்டும்.

பூண்டு

தினமும் 2-3 பூண்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால், சிறுநீர் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு, அதன் மூலம் பாக்டீரியாக்களை சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடலாம்.

வைட்டமின் சி

வைட்டமின் சி நிறைந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றை அதிகம் உட்கொண்டு வந்தால், அதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, அதன் மூலம் சிறுநீரக பாதையைத் தாக்கிய பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி வெளியேற்றிவிடலாம்.

சீமை சாமந்தி டீ

சீமை சாமந்தி டீயை தினமும் 2 கப் குடித்து வந்தால், சிறுநீரக பாதையை மட்டுமின்றி உடலைத் தாக்கிய மற்ற பாக்டீரியாக்களையும் எளிதில் வெளியேற்றிவிடலாம்.

Related posts

மூளை எப்படி நினைவுகளை சேமிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா -தெரிஞ்சிக்கங்க…

nathan

இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்

nathan

இதோ இருமலை உடனடியாக போக்குவதற்கான சில வீட்டு சிகிச்சைகள்!…

sangika

கையில் உள்ள திருமண ரேகை உங்கள் திருமணத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

நன்மைகள் ஏராளமாம்! 1 டம்ளர் துளசி பாலை தினமும் காலையில் குடிச்சு பாருங்க…..

nathan

இதோ எளிய நிவாரணம்! குதிகால் வெடிப்பைப் போக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க…

nathan

துளசி நீரில் மஞ்சளினை கலந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

வாழ்க்கையில் வெற்றி பெற என்ன வழி

nathan

அக்குள் அரிப்பு பயங்கரமா இருக்கா? இயற்கை தீர்வுகள்!

nathan