easy chicken curry 25 1466842210
அசைவ வகைகள்

சிம்பிளான… நாட்டுக்கோழி கிரேவி

விடுமுறை நாட்களில் அதுவும் மழைக்காலத்தில் நன்கு காரசாரமாக அசைவ உணவை சமைத்து சாப்பிட விரும்புவோம். அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப் போவது மிகவும் ஈஸியான நாட்டுக்கோழி கிரேவியைப் பற்றி தான். இது பேச்சுலர்கள் செய்து சுவைக்கும் அளவில் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டது.

சரி, இப்போது அந்த நாட்டுக்கோழி கிரேவியின் எளிய செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

நாட்டுக் கோழி – 200 கிராம் பெரிய வெங்காயம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1/4 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிது தண்ணீர் – 3/4 கப் உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

தக்காளி – 1 (நறுக்கியது) பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது) இஞ்சி – 1/2 இன்ச் பூண்டு – 4 பற்கள் சோம்பு – 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1/2 டேபிள் ஸ்பூன் பட்டை – 1/4 இன்ச் ஏலக்காய் – 2 சோம்பு – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது வரமிளகாய் – 1 கல்பாசி – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் நாட்டுக்கோழியை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 2-3 முறை நீரில் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின்பு அதில் மசாலா பொடிகளான மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக 5 நிமிடம் குறைவான தீயில் வதக்க வேண்டும். பிறகு அதில் நாட்டுக்கோழியை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, 3/4-1 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், நாட்டுக்கோழி கிரேவி ரெடி!!!

easy chicken curry 25 1466842210

Related posts

ஸ்பைசியான இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி

nathan

நண்டு தொக்கு மசாலா

nathan

சூப்பர் நண்டு வறுவல்

nathan

சிக்கன் பெப்பர் ப்ரை எப்படி செய்வதென்று பார்ப்போம்…!

nathan

கருவாட்டு ப்ரை(Karuvadu Fry)

nathan

சைனீஸ் சிக்கன் பக்கோடா….

nathan

கோவா க்ரீன் சிக்கன் குழம்பு

nathan

ஃபிங்கர் சிக்கன்

nathan

முட்டை தக்காளி குழம்பு

nathan