தேவையான பொருட்கள்
சமைக்கப்பட்ட சாதம் – 1கப்
வேக வைத்த உருளைக்கிழங்கு – 1(தோலுரித்து மசித்து கொள்ளவும்)
காய்கறிகள் (பச்சை பீன்ஸ், குடை மிளகாய், வெங்காயத் தாள், சிவப்பு மற்றும் மஞ்சள் குடை மிளகாய் மற்றும் கேரட்) – 1கப் (நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1(நறுக்கியது)
இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1/4 “டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – கொஞ்சம்
சீரகப் பொடி-1/2 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
மக்காச் சோள மாவு-1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் (பொரிப்பதற்கு)
செய்முறை :
1. ஒரு பெளலை எடுத்து எண்ணெய்யை தவிர மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் கலக்க வேண்டும்.
2. கையை வைத்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அப்போது தான் அதன் பதம் தெரியும்.
3. இப்பொழுது டேஸ்ட் பார்த்துக் கொண்டு உப்பு, காரம் வேண்டும் என்றால் சேர்த்துக் கொள்ளலாம்.
4. சாதம் நன்றாக மசித்து இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
5. ஒரு தட்டில் சிறிது மாவை தூவி விட வேண்டும்.
6. இப்பொழுது நாம் செய்து வைத்த கலவையை கொண்டு டிக்கிஸ் தயாரிக்க வேண்டும். அதாவது கலவையை சிறிது எடுத்து உருட்டி தட்டையாக கட்லட் வடிவத்தில் தட்ட வேண்டும். இது தான் டிக்கிஸ். இந்த டிக்கிஸை மாவு தூவப்பட்ட தட்டில் வைத்து கொள்ளவும்.
7. வாணலியை பற்ற வைத்து அதில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
8. எண்ணெய் மிதமாக சூடானதும் டிக்கிஸை ஒவ்வொன்றாக போட்டு பொரிக்க வேண்டும்.
9. டிக்கிஸ் நன்றாக பொரிய இருபக்கமும் திருப்பி விட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.
10. பொன்னிறமாக வரும் வரை திருப்பிக்கிட்டே இருக்க வேண்டும்.
11. ஒரு தட்டை எடுத்து எண்ணெய்யை உறிய டிஸ்யூ பேப்பர் விரித்து கொள்ளுங்கள்
12. இப்பொழுது அந்த தட்டில் பொரித்த கட்லட்டை வைக்கவும்.
13. சுவையான ரைஸ் கட்லட் ரெடி
இந்த கட்லட்டுடன் சாஸ் அல்லது கொத்தமல்லி மற்றும் புதினா சட்னி தொட்டு சாப்பிட்டால் ரொம்ப ருசியாக இருக்கும்.
கவனத்தில் வைக்க வேண்டியவை
தட்டில் மாவை தூவி அதன் மேல் கட்லட்டை வைப்பது முக்கியம். இது கட்லட் தட்டில் ஒட்டாமல் இருக்க உதவுகிறது
பேசன் மாவிற்கு பதில் நீங்கள் வறுத்த பொரி கடலை மாவை கூட பயன்படுத்தினாலும் கட்லட் நன்றாக வரும்.
இன்னும் சுவையாக மணமாக கட்லட் இருக்க வேண்டும் என்று நினைத்தால் பொரிப்பதற்கு நெய் பயன்படுத்தவும்.
உடல் ஆரோக்கியத்திற்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்தியும் செய்யலாம்
என்னங்க ரெடியாகி விட்டீங்களா உங்க வீட்லயும் கட்லட் செய்து அசத்துவதற்கு.