26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
8 15
ஆரோக்கிய உணவு

சர்க்கரை அளவை உடனே குறைக்க இதைச் சாப்பிடுங்க!

பொதுவாக டயட் என்று சொன்னால் உடனே உடல் எடையை குறைப்பதற்காகத்தான் என்று நினைத்துக் கொள்கிறார்கள் ஆனால் உண்மையில் உடல் எடையை குறைப்பதைத் தாண்டி ஏராளமான நன்மைகள் செய்கிறது உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்க உதவிடுகிறது.

காய்கறி சார்ந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது யாருக்கு நன்மை செய்கிறதோ இல்லையோ சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை கொடுக்கிறது. காய்கறி டயட் என்றதும் மூன்று வேலையும் வெறும் காய்கறி மட்டுமே சாப்பிடுவதல்ல காய்கறி, நட்ஸ்,தானியங்கள்,பருப்புகள் எல்லாம் சம அளவில் இருக்கும்.

சர்க்கரை நோய் :

இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தினால் எல்லாருக்கும் சர்க்கரை நோய் மிகவும் சர்வ சாதரணமாகிவிட்டது. வயது வித்யாசமின்றி பலரும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.

மேலும் சரியான உணவுப்பழக்கம் இல்லாதது தொடர்ந்து ரத்தச் சர்க்கரை அளவினை அதிகரிக்கும் வகையில் உணவுகளை எடுத்துக் கொள்வது கட்டுப்பாடில்லாத சர்க்கரையை எடுத்துக் கொள்வது ஆகியவை சர்க்கரை தொடர்ந்து அதிகளவில் இருக்க வைக்கிறது .

கலோரி குறைவு :

பொதுவாக செடிகளில் வளரக்கூடிய காய்கறி மற்றும் பழங்களில் குறைந்த அளவிலான கலோரியே இருக்கும். அவற்றில் நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிற விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் இதில் நிறைந்திருக்கிறது.

நம் உடலில் இருக்கும் செல்கள் சீராக இயங்குவதற்கு இவை மிகவும் அவசியமானதாகும்.

சர்க்கரை :

உங்களுக்கு இருக்கக்கூடிய சர்க்கரை நோயை குறைப்பதற்கு ஒரே வழி நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய சர்க்கரையின் அளவை குறைப்பது தான்.

காய்கறிகளில் பெரும்பாலும் குறைவான சர்க்கரையே இருக்கும். அதற்காக எல்லா வகை காய்கறிகளையும் நீங்கள் எடுத்துக் கொள்ள முடியாது. சர்க்கரைச் சத்து குறைவான காய்கறிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் :

பொதுவாக காய்கறி மற்றும் பழங்களில் அதிகளவு ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கும். இது சீரான ரத்த ஓட்டத்திற்கும், செல்களின் வளர்ச்சிக்கும் வழிவகை செய்கிறது. இதனால் புற்றுநோய் அபாயத்திலிருந்து நீங்கள் எளிதாக தப்பிக்க முடியும்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் உணவில் ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ்,ஃப்லேவனாய்ட்,க்யர்செட்டின்,பீட்டா கரோட்டின்,விட்டமின்கள் நிறைந்த காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஃபைபர் :

சர்க்கரை நோய் ஏற்படாமல் தவிர்க்க அல்லது சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வர உங்களுக்கு ஃபைபர் மிகவும் அவசியமாகும். அதனால் ஃபைபர் நிறைந்த காய்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

காய்கறிகளில் பொதுவாக கார்போஹைட்ரேட், ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட்,டயட்டரி ஃபைபர்,கரோடினாய்ட்ஸ்,ஃபோலிக் ஆசிட்,மக்னீசியம்,விட்டமின் சி மற்றும் விட்டமின் இ ஆகியவை நிறைந்திருக்கும். இவை சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வர உதவுவதுடன் நீங்கள் சாப்பிட்ட உணவினை செரிக்க வைக்கவும் உதவிடுகிறது.

உடல் எடை :

சர்க்கரை நோய்க்கு அடிப்படை காரணமாக இருப்பது இது தான். ஆம். அதீத உடல் எடை சர்க்கரை நோய் ஏற்பட வைத்திடும், காய்கறி டயட்டினை நீங்கள் பின்பற்றுவதினால் உடல் எடை கணிசமாக குறைந்திடும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த பலனைக் கொடுக்கும்.

இதயம் :

நீங்கள் சாப்பிடக்கூடிய காய்கறிகளில் அதிகளவு ஃபைபர் இருப்பதினால் அவை உங்கள் இதயத்தினை பாதுகாத்திடும். இது உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்திடும் இதனால் இதயப் பிரச்சனைகள் பக்கவாதம் ஆகியவை தாக்காது நம்மை பாதுக்காக்க முடியும்.

இப்படி காய்கறி மற்றும் பழங்கள் சார்ந்த உணவு வகைகளை எடுப்பதினால் உங்களுக்கு இதய வால்வுகளில் கொழுப்பு படிவது கூட தவிர்க்கப்படும்.

சர்க்கரை நோய் :

ஆம், இது சர்க்கரை நோயினை கட்டுப்பாட்டிற்குள் வைக்க பெரிதும் உதவிடுகிறது. சர்க்கரை நோய் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைப்பவர்கள். தொடர்ந்து பதினைந்து நாட்களுக்காவது காய்கறி டயட்டினை பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைத்திடும்.

நோய் எதிர்ப்பு சக்தி :

செடிகளில் வளர்ந்திருக்கும் காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவதினால் உங்களது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதிலிருக்கக்கூடிய ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்ட்டி இன்ஃபலமேட்டரி துகள்களினால் உங்களது உடலின் மெட்டபாலிசம் மிகவும் வலிமையாக இருக்கும்.

இதனால் அடிக்கடி நீங்கள் நோய்வாய்ப்படுவதை தவிர்க்க முடியும்.

அடிக்‌ஷன் :

நீங்கள் வாங்கக்கூடிய பாக்கெட் உணவுகளில் சேர்க்கப்படுகிற கெமிக்கல்களினால் தொடர்ந்து அந்த சுவை வேண்டும் என்கிற அடிக்‌ஷன் நிலை உருவாகும். இந்த காய்கறி டயட்டில் அந்த பிரச்சனை இருக்காது.

இதனால் உணவு ஒவ்வாமை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை

பாகற்காய் :

பாகற்காயில் அதிகளவு பீட்டா கரோட்டீன் இருக்கிறது. இவை தான் நம் உடலில் விட்டமின் ஏவாக சேகரிக்கப்படுகிறது. இதைத் தாண்டி இதில் கால்சியம், பொட்டாசியம்,வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட் (Folate), சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து ஆகியவை உண்டு. இதில் இருக்கக்கூடிய Charantin என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகளவு சர்க்கரையை குறைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவிடும்.

வெந்தயம் :

இதில் புரதச் சத்து, பாஸ்பரஸ், சோடியம், இரும்புச்சத்து, தயாமின் என ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. சர்க்கரை நோயாளிகள் உடலில் இருக்கக்கூடிய அதீத சர்க்கரையை குறைக்க வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரையை சாப்பிடலாம்.

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இன்ஸுலின் சரியாக சுரக்காது. வெந்தயம் அந்தப் பிரச்சனையை தீர்த்திடும்.

வெண்டைக்காய் :

வெண்டைக்காய் அடிக்கடி உங்களது உணவுப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றைத் தாண்டி வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை குடிப்பது மிகவும் சிறந்தது. முதல் நாள் இரவிலேயே வெண்டைக்காயை கட் செய்து தண்ணீரில் ஊற வைத்திட வேண்டும். பின்னர் மறுநாள் காலை அந்த தண்ணீரை வடிக்கட்டி காலையில் குடித்து வர சர்க்கரை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இதில் இருக்கக்கூடிய கரையக்கூடிய நார்ச்சத்து உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிக சர்க்கரை இருப்பவர்களுக்கு கிட்னி பாதிப்படையும் என்று சொல்லப்படுவதுண்டு. அவர்களுக்கும் இந்த வெண்டைக்காய் நீர் குடிப்பது சிறந்த பலனைக் கொடுத்திடும்.

பீர்க்கங்காய் :

இதில் சுண்ணாம்புச்சத்து, மாவுச்சத்து, கலோரி, பாஸ்பரஸ், நியாசின்,ஃப்ளோரின் ஆகியவை நிறைந்திருக்கிறது . இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதில் குறைவான அளவே கொழுப்புச் சத்தினை கொண்டிருக்கிறது. அதோடு இதில் குறைந்த கலோரி இருப்பதினால் சர்க்கரை நோயாளிகள் தாரளமாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

பீர்க்கங்காயில் இருக்கும் பெப்டைட்ஸ், ஆல்கலாப்ட்ஸ், சோன்டின் போன்ற வேதிப்பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன.

காலி ஃப்ளவர் :

காலி ஃப்ளவரில் பைட்டோகெமிக்கல் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் நமக்கு ஏரளமான நன்மைகளை செய்திடுகிறது. இதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ரத்தச் சர்க்கரையளவு கட்டுக்குள் கொண்டு வர உதவிடுகிறது.

அதோடு காலி ப்ளவரில் இருக்கக்கூடிய வேதிப் பொருட்கள் புற்றுநோய் ஏற்படுத்தும் செல்களை முற்றிலுமாக அழித்திடுகிறது.

பூசணிக்காய் :

பொதுவாக பூசணியை இனிப்புள்ள காய்கறி என்று ஒதுக்கிடுவோம். ஆனால் இதில் குறைவான க்ளைசமிக் இண்டெக்ஸ் தான் இருக்கின்றன. ஆகையால் இதனை நீங்கள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம். இதனைச் சாப்பிடுவதால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்து விடுமோ என்று பயம் கொள்ளத் தேவையில்லை.

பீன்ஸ் :

பீன்ஸ் வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து, புரோட்டீன், பொட்டாசியம், மக்னீசியம் நிறைந்துள்ளன. இவை, உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. இது, செரிமானத்தை சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

கேரட் :

கேரட்டில் அதிகளவு ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் பீட்டா கரோட்டீன் விட்டமின் ஏ,பி,சி மற்றும் கே ,மக்னீசியம்,ஃபோலேட் மற்றும் டயட்டரி ஃபைபர் ஆகியவை நிறைந்திருக்கின்றன.

அது தான் கேரட்டிற்கு நிறத்தினையும், இனிப்புச் சுவையையும் கொடுக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு கேரட் சிறந்த சாய்ஸாக அமைந்திடும். அதோடு இதிலிருக்கும் விட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோய் அதிகமாக இருப்பவர்களுக்கு டயபாட்டிக் ரெட்டினோபதி ஏற்பட வாய்ப்புண்டு. அதனை தவிர்க்க கேரட் சாப்பிடலாம்.

Related posts

கார்பைடு மாம்பழங்களை கண்டறிவது எப்படி

nathan

வெயில் காலத்துல நீங்க தர்பூசணி ஜூஸ் குடிக்கலாமா?தெரிந்துகொள்வோமா?

nathan

சப்பாத்தி-வெஜிடபிள் குருமா!

nathan

இதோ மாதம் ஒருமுறை முள்ளங்கி ஜூஸைக் குடிங்க கிடைக்கும் நன்மைகள் !இத படிங்க!

nathan

கமலா ஆரஞ்சு பழத்தில் எத்தனை சத்துக்கள் உள்ளன தெரியுமா!

nathan

வாழைப்பழம் எடையைக் குறைக்குமா? கூட்டுமா?அப்ப உடனே இத படிங்க…

nathan

காலையில் இதில் 1 ஸ்பூன் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனையே வராதாம்.. சூப்பர் டிப்ஸ்..

nathan

மூன்று வேளையும் சோறு சாப்பிடுபவரா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

காய்கறிகளை பார்த்து வாங்குவது எப்படி?

nathan