26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
Paniyaram Vegetable Kuzhi Paniyaram SECVPF
ஆரோக்கிய உணவு

சத்தான வெஜிடபிள் பணியாரம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கிலோ

உளுந்து – 1/4 கிலோ
கேரட் – 1 கப்
தேங்காய் – 1 கப்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ப.மிளகாய் – 3
முட்டைக்கோஸ் – 100 கிராம்
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா – விருப்பத்திற்கேற்ப
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

தாளிதம் : கடுகு, உளுந்தப்பருப்பு

செய்முறை:

கேரட், கொத்தமல்லி, ப.மிளகாய், முட்டைகோஸ், புதினா, தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பச்சரிசியில் வெந்தயம் போட்டு ஊற வைத்து அரைக்கவும்.

பிறகு உளுந்தப்பருப்பையும் அரைத்து இரண்டையும் உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

மறுநாள் காலை கடுகு, உளுந்தப்பருப்பு, கேரட், முட்டைக்கோஸ், தேங்காய், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவை போட்டு தாளித்து மாவில் போட்டு கரைத்து கொள்ளவும்.

பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி மாவை பணியாரமாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

இப்போது சூப்பரான சத்தான வெஜிடபிள் பணியாரம் ரெடி.

Courtesy: MalaiMalar

Related posts

இந்த பொருட்களை மட்டும் சாப்பிடுங்க போதும் ஆயுளுக்கும் புற்றுநோய் உங்களை எட்டியே பார்க்காது!

nathan

உடற்பயிற்சியினால் அதிகரிக்கும் உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுப் பொருட்கள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா காளானை யார் எல்லாம் சாப்பிட கூடாது என்று?அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா..?

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! யார் யாரெல்லாம் வெந்தயத்தை முளைகட்ட வைத்து சாப்பிட வேண்டும்?

nathan

சுவையான உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் கிரேவி

nathan

ருசியான பஞ்சு போல் இட்லி வேண்டுமா?

nathan

உளுந்தங்கஞ்சி

nathan

வலுவான மூட்டுக்களுக்கு ஏற்ற உணவு

nathan