01629b6e bc90 40c1 98e9 acc42492af36 S secvpf
சிற்றுண்டி வகைகள்

சத்தான கோதுமை ஓட்ஸ் ஊத்தப்பம்

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – ஒன்றரை கப்
ஓட்ஸ் – முக்கால் கப்
தயிர் – அரை கப்
பேக்கிங் பவுடர் – அரை தேக்கரண்டி
வெங்காயம் – 3
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை :

• ஓட்ஸை வெறும் கடாயில் சிறிது வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

• வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் பொடித்த ஓட்ஸ், தயிர், பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, தண்ணீர் ஊற்றி ஊத்தப்ப மாவு பதத்திற்கு கரைத்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

• ஒரு மணி நேரம் கழித்து மாவுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

• பிறகு அடுப்பில் தவாவை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு மாவை ஊத்தப்பமாக ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். சத்தான, சுவையான கோதுமை ஓட்ஸ் ஊத்தப்பம் தயார். சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.

01629b6e bc90 40c1 98e9 acc42492af36 S secvpf

Related posts

வாழை இலை கொழுக்கட்டை

nathan

சன்டே ஸ்பெஷல் சிக்கன் உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

ஆப்பம் செய்வது எப்படி?

nathan

பிடி கொழுக்கட்டை

nathan

ஐந்தே நிமிடங்களில் வெஜிடபிள் சேமியா செய்யலாம்!

nathan

மசாலா பராத்தா

nathan

ஈஸி வெஜ் கட்லட்

nathan

சீனி பணியாரம்

nathan

இலந்தை பழ வடாகம்

nathan