32.7 C
Chennai
Saturday, Sep 28, 2024
201610081205149888 wheat Semolina Vegetable Puttu SECVPF
சிற்றுண்டி வகைகள்

கோதுமை ரவை வெஜிடபிள் புட்டு

டயட்டில் இருப்பவர்கள் காய்கறிகளை வைத்து புட்டு செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம்.

கோதுமை ரவை வெஜிடபிள் புட்டு
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை – 2 கப்
பொடியாக நறுக்கி காய்கறிகள் – 1 கப் (கேரட், பீட்ரூட், பீன்ஸ், பச்சை பட்டாணி)
தேங்காய் துருவல் – கால் கப்
சர்க்கரை – 1 ஸ்பூன்
உப்பு – சுவைக்கு
தண்ணீர் – அரை கப்

செய்முறை :

* கேரட், பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் துருவிய தேங்காய் சிறிதளவு, உப்பு, சர்க்கரை, கோதுமை ரவை, அரை கப் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து ரவையை நன்றாக கலக்கவும். கட்டிகள் இல்லாமல் உதிரியாக கையில் பிடித்தால் உதிரியாக வரும்படி கலந்து கொள்ள வேண்டும்.

* அடுத்து அதில் காய்கறிகளை கலந்து 5 நிமிடம் வைக்கவும்.

* புட்டு குழலில் முதலில் சிறிது தேங்காய் துருவல் அடுத்து ரவை கலவை அடுத்து சிறிது தேங்காய் துருவல் என்ற படி மாவை கலவையை நிரப்பவும்.

* இதனை அடுப்பில் வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

* சுவையான சத்தான கோதுமை ரவை வெஜிடபிள் புட்டு ரெடி.

* இதற்கு எந்த காய்கறிகளை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். இந்த புட்டு செய்யும் போது கேரட், பீட்ரூட் போட்டு செய்தால் பார்க்க கலர்புல்லாக இருக்கும். 201610081205149888 wheat Semolina Vegetable Puttu SECVPF

Related posts

சுவையான ரச வடை செய்வது எப்படி…

nathan

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ராஜ் கச்சோரி

nathan

ஜவ்வரிசி தோசை

nathan

இலகுவான அப்பம்

nathan

அரிசி வடை

nathan

பிட்டு

nathan

மரவள்ளிக்கிழங்கு உருண்டை

nathan

புத்துணர்ச்சி தரும் முள்ளங்கி டோஸ்ட்

nathan

உங்களுக்கு மாம்பழ லட்டு செய்யத் தெரியுமா? வெயிலுக்கு சூப்பர் ரெஸிபி!!

nathan