* தற்போது கோடைகாலம் துவங்கி உள்ளதால் மக்கள் அதிகப்படியான வெயில் காரணமாக அவதியுற்று வருகின்றனர். உடலின் உஷ்ணத்தை குறைக்க தண்ணீர், பழங்கள், இளநீர், மோர், பழச்சாறுகள் ஆகியவற்றை பருக வேண்டும். இதைப்போலவே நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதைகள் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக் கூடியவை.
* பாதாம் பிசினை (கடல்பாசி என்றும் கூறுவார்கள்) இரண்டு நகக்கண் அளவு எடுத்து ஒரு பெரிய டம்ளர் தண்ணீரில் இரவில் போட்டு வைத்தால் காலையில் மொத்த நீரும் ஒரு ஜெல் போல மாறிவிடும் (இது ஜிகர்தண்டா செய்யவும்பயன்படுத்தப்படுகிறது). இதை தண்ணீருடனோ அல்லது எந்த பழச்சாறு மற்றும் சர்பத்துடன் கலந்து அருந்தலாம்.
* கடுகு போல தோற்றமளிக்கும் சப்ஜா விதைகளை (பலூடா செய்ய இது பயன்படுத்தப்படுகிறது) சிறிது நேரம் நீரில் ஊற வைத்தால் அவை உப்பிவரும். பின்பு அதனை நாம் அருந்தும் சர்பத் அல்லது பழச்சாறுகளில் கலந்தால் ஜூஸ் ரெடியாகிவடும்.