24.1 C
Chennai
Monday, Dec 16, 2024
2 horoscope 993144 960 720 05 1509
அழகு குறிப்புகள்

கோடீஸ்வர யோகமும், அஷ்ட லட்சுமி யோகமும் உங்க ஜாதகத்தில் இருக்கா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

ஒருவருக்கு பொன் பொருள் ஆடை ஆபரணங்களை தருவதும் மகாலக்ஷ்மியே. வாழ்க்கையில் ஒருவருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர் அன்னை மகாலட்சுமி. அழகு,செல்வம் மகிழ்ச்சி, அன்பு, கருணை அமைதி ஆகியவற்றின் ஆதாரமும் மகாலட்சுமிதான். லட்சுமி என்ற சொல்லுக்கு நிகரில்லாத அழகி என்று பெயர். அழகு பிரதிபலிக்கும் இடங்களிலெல்லாம் திருமகள் அருள் இருக்கும். எனவேதான் மகாலட்சுமிக்கு தன் இதயத்தில் இடமளித்து ஸ்ரீனிவாசன் எனப் பெயர் பெறுகிறார் மகா விஷ்ணு. மகாலட்சுமி யோகம் உங்க ஜாதகத்தில் ஏதாவது ஒரு வகையில் இருந்தாலும் உங்கள் இல்லத்திலும் செல்ல வளம் பெருகும்.

ஒருவரின் ஜாதகத்தில் அஷ்டலட்சுமி யோகம் இருந்தால் அவர் செல்வத்திற்கு அதிபதியாக திகழ்வார். லட்சுமி யோகத்தை ஜெனன ஜாதகத்தில் பெற்ற ஒருவர் அனைத்து செல்வங்களையும் பெற்று அரசனுக்கு நிகராக விளங்குவார். ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்திருந்தால் அது கோடீஸ்வர யோகம் தரும் அமைப்பு என்கின்றனர் ஜோதிடர்கள்.

லட்சுமி யோகம்

செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியை குறிக்கும் சுக்கிரனின் வலிமையை கொண்டு இந்த யோகம் விவரிக்கப்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி அதிக பலம் பெற்று ஆட்சி உச்சம் போன்ற நிலை பெற்று ஒன்பதாமதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று கேந்திர திரிகோணங்களில் நிற்பது லட்சுமி யோகத்தை தரும். ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் சுக்கிரன் கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் லட்சுமி யோகம் ஏற்படும்.

லட்சுமி யோக அமைப்பு

ஜாதகத்தில் கேந்திரம் என்பது லக்னம், நான்கு, ஏழு, பத்து. த்ரிகோணம் என்பது ஐந்து, ஒன்பது. சில நூல்களில் லக்னம் கேந்திரத்தில் இருக்கும், த்ரிகோணத்திலும் இருக்கும். கேந்திரங்களுக்குரிய கிரகங்களும், த்ரிகோணத்திற்குரிய கிரகங்களும் பார்வை, சேர்க்கை, பரிவர்த்தனை பெற்றால் லட்சுமி யோகம் அமையும்.

கோடீஸ்வர யோகம்

குருவும், கேதுவும் இணைந்து ஒருவரின் ஜாதகத்தில் இருந்தால் அவர் பாக்கியசாலியாக திகழ்வார். ரிஷப லக்னத்துடன் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் 5ம் வீடான கன்னி ராசியில் குருவும், கேதுவும் இருந்தால் அந்த ஜாதகர் கோடீஸ்வரன் ஆவது உறுதி. அந்த யோகம் உள்ள ஜாதகதாரர் 45 வயதுக்கு மேல் பெரிய பதவி வகித்து உயர்வடைவார். இன்றைய சூழ்நிலையில் தனுசு ராசியில் கேது சனி இணைந்திருக்க கூடவே குருவும் கூட்டணி அமைத்துள்ளார். இந்த அமைப்பு இருக்கும் போது பிறக்கும் குழந்தைகள் யோகக் காரர்களே.2 horoscope 993144 960 720 05 1509

தர்மகர்மாதி யோகம்

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தை லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி, பத்தாம் அதிபதி இதில் யாராவது ஒருவர் பார்ப்பது சுபமங்கள யோகமாகும். தர்ம கர்மாதிபதிகள் எனப்படும் 9, 10க்குடையாளர்களுடன் லாபாதிபதி எனும் 11ஆம் அதிபதி சம்பந்தப்பட்டால் சுய சம்பாத்தியத்தின் மூலம் பெரும் தனம் சேரும். தர்ம ஸ்தாபனங்கள், அறக்கட்டளைகள் அமைக்கும் பாக்கியம் உண்டு. லக்னத்திற்கு 9, 10க்குரியவர்கள் அல்லது சந்திரனுக்கு 9, 10க்குரியவர்கள் எந்த வகையிலாவது சம்பந்தம் பெற்றால் பூமி, பொன், பொருள் உண்டு.

செல்வம் குவியும் யோகம்

சந்திரனுக்கு கேந்திரமான 7ஆம் இடத்தில் சம சப்தம பார்வையுடன் சுக்கிரன் இருப்பது சவுந்தர்ய யோகம், வசிய யோகம். பெண்கள் மூலம் பண வரவு கிடைக்கும். 3, 6, 8, 12க்குரியவர்கள் ஒருவருக்கொருவர் சம்பந்தம் பெற்றாலும், 6க்குடையவன் 12ல், 12க்குடையவன் 6ல் இருந்தாலும், 12ஆம் அதிபதி. 12ல் இருந்தாலும் விமல யோகம். கணக்கிட முடியாத செல்வ வளங்கள் வந்து சேரும்.

ராஜயோக அமைப்பு

லக்னம், நான்கு, எட்டில் சூரியனும், புதனும் சேர்ந்து இருப்பது ராஜயோக அமைப்பாகும். கல்வியில் புகழ் அடைவார்கள், கணக்கு துறையில் சாதனை படைப்பார்கள். லக்னத்திற்கு 10ஆம் இடத்தில் சந்திரன், சனி சேர்ந்து இருந்தால் ஜாதகர் ஏதாவது ஒரு துறையில் பிரபலமாக இருப்பார்.

வீடு வாகனம் வாங்கும் யோகம்

நான்காம் இடம் என்பது சுக ஸ்தானம், வாகனம், கால்நடைகள், தாயார், வீடு நிலம், சொத்துக்களை பற்றி பேசும் இடம். வளர்பிறை சந்திரனும், செவ்வாயும் சேர்ந்து நான்காம் இடத்தில் இருந்தால் ரியல் எஸ்டேட், செங்கல், மணல், கட்டிட கட்டுமான பணிகள், விவசாய வருமானம் என பூமி மூலம் லாபம் அடைவார்கள். நான்காம் இடத்தில் சந்திரன், சுக்கிரன் சம்பந்தப்பட்டால் சொத்து சுகம் அதிகம் இருக்கும். தாய் மூலம் சொத்து சேரும். விவசாய விளைநிலங்கள், வீட்டு வாடகை, ஹோட்டல், லாட்ஜ், தங்கும் விடுதி போன்றவற்றில் அதிக வருமானம் பெறுவார்கள்.

நாடாளும் யோகம்

பிரகஸ்பதி எனப்படும் தேவகுரு வியாழனும், அசுர குரு எனப்படும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் திடீர் பணவரவால் செல்வந்தர் ஆவார். கடக ராசியில் குரு உச்சமடைகிறார். சுப குருவான குரு, சந்திரன் உடன் இணைந்து கடக ராசியில் இருந்தால் நாடாளும் யோகம் அமையும். சந்திரன், புதன் கன்னி ராசியில் இருந்தால் தனதான்ய சம்பத்து கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை

நவ கிரகங்களில் சுக்கிர பகவான் ஸ்ரீ மகாலட்சுமியின் உடன் பிறந்த சகோதரன் முறை எப்படி தெரியுமா? பிருகு மகரிஷிக்கு மகனாய் அவதரித்தவர்தான் இந்த சுக்கிரன். அதனால் மகாலட்சுமிக்கு பார்கவி என்ற பெயர் உள்ளது போல சுக்கிரனுக்கு பார்கவன் என்ற பெயருண்டு. ஒரே தாய் தந்தையருக்கு இவர்கள் இருவரும் அவதரித்ததால் சகோதரன் சகோதரி முறை வருகிறது. சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமையில் வெள்ளி விளக்கில் பசு நெய் ஊற்றி வெண்மையான பஞ்சுத்திரி போட்டு விளக்கு ஏற்ற வீட்டில் அஷ்ட லட்சுமி யோகம் உண்டாகும்.

Related posts

விளக்கெண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்கும், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கின்றன…

nathan

உங்களுக்காகவே முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையை நீக்க பல இயற்கை டிப்ஸ்கள் இதோ..!

nathan

கரும்புள்ளிகளைப் போக்கும் சில இயற்கை வைத்தியங்கள்

nathan

கழுத்தில் ஏற்படும் கருமையை நீக்க இதை செய்யுங்கள்!…

nathan

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க – இயற்கை வைத்தியம்

nathan

நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய இலைகளைக் கொண்டே எளிதில் முகப்பருக்களை மாயமாய் மறைய வைக்கலாம்….

nathan

மெஹந்தி பிரியரா நீங்கள்? அப்ப உடனே இத படிங்க…

sangika

30 வயதை நெருங்குபவரா நீங்கள்? கட்டாயம் இவற்றை செய்யுங்கள்!

sangika

கட்டாயம் இதை படிங்க! அடிக்கடி முகம் கழுவும் நபரா நீங்கள்?

nathan