அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

விளக்கெண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்கும், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கின்றன…

விளக்கெண்ணெய் என்றால் எல்லோருக்கும் எளிதாக புரியும். முத்துகொட்டையிலிருந்து எடுக்கப்படும் விளக்கெண்ணெய் பாதுகாப்பானது. பாரம்பரியமாகவே கைவைத்தியம், சித்தவைத்தியம், ஆயுர்வேதம் போன்றவற்றில் விளக்கெண்ணெயும் பயன்படுத்தப்படுகிறது. கண் எரிச்சலை போக்க விளக்கெண்ணெயை எகிப்தியர்கள் பயன்படுத்தி வந்தார்கள். முகத்துக்கு இதன் மேற்பூச்சு பயன்படுத்தும் போது உண்டாகும் அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.

சருமத்தை ஈரப்பதமாக்கலாம்
சருமம் எப்போதும் ஈரப்பதமாக இருக்க வேண்டும். இல்லையெனில் வறட்சியாகி வெடிப்பை உண்டாக்கும். சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க போதுமான தண்ணீர் குடிப்பது அவசியம். அதனோடு பராமரிப்பும் தேவை. சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் விளக்கெண்ணெய் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றாலும் மற்ற தாவர எண்ணெயை போலவே விளக்கெண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்கும் என்றும் சான்றுகள் சொல்கிறது.

ertyuhi
​முகப்பருவை தடுக்கலாம்

முகப்பருக்கள் பெரும்பாலும் எண்ணெய்பசை சருமத்தால் வருகின்றன என்றாலும் பராமரிப்பு சரியில்லாத நிலையிலும் இவை வரலாம். முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்தால் முகப்பருவை தடுக்கலாம். விளக்கெண்ணெய் தயாரிக்க பயன்படுத்தும் முத்துகொட்டை விதைகள் புரோட்டின் சாற்றில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கின்றன.

​பூஞ்சை தொற்றுக்கு தீர்வு

முகத்தில் சிவப்பு தடிப்பு, அரிப்பு போன்றவை சருமத்தை பாதிப்புக்குள்ளாக்கும். அது தீவிரமாகாமல் ஆரம்பகட்டத்தி சிகிச்சை மேற்கொள்ளலாம். பூஞ்சை தொற்று விளக்கெண்ணெய் சரிசெய்யகூடும். கேண்டிடா வளர்ச்சியை விளக்கெண்ணெய் தடுக்க கூடும். இந்த பூஞ்சை வாய் வழி தொற்று, ஆணி பூஞ்சை. கால், டயபர் சொறி போன்றவற்றை உண்டாக்கும். முகத்தில் உண்டாகும் சிவப்பு தடிப்பையும் சரி செய்யகூடும்.

465576
சரும அழற்சியை போக்கும்

விளக்கெண்ணெய் எலிகள் மீது கொண்ட ஆய்வில் அதில் உள்ள ரிகினோலிக் அமிலத்தின் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் எலிகளின் வீக்கத்தை தடுக்க உதவியது. இந்த ஆய்வு மற்ற கினிப் பன்றிகள் மீதும் செய்யப்பட்டது.

ரிகினோலிக் அமிலம் கொண்ட இந்த ஜெல்கள் வீக்கத்தை குறைத்து வலி நிவாரணத்துக்கு உதவக்கூடும். எனினும் விளக்கெண்ணெய் நன்மைகளை மேலும் உறுதியாக அறிய மனிதர்கள் மீதான ஆய்வுகளும் தேவை.

வெயிலுடன் தொடர்பு கொண்டுள்ள சரும எரிச்சலை அகற்றும்

விளக்கெண்ணெயின் ஈரப்பதமூட்டும் பண்புகள் வெயிலுடன் தொடர்பு கொண்டுள்ள சரும எரிச்சலை போக்க செய்யலாம். இது வலியையும் ஆற்ற உதவும் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. விளக்கெண்ணெய் அழற்சி எதிர்ப்பு தான் இந்த பண்புகளுக்கு காராணம் என்று சொல்லப்படுகிறது.

விளக்கெண்ணெய் அடர்த்தியாக இருப்பதால் அது சருமத்தில் சீராக பயன்படுத்துவதில் பலரும் தயங்குகிறோம். ஆனால் இதை சரியான முறையில் எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

​விளக்கெண்ணெய் எப்படி பயன்படுத்துவது

விளக்கெண்ணெய் அடர்த்தியானது என்பதால் இதை அப்படியே நேரடியாக பயன்படுத்துவதில் தயக்கம் இருக்கலாம். ஆனால் விளக்கெண்ணெய் இரண்டு டீஸ்பூன் எடுத்து அதில் சுத்தமான பருத்தி உருண்டையை நனைத்து ஊறவைத்து சருமத்தில் முகம், கழுத்து பகுதியில் நேரடியாக துடைத்து விடவும்.

பிறகு வட்ட இயக்கங்களில் 3-5 நிமிடங்கள் எண்ணெயை மசாஜ் செய்யவும். பிறகு இலேசான ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவி எடுக்கவும். விளக்கெண்ணெய் அடர்த்தியை விரும்பாதவர்கள் மற்ற தாவர எண்ணெய்களுடன் இதை கலந்து பயன்படுத்தலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button