26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
உடல் பயிற்சி

கைகளுக்கு வலிமை தரும் வால் புஷ்-அப்ஸ் பயிற்சி

கைகளுக்கு வலிமை தரும் வால் புஷ்-அப்ஸ் பயிற்சிகைகளுக்கு வலிமை தர பல பயிற்சிகள் இருந்தாலும் ஒரு சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலன் தரக்கூடியவை. அவற்றுள் ஒன்று தான் இந்த வால் புஷ் அப்ஸ் பயிற்சி.

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நிலையான, சமதளமாக உள்ள சுவற்றுக்கு நேராக, சுவரும் – தரையும் இணையும் இடத்தில் இருந்து சற்றே தள்ளி நிற்கவும். முன்பக்கமாக சாய்ந்து, சுவற்றின் சமதளத்தில் உங்கள் உள்ளங்கைகளை வைக்கவும். இந்த செயலின் போது உங்கள் முழங்கைகள் இரண்டும் முறுக்கிக் கொள்ளமால் நேராக இருக்க வேண்டும்.

உடல் பகுதி முழுமையும் ஈடுபடும் வகையில், உங்களுடைய மூக்கு சுவரைத் தொடும் வரையிலும் உங்களுடைய முழங்கைகள் இரண்டையும் வளைக்கவும். மெதுவாக உங்களுடைய ஆரம்ப நிலைக்கு கொண்டு வந்து விட்டு, மீண்டும் ஒரு முறை முழுமையாக முயற்சி செய்யவும்.

இவ்வாறு இந்த பயிற்சியை 15 முதல் 20 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் கைகள் நல்ல வலிமை அடைவதுடன், கைகளில் உள்ள அதிகப்படியாக சதையும் குறையும்.
%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF

Related posts

தேவையற்ற கொழுப்புகள் கரைக்கும் ஸ்வஸ்திக் ஆசனம்

nathan

மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் உடற்பயிற்சி

nathan

பின்பக்கக் கொழுப்பை குறைக்கும் பட் பிளாஸ்டர் பயிற்சி

nathan

ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் கொஞ்சம் உயரமாக வளர உதவும் என்னவென்று பார்க்கலாம்.

nathan

லெக் ரோவிங் (Leg rowing)

nathan

உடலில் இருந்து கொழுப்பு எப்படி கரைந்து வெளியேறுகிறது என்று உங்களுக்கு தெரியுமா???

nathan

காலையில் தினமும் உடற்பயிற்சி செய்யுறவங்களா? இதை படியுங்கள்

nathan

உயர் ரத்த அழுத்தம், இருதய பக்க கோளாறுகள், தூக்கமின்மைக்கு பயனுள்ள பயிற்சி யோக நித்திரை

sangika

உடற்பயிற்சி

nathan