25.4 C
Chennai
Thursday, Dec 19, 2024
1 1523257499
ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தைக்கு தாய்ப்பால் பிடிக்காமல் போக அம்மா செய்யும் இந்த விஷயங்கள்தான் காரணம்…

அம்மா என்னதான் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டாலும் குழந்தைகளின் அழுகையைக் கட்டுப்படுத்துவதற்கு படாதபாடு படவேண்டி இருக்கும். அதில் மிக முக்கியமாக பால் குடிக்கும்போது குழந்தை அழும். அதற்குக் காரணம் ஏதோவென்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம்.

ஆனால் தாய்ப்பாலின் சுவை பிடிக்காமல் அழுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?… நாம் மட்டும் ருசியாக சாப்பிடுகிறோம் அல்லவா?… பிறகு குழந்தை எதிர்பார்க்காதா?… அதால சொல்லவும் முடியாது. நாம் தான் புரிந்துகொண்டு, தாய் மூலமாக குழந்தைக்குக் கொடுக்கும் உணவை ஆரோக்கியமானதாகவும் சுவையானதாகவும் மாற்ற வேண்டும்.

தாய்ப்பால் சுவை மாறுபாடு

ஒவ்வொரு முறையும் தாய்ப்பால் புகட்டும்போது, குழந்தை தாய்ப்பாலை குடிக்க மறுத்தால், அதற்கு தாய்பாலில் சுவை மாறுபாடு உள்ளது தான் காரணம். ஆம்! இது முற்றிலும் உண்மை. எப்போதாவது சில நேரத்தில் தாய்ப்பாலின் சுவையில் மாறுபாடு ஏற்படும். குறிப்பிட்ட காய்கறிகள், மன அழுத்தம், சுற்றுசூழல் மாசு போன்றவை இந்த சுவை மாறுபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். குழந்தையால் சுவையை உணர முடியாது என்று பலர் நினைக்கலாம். ஆனால் தாயின் கருவில் இருக்கும்போதே அவர்களுக்கு அதிகம் பழக்கமான சில உணவுகளின் சுவை அவர்களுக்கு தெரியும். ஆகவே தாய், தான் சாப்பிடும் உணவு பற்றியும், குழந்தைக்கு புகட்டும் தாய்பால் பற்றியும் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு தாய்பால் பிடிக்காத சூழ்நிலை ஏற்படும்போது, தாய்மார்கள் கவலை பட வேண்டாம். குறைந்த தாய் பால் சுரப்பு, மனச்சோர்வு, மார்பக முளை சிறிதாக இருப்பது, போன்ற காரணத்தால் குழந்தைகளுக்கு தாய்பால் பிடிக்காமல் போகலாம். மேலும் தாய்பாலின் சுவை மாறுபாட்டிற்கு கீழே உள்ள சில விஷயங்கள் காரணமாக இருக்கலாம். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தாய்ப்பாலை பிரீசரில் பதப்படுத்துதல்

வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் தாய்பாலை எடுத்து பிரீசரில் பதப்படுத்துவது இந்த காலத்தில் சகஜமாக உள்ளது. வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் குழந்தையை கவனித்து கொள்பவர்கள் பதப்படுத்திய பாலை எடுத்து குழந்தைக்கு கொடுப்பார்கள். தாய்பால் தான் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யும் இந்த செயல் நிச்சயமாக நல்ல செயல் தான். ஆனால் இப்படி செய்வதால் அதன் சுவை மற்றும் தோற்றம் எப்படி இருக்கும் ? நேரடியாக தாய்பாலை குடிப்பதற்கும், உறிஞ்சி எடுத்து வைக்கப்பட்ட தாய்பாலை குடிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை குழந்தைகள் உணர்ந்து கொள்ளலாம். ஆகவே பதப்படுத்திய பாலை குடிக்க குழந்தைகள் முரண்டு பிடிக்கும். பிரீசரில் பதப்படுத்தப்பட்ட பால் கெட்டுப்போகாமல் இருந்தாலும், அதன் சுவையில் ஒரு வித்தியாசம் இருக்கும். ஃபிரீசரில் வைக்கும் பாலை சுவையுடன் வைக்க அதனை பதப்படுத்தும் பாட்டில் சுத்தமானதாக இருக்க வேண்டும். மேலும் அதனை பிரீசரில் சேமித்து வைத்து மீண்டும் அதனை வெளியில் எடுத்து வைத்து குளிர்ச்சியை குறைக்கும் வரை கவனமாக கையாள வேண்டும். இதனை செய்வதால் தாய்பாலின் சுவை பாதுகாக்கப்படும்.

உணவில் அஸ்பரகஸ்

அஸ்பரகஸில் பச்சையம் மற்றும் வைட்டமின் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்க வல்லது. இருந்தாலும் அதில் பக்க விளைவுகள் உண்டு. தாய்மார்கள் அஸ்பரகசை உணவில் சேர்ப்பதால் அவர்களின் தாய்பாலில் கெட்ட வாசனை வீசக்கூடும். இந்த காயில் உள்ள ஆரோக்கிய சத்திற்காக தாய்மார்கள் இதனை உட்கொள்ள நினைக்கலாம். ஆனால் தாய்பால் குடிக்க குழந்தைகள் தடுமாறும்போது தாய்மார்கள் இதனை கவனத்தில் கொள்வது அவசியம். ஒருவேளை, தாய் கர்ப்பமாக இருக்கும்போதே போதுமான அளவு அஸ்பரகஸ் உணவை எடுத்துக் கொண்டால், குழந்தை அந்த வாசனைக்கு முன்பே பழகி விடும். எனவே தாய்பால் குடிக்கும் போது இதன் வாசனையை குழந்தை ஏற்றுக் கொள்ளும். இப்படி செய்தபிறகும் குழந்தை பால் குடிக்க மறுத்தால், நிச்சயம் தாய்மார்கள் அந்த காயை தவிர்ப்பது நல்லது.

மது அருந்துதல்

வேலை பளுவின் காரணமாக தாய்மார்கள் சிகரெட் அல்லது மதுவை தனது மன அழுத்தத்தை போக்க பயன்படுத்தலாம். அப்படி செய்தால், குழந்தைக்கு பால் புகட்ட வேண்டாம். தாய் சாப்பிடும் எந்த உணவும் தாய்பாலாக மாறும். ஆகவே, தாய் மது அருந்துவதால் தாய்பால் மூலமாக அது குழந்தையை போய் சேருகிறது. சில குழந்தைகள் மது கலந்த பாலை குடிக்க நேரிடும். சில நேரம் அதுவே குழந்தைக்கு விஷமாகவும் மாறலாம், அல்லது அதிக தூக்கத்தை தரலாம், அல்லது வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்கலாம். ஆகவே மது அருந்தும் தாய்மார்கள் கவனமாக இருத்தல் அவசியம். நிச்சயமாக மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள், அதற்கு முன்பே பாலை எடுத்த் பதப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.

காரமான உணவுகள்

பல தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கும் போது மிளகாய் அல்லது மசாலா உணவை சாப்பிட்டால், நெஞ்செரிச்சல் உண்டாகும். பிரசவத்திற்கு பின்பும், காரமான மசாலா உணவில் இருந்து சற்று ஒதுங்கி இருப்பது அவசியம். காரமான உணவில் உள்ள சூட்டை குழந்தையால் கையாள முடியாது , மேலும் மசாலா உணவுகள் தாய்பாலின் சுவையை மாற்றிவிடும். ஒருவேளை, தாயின் கருவில் இருக்கும்போதே, இத்தகைய கார உணவு குழந்தைக்கு விருப்பமாக இருந்தால் , தாய்பால் பருகும்போதும் இதனை ஏற்றுக் கொள்ள முடியும். மிளகாயில் உள்ள கேப்சசின் என்ற ஒரு தன்மை தான் இந்த காரத்திற்கு காரணம். தாய்பாலில் இந்த தன்மையை ஒரு துளி உணர்ந்தால் கூட குழந்தைகளுக்கு வயிற்று பிரச்சனை உண்டாகலாம் அல்லது குழந்தைகள் பால் குடிக்க விருப்பமில்லாமல் இருக்கலாம்.

மருந்துகள் எடுத்துக் கொள்வது

தாய், குறிப்பிட்ட மருத்துவ கோளாறுகளுக்காக சில மருந்துகளை எடுத்துக் கொள்ள நேரலாம். கர்ப்பகாலத்திலேயே இந்த பிரச்சனைகளுக்கான தீர்வைப் பற்றி யோசித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல், சில நேரங்களில் அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் வாசத்தால் கூட குழந்தைக்கு தாய்ப் பால் பிடிக்காமல் போகலாம். இப்படி நேரும் போது, தாய் மார்கள், மருத்துவ ஆலோசனையின் பேரில் வேறு மாற்று மருந்துகளை வாங்கி பயன்படுத்தலாம். ஒரு வேளை கான்செர் போன்ற அபாயகரமான நோயால் அவதிப்படும் தாய்மார்கள் தாய்பால் கொடுக்காமல் இருப்பது நல்லது. மருந்து பயன்பாட்டால் தரம் இழந்த தாய்பாலை பருகுவது குழந்தைகளுக்கு மேலும் பாதிப்பை தரும். நீரிழவு, ஹைபர் டென்ஷன் போன்ற பாதிப்புகளைக் கொண்டவர்கள் தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் பேரில், தாய் மார்கள் எந்த ஒரு மாற்று மருந்தையும் பயன்படுத்தி, குழந்தைக்கு தொடர்ந்து தாய்பால் கொடுக்கலாம்.

கடல் உணவுகள்

மீன் போன்ற கடல் உணவுகளில் பல நன்மைகள் உண்டு. ஆனால் கர்ப்பகாலத்தில் இவற்றை எடுத்துக் கொள்ள எப்படி சில கட்டுப்பாடுகள் உள்ளதோ, அதே போல் தாய் பால் கொடுக்கும் தாய் மார்களும் சில கட்டுப்பாடுகளைக் கொள்ள வேண்டும். சுற்றுசூழல் மாசு, பருவநிலை மாறுபாடு, மீன் பிடிக்கும் முறை போன்றவற்றின் காரணமாக இவற்றை தவிர்ப்பது நல்லது. தண்ணீரில் மிதக்கும் சில பிளாஸ்டிக் பொருட்கள் சில நேரம் மீனுக்கு உணவாகின்றன. மீனின் குடலில் சில நேரங்களில் சில பிளாஸ்டிக் கழிவுகளை நாம் கண்டிருக்கலாம். ஆகவே சில நச்சுப் பொருட்கள் மீனுக்குள் இருக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. தாய்மார்கள் , குறைந்த அளவிலான பாதரச நச்சுத்தன்மையுள்ள மீன்களை தேர்வு செய்ய வேண்டும், மேலும் அசுத்தங்கள் இல்லாத மீனை வாங்க வேண்டும். அடிக்கடி மீன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையேல் மீனில் உள்ள நச்சுப்பொருட்கள் தாய்பாலில் கலந்து குழந்தைக்கு அசௌகரியத்தை உண்டாக்கலாம்.

தண்ணீர்

அரசால் கொடுக்கப்படும் குடிநீரில் பல பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் , ஒரு வகையில் அந்த நீர் சற்று அசுத்தமாகவே உள்ளது. இந்த அசுத்தமான குடிநீரை பருகுவதால் பல உடல் உபாதைகள் எல்லா தரப்பு மக்களுக்கும் உண்டாகிறது. ஆகவே வடிகட்டிய குடிநீரை தாய்மார்கள் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் நல்ல தண்ணீரை குடிப்பது அவசியம். சமைக்க, குடிக்க, குளிக்க என்று எல்லாவற்றிற்கும் தண்ணீர் மிகவும் அவசியம். அப்படி இருக்கும்போது, மருந்து, உலோகம் போன்றவை கலந்த அசுத்தமான நீரை குடிப்பதால், தாய், தன் குழந்தைக்கு அசுத்தமான பாலை கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. தொடர்ந்து அசுத்தமான நீரை பருகுவதால் தாயின் திசுக்களில் இந்த நச்சுகள் படிந்து விடும். இதனால காலபோக்கில் குழந்தைகள் பால் குடிப்பதை பிடிக்காமல் நிறுத்தி விடலாம் அசுத்தமான நீர், பாலின் சுவையை மட்டும் குறைப்பது இல்லாமல் குழந்தையின் பிற்கால வளர்ச்சியை பாதிக்கிறது.

உறுப்பு இறைச்சி

கர்ப்பகாலத்தில் ஈரல், குடல் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வர். இதே போல் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சிலர் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். இத்தகைய உறுப்பு இறைச்சிகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் அவற்றில் இருக்கும் நச்சுகள் தாய்பாலில் கலந்து விடும் வாய்ப்புகள் உண்டு. இறைச்சியை வாங்கும் இடம் மிகவும் முக்கியம். மேலும் தாய்மார்கள் குறைந்த அளவு இறைச்சியை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த விலங்குகளுக்கு வளர்ச்சிக்கான ஹார்மோன் மருந்து, அண்டிபயோடிக் போன்றவை பயன்படுத்தி இருந்தால், அதில் இருக்கும் நச்சுகள் தாய்பாலில் கலந்து குழந்தைக்கு தாய்பால் பிடிக்காமல் போகும். இந்த நச்சுகளின் சுவடுகள் தாய்ப்பாலில் படியலாம். தாய்மார்கள் இதனை உட்கொள்ளும் அளவை பொறுத்து இவை தாய்பாலில் சேர்ந்து கொண்டே இருக்கும். ஆகவே இத்தகைய விலங்கு உறுப்பு இறைச்சியை உட்கொள்ளும்போது , மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை கேட்டு நடப்பது அவசியம். தேவை ஏற்பட்டால் தாய்பாலை கூட பரிசோதிக்கலாம்.

பூண்டு

பூண்டு பலருக்கும் பிடிப்பது மற்றும் பிடிக்காமல் போவது , இரண்டுமே அதன் மணத்தால் மட்டுமே. பூண்டில் பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. சளி தொந்தரவை போக்குகிறது. உணவிற்கு மணத்தை அதிகப்படுத்துகிறது. ஆனால் அதே சமயம், தாய்பாலில் அதன் சுவையை மாற்றுவதும் இந்த பூண்டு தான். தாய்மார்கள் தங்கள் உணவில் அளவுக்கு அதிகமான பூண்டை சேர்த்துக் கொள்ளாமல் தவிர்க்க வேண்டும். குழந்தை கருவில் இருக்கும் போதே தாய் அதிகமான பூண்டை சாப்பிட்டிருந்தால் குழந்தைக்கு பூண்டு சேர்த்த உணவில் சுரக்கும் தாய்பால் ஏற்றுக் கொள்ளும். அப்படி ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் குழந்தைக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே தாய்மார்கள் அதிக அளவு பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். பூண்டு சேர்த்த உணவை சாப்பிடுவதற்கு முன் தாய்ப்பாலை எடுத்து சேமித்து வைப்பதன் மூலம் நல்ல தாய்பாலை குழந்தைக்கு கொடுக்க முடியும்.

புகை பிடித்தல்

புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். புகை பிடிப்பதால் தாய்மார்களின், பற்கள், சருமம், கூந்தல் போன்றவை பாதிப்படையும். அது மட்டுமல்ல, புகை பிடிப்பதால் குழந்தையும் பாதிப்படைகிறது. கர்ப்பகாலத்திலும் பெண்கள் புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. குறிப்பாக குழந்தை பிறப்பிற்கு பிறகு கண்டிப்பாக புகை பழக்கத்தை கைவிடுவது நல்லது. புகை பிடிக்கும் பழக்கம் உள்ள தாய்மார்கள் அவர்கள் குழந்தைக்கு நிகோடின், மற்றும் ரசாயன கலவை சேர்ந்த்த தாய்ப்பாலை புகட்டுகின்றனர். குழந்தைகளுக்கு தரமான தாய்பாலின் சுவை தெரியும். புகை பிடிப்பவர்கள் தாய் பால் கொடுப்பதால் குழந்தைக்கு நச்சுகள் புகட்டப்பட்டு அதன் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஆகவே உடனே அதனை தவிர்த்திடுங்கள்.

மன அழுத்தம்

தாய்மார்களுக்கு மன அழுத்தம் அதிகமாகும் போது தாய்பால் புளிக்கும். மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது, ஹார்மோன் மாற்றம் ஏற்படுகிறது. இந்த ஹார்மோன் மாற்றங்கள் தாய்பாலில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்குகிறது. இதனால் தாய்பாலின் சுவை மாறுபடுகிறது.

நாள் முழுதும் இருக்கும் வேலைக்கு இடையில் பெண்களுக்கு ஓய்வு மிகவும் முக்கியம். பல பொறுப்புகளுக்கு இடையே தவிக்கும் பெண்களுக்கு வீட்டில் உள்ள மற்றவர்கள் கட்டாயம் உதவ வேண்டும் குழந்தையை பார்த்துக் கொள்ள ஆள் வைத்துக் கொள்வது, நேரம் இருக்கும் போது ஸ்பா செல்வது, பிடித்த புத்தகங்கள் படிப்பது , ரிலாக்ஸ் செய்து கொள்ள காபி அல்லது டீ பருகுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு அவர்கள் மனநிலையை அமைதியாக வைத்துக் கொள்வது நல்லது. குழந்தைக்கு தேவை ஆரோக்கியமான தாய்பால், அதை விடுத்து மன அழுத்தம் நிறைந்த தாய்பாலை தருவது சரியல்ல.

பூச்சிக்கொல்லி

பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தாத ஆர்கானிக் உணவுகளை தாய்மார்கள் சாப்பிடலாம். பூச்சிக்கொல்லிகள் பல ஆண்டுகளாக உற்பத்தி செய்யப்பட்டு, பொது நுகர்வுக்காக பாதுகாப்பாக கருதப்பட்டாலும், காலம் மாறிவிட்டது. மனித ஆரோக்கியத்தின் குறைகளான , வளர்ச்சி தாமதங்கள், பிறப்பு குறைபாடுகள் மற்றும் பல்வேறு எதிர்மறை விளைவுகளுக்கு காரணம், வளர்ந்து வரும் தாவரங்களில் தெளிக்கப்பட்ட பல்வேறு இரசாயனங்கள் என்று கருதப்படுகிறது. க்ளைபோசெட் என்னும் ரசாயனம் நிச்சயமாக மனித உடல்நலத்தின் மீது நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இத்தகைய உணவுகளை தவிர்ப்பது கடினமாக இருக்கலாம், அல்லது தரமான உணவுகளின் விலை அதிகமாக இருக்கலாம். ஆனால் தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள் நிச்சயம் தரமான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். தாய் உண்ணும் உணவு தான் தாய்பாலாக மாறுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பிரெஷ் உணவுகள் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகிய எல்லாவற்றிலும் பூச்சிகொல்லிகள் கலக்கப்படுவதால், நாளடைவில் அவை உடலில் படிந்து தாய்பாலின் தரத்தை குறைக்கிறது.

கொழுப்பு

தாய்பாலை செரிமானம் செய்ய குழந்தைக்கு தேவையான ஒரு என்சைம் இந்த லைபெஸ் என்னும் கொழுப்பு நொதி ஆகும். இந்த கொழுப்பு நொதி தாய்பாலில் அதிகம் இருக்கும்போது, ஒரு வித புளிப்பு சுவை உண்டாகிறது. இது குழந்தைக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை, ஆனால் அந்த புளிப்பு சுவை குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை. தாயின் கொழுப்பு நொதி அளவு கட்டுபாட்டில் இல்லாமல் இருப்பதால், அதனை குழந்தைகள் எடுத்துக் கொள்ளும்போது ஒரு புளிப்பு சுவையுள்ள தாய்பாலை அவர்கள் பருக நேரிடுகிறது. இதற்கு மருத்துவர் ஆலோசனை மிகவும் முக்கியம். கணைய அழற்சி, கணையத்தில் கட்டி அல்லது வயிறு தொடர்பான கோளாறு இருப்பவர்களுக்கு இந்த கொழுப்பு நொதி அதிகரித்த அளவு இருக்கும். ஆகவே அதிகரித்த கொழுப்பு நொதி உள்ளவர்கள் அதற்கான காரணத்தை களைவதால் குழந்தைகள் பால் குடிக்க பிரச்சனை இருக்காது.

மேக்கப் பொருள்கள்

தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள் மேக்கப்பில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு மற்றும் தண்ணீர் பயன்பாட்டிலும் அதிக கவனம் வேண்டும். இதற்கு காரணம், இவற்றில் உள்ள உலோகக் கலவைகள் சருமம், கூந்தல் போன்ற உடல் திசுக்களில் நச்சுகளை ஏற்றி வைக்கலாம். சில மருந்துகளில் கூட உலோகக் கலவைகள் சேர்க்கப்படலாம். இதனால் தாய்ப்பால் பாதிப்படையலாம். ஈயம், பாதரசம், ரசாயன மூலகம், டையாக்சின்கள் போன்ற உலோகத்தில் இருந்து தாய்மார்கள் கவனமாக இருத்தல் அவசியம். ஒப்பனை பொருட்கள், பதப்படுத்தும் பொருட்கள், சிகரெட், பெயிண்ட் , போன்றவற்றில் பயன்படுத்தும் ரசாயனங்கள் உடல் ஆரோக்கியத்தை குறைக்கும். கன உலோகம் அதிகமாக இருக்கும் பொருட்களை தாய்மார்கள் பயன்படுத்துவதால் அவை தாய்பாலை சென்றடைகிறது.

மாசுபாடு

காற்று மாசு , தண்ணீர் மாசு, மண் மாசு என்று உலகமே மாசு மயமாக உள்ளது. நவீன தொழில் நுட்பம், பிளாஸ்டிக் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் பயன்பாடு போன்றவை இவற்றின் காரணங்கள் ஆகும். பருவநிலை மாறுபாடு, மனித மற்றும் விலங்கினங்களின் ஆரோக்கிய குறைபாடு, போன்றவை க்ரீன்ஹவுஸ் உமிழ்வால் ஏற்படும் பாதிப்பாகும். இந்த பாதிப்பு தாய்ப்பாலையும் மாசுபடுத்துகிறது. வேலை அல்லது வீட்டு சூழலை மரங்களை சுற்றி அமைப்பது சாத்தியமில்லை. ஆனால், காற்று வடிகட்டி, தண்ணீர் வடிகாட்டி போன்றவற்றை பயன்படுத்தி சுத்தமான சூழலை உருவாக்க முடியும். அதிகமான நெரிசலை தவிர்க்கலாம். இதன் மூலம் தாய்மார்கள் ஓரளவிற்கு அசுத்தங்களில் இருந்து தப்பிக்க முடியும். இத்தகைய மாசு, தாய்ப்பாலை பயனற்றதாக செய்கிறது. இதனால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் பிடிக்காமல் போகிறது.

Related posts

இதோ எளிய நிவாரணம்! உடலில் கொழுப்புகளை கரைக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

nathan

கருப்பையை எப்படி பாதுகாப்பது

nathan

வறட்டு இருமலை போக்கும் கைமருந்து..!!

nathan

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் -தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த 5 ராசி ஆண்களுக்கு சிறிய வயதிலேயே செல்வந்தராகும் அதிர்ஷ்டம் இருக்காம்…

nathan

முயன்று பாருங்கள்..சீரகத்தை கொதிக்கவைத்து குடிப்பதால் கிடைக்கும் அற்புத பயன்கள்!!

nathan

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?…

nathan

பெண்களுக்கு அவசியம் தேவை ஐந்து ஊட்டச்சத்துக்கள்

nathan

சிறந்த லட்சியங்களை அடைய குழந்தைகளுக்கு வழிகாட்டுங்கள்

nathan