அடிக்கடி டையபர்களை பயன்படுத்தும் குழந்தைகளிடம் அரிப்புகளை காண முடியும். இயற்கையான நிவாரணிகளைப் பயன்படுத்தி டையபர் அரிப்புக்கு சிகிச்சையாக அளிக்கலாம்.
குழந்தைகளுக்கு டையபர் பயன்படுத்துவதால் ஏற்படும் அரிப்பை தடுக்கும் இயற்கை வழிகள்
பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய டையபர்களை பயன்படுத்துவதை எளிதாக கருதுகிறார்கள். வெளியே செல்லும் போதும், குழந்தைகளை இரவில் தூங்க வைக்கும் போதும் அதிகளவு தண்ணீரை உறிஞ்சும் டையபர்கள் வசதியாக உள்ளன. ஆனால், இந்த நற்பலன்களுடன், சில பக்க விளைவுகளையும் பெற்றோர்களும் குழந்தைகளும் எதிர்கொள்கிறார்கள்.
மிகவும் அதிகளவில் தண்ணீரை உறிஞ்சும் டையபர்களை தங்களுடைய குழந்தைகளிடம் பயன்படுத்தும் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் மிகவும் சாதாரணமான ஆனால் அதிகளவில் இருக்கும் பிரச்னையாக டையபர் அரிப்பு உள்ளது. அடிக்கடி டையபர்களை பயன்படுத்தும் குழந்தைகளிடம் இந்த வகை அரிப்புகளை காண முடியும்.
இயற்கையான நிவாரணிகளைப் பயன்படுத்தி டையபர் அரிப்புகளை கவனிப்பது தான் சிறந்த சிகிச்சையாக இருக்கும். ஆரம்ப கட்டத்திலேயே இந்த அரிப்புகளை கவனித்தால் தான் பின்நாட்களில் தொற்றுகளும், எரிச்சலும் வருவதை தவிர்த்திட முடியும். சிறுநீர் மற்றும் மலம் ஆகியவை தொடர்ந்து டையபர்களில் படுவதால் சூழ்நிலை மிகவும் மோசமாகி விடும்.
டையபர் அரிப்புகளை தீர்க்கும் நிவாரண வழிகள் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிப்ஸ்களைப் பயன்படுத்தி எந்தவொரு அரிப்பு புண்களையும் சரி செய்யுங்கள் மற்றும் அரிப்புகள் வராமல் தடுக்கவும் செய்யுங்கள்.
இயற்கையான கிருமிநாசினியான தேங்காய் எண்ணெயில் உள்ள மூலப்பொருட்கள் டையபர் அரிப்புகளையும் சரி செய்து விடுகின்றன. ஊங்கள் குழந்தையின் கீழ் பகுதியில் மெலிதாக தேங்காய் எண்ணெயை தடவி விடுங்கள் மற்றும் கை, கால் மடங்கும் இடங்களிலும் மற்றும் பிளவுகளிலும் விரலை வைத்து இதமாக மசாஜ் செய்து விடுங்கள்.
மிகவும் அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்ட ஜெல் டையபர்களை பயன்படுத்தினால் அரிப்புகள் வரும். எனவே மென்மையான துணிகளை பயன்படுத்தி செய்யப்பட்ட டையபர்களை பயன்படுத்தி ஈரப்பதத்தை உறிஞ்சி எடுக்க முயற்சி செய்யுங்கள். இந்த துணி டையபர்கள் உங்கள் குழந்தைக்கு இதமூட்டி அழகிய சருமத்தை பாதுகாக்கின்றன.
டையபர் அரிப்பு உள்ள இடங்களில் ஆலிவ் எண்ணெய் தடவுவதன் மூலம் அந்த இடங்களை சரி செய்ய முடியும். ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துவதால் சருமத்தின் ஈரப்பதத்தையும் பாதுகாக்க முடியும். பாதிக்கப்பட்ட இடத்தை காய வைத்து விட்டு, அதன் பின்னர் ஆலிவ் எண்ணெயை தடவுங்கள். நீங்கள் தடவி விட்ட ஆலிவ் எண்ணெய் ஒரு அடுக்கு போல செயல்பட்டு, தண்ணீர்; சருமத்தை ஊடுருவாமல் பார்த்துக் கொள்ளும்.
உங்கள் குழந்தை சில மணி நேரங்கள் டையபர் இல்லாமல் இருக்கச் செய்யுங்கள். இதன் மூலம் சருமத்திற்கு காற்றுடன் நேரடியான தொடர்பு ஏற்படும். டையபர் அரிப்புகளை சரி செய்ய முயற்சிக்க வேண்டிய மிகச்சிறந்த இயற்கையான வழிமுறைகளில் இதுவும் சிறந்த வழிமுறையாகும். உங்கள் குழந்தையை காய வைக்கப்பட்ட பாயில் படுக்க வையுங்கள் மற்றும் அவர்கள் வசதியாக இருக்குமாறு உணரச் செய்யுங்கள். அப்பொழுது தனர் அவர்களுடைய சருமத்ததைச் சுற்றிலும் காற்று நன்றாக சென்று வரும்.