25.2 C
Chennai
Tuesday, Dec 17, 2024
pepper curry 28 1461830956
சைவம்

கிராமத்து மிளகு குழம்பு

கோடையில் அதிகம் வியர்ப்பதால், சிலருக்கு சளி பிடிக்கும். மேலும் வெயில் காலத்தில் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். எனவே இக்காலத்தில் உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டும் மிளகை குழம்பு செய்து மதிய வேளையில் சாதத்துடன் சாப்பிடுவது சிறந்த வழி.

இங்கு மிளகு குழம்பை எப்படி ஈஸியாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 10 பூண்டு – 10 புளி – 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்) உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு…

மல்லி – 3 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் மிளகு – 2 டேபிள் ஸ்பூன் பச்சரிசி – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து குறைவான தீயில் பொன்னறிமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதே வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 20-30 நிமிடம் குறைவான தீயில் நன்கு கொதிக்க விட வேண்டும். அடுத்து மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கினால், மிளகு குழம்பு ரெடி!!!

pepper curry 28 1461830956

Related posts

சுவை மிகுந்த கொண்டைக்கடலை புலாவ்

nathan

சைனீஸ் ஃபிரைட் ரைஸ்

nathan

கோவைக்காய் துவையல்

nathan

காரசாரமான கோவைக்காய் வறுவல் செய்வது எப்படி

nathan

அல்சரை சரிசெய்யும் மணத்தக்காளி கீரை கூட்டு

nathan

உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல்

nathan

சுவையான ரவா புட்டு செய்வது எப்படி?

nathan

கறிவேப்பிலை குழம்பு

nathan

கத்தரிக்காய் பச்சடி

nathan