download 2 1
ஆரோக்கிய உணவு

கால்சியம் அளவு சீராக சாக்லேட் பவுடர் சாப்பிட்டாலமா?

கால்சியம் குறைபாடு வருவது ஏன், அதைச் சரிகட்ட எந்த மாதிரியான உணவுகளைச் சாப்பிட வேண்டும்? என்னென்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றிப் பார்ப்போம்.

கால்சியம் குறைபாடு வைட்டமின் டி3 குறைபாட்டால்தான் பெரும்பாலும் உண்டாகிறது. உடலில் உள்ள கொழுப்பு, சூரிய ஒளியில் கரைந்து வைட்டமின் டி3ஆல் உறிஞ்சப்பட்டு கால்சியம் சத்தை உடலில் நிலைப்படுத்துகிறது. ஆனால், மாறிவரும் இன்றைய உலகில் செயற்கை ஒளியில் வேலை செய்வதாலும் நீண்ட நேரம் குளிர்சாதன அறையில் இருப்பதால் வியர்ப்பது குறைவதாலும் வைட்டமின் டி3 உடலில் உருவாவது குறைகிறது. இதுதான் கால்சியம் குறைபாட்டுக்கு முக்கியக் காரணமாகிறது. இன்றைய இளைஞர்களிடமும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடமும் இந்தக் குறைபாடு அதிகமாகக் காணப்படுகிறது.

download 2

மற்றபடி, உணவுப் பழக்கத்தில் முக்கியமான சில விஷயங்களைக் கையாள வேண்டும். கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் கேழ்வரகு, எள், மட்டன், ஈரல், சிறிய வகை மீன்கள் போன்றவற்றை உண்ண வேண்டும். அதுமட்டுமன்றி புரதச்சத்து, அமிலத்தன்மையுள்ள உணவுகள், பால் போன்றவற்றைக் கண்டிப்பாக ஏதாவது ஒருவகையில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை கால்சியத்தின் தேவை சீராகும் வரை அளவுடன் சாப்பிட வேண்டும்.

குழந்தைகளில் சிலர் பல காரணங்களால் பால் குடிக்க மறுப்பார்கள். அவர்களுக்குப் பாலின் சுவை தெரியாதவாறு அதில் சாக்லேட் பவுடர் கலந்து கொடுக்கலாம். இதன்மூலம் பாலைக் குடிப்பதுடன் சாக்லேட் பவுடர்களில் சேர்க்கப்பட்டுள்ள கோகோவில் கலந்திருக்கும் கால்சியமும் உடலுக்குள் சேரும். மற்றபடி குறைபாட்டைச் சீராக்க சாக்லேட் பவுடர் மட்டுமே உதவாது.

டீன்-ஏஜ் வயதினரை அதிகம் பாதிக்கும் இந்தப் பிரச்னைக்குச் செயற்கை ஒளியைத் தவிர்ப்பதுடன் சூரிய ஒளியில் இருக்க வேண்டியதும் அவசியம். இவற்றைப் பின்பற்றினாலே இந்தக் குறைபாட்டைச் சமாளித்துவிடலாம்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! 6 பாதாம் மட்டும் தினமும் சாப்பிடுங்க..! அப்புறம் பாருங்க..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பக் காலத்தில் சாக்லேட் சாப்பிடுங்கள், கரு வளர்ச்சிக்கு உதவும்!!!

nathan

மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது முட்டை!

nathan

குடைமிளகாயில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இலங்கையில் ஐந்தே நிமிடத்தில் ரெடியாகும் ரொட்டி!

nathan

அவசியம் படிக்க..இவர்கள் மட்டும் கிரீன் டீ குடித்தால் எவ்வளவு ஆபத்து தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா தயிர் சாப்பிடுவதால் உடல் பருமனை குறைக்க முடியும்!

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆரோக்கியமான வழிகளில் சிக்கனை சாப்பிட சில டிப்ஸ்…

nathan

உங்களுக்கு தெரியுமா கெட்ட கொழுப்பை அடித்து விரட்டும் அதிசய சூப்…!

nathan