26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
ld4377
மருத்துவ குறிப்பு

காதல் எதிரிகளை கண்டறிந்து அகற்றுங்கள்!

நல்வாழ்வுக்கு 4 படிகள்

காதல் எதிரிகள் என்பவை உங்கள் திருமண உறவுக்கு சொந்தமானவை அல்ல. இருந்துவிட்டுப் போகட்டும் என்று எப்போதாவது அனுமதித்தால், அவை தாம் ஏற்படுத்தும் அழிவைப் பற்றி இரக்கம் காட்டுவதில்லை. வெறுப்பு, அவமரியாதையாக தீர்மானித்தல், எரிச்சலூட்டும் பழக்கங்கள், சுயநலத்துக்காக கட்டாயப்படுத்துதல், யதேச்சதிகார நடத்தைகள், நேர்மையின்மை போன்ற ஏதேனும் ஒன்றை நீங்கள் வைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொள்ளும் போது, அவை ஒவ்வொன்றும் நீங்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்டு இருக்கும் காதலை சிதைத்து விடுகின்றன.

காதல் எதிரிகள் முழுவேகத்தில் திருமண பந்தத்துக்குள் நுழைவதில்லை. எந்தத் தீங்கும் செய்யாத ஒன்றைப் போல உள்ளே காலடி எடுத்து வைக்கிறது. யாருமே கவனிக்காத இந்த ஊடுருவலின் தொடக்கம் மோசமாக வளர்ந்து, அழிவைத் தரும் பழக்கமாகி திருமண பந்தத்தை முற்றிலும் முறித்து விடுகிறது. காதல் எதிரிகள் காலூன்ற அனுமதித்தால், அவை அதிகமாக வளர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதோடு, தனது கோர முகத்தைக் காட்டாமலே இருந்து கொள்ளும்.

அவற்றோடு கொஞ்சம் வாழ்ந்தாலும், அவை இரக்கமே இல்லாமல் திருமண பந்தத்தை அழித்து விடும். உங்கள் திருமண பந்தத்துக்குள் மூக்கை நுழைத்துள்ள இந்த எதிரிகளை அடையாளம் கண்டு அழிக்கும் வழிகளில் 4 நிலைகள் இருக்கின்றன. இவற்றை நடைமுறைப்படுத்தி, இந்த முயற்சிகள் பலன் தருவதை உணர்ந்து கொண்டால், உடனடியாகச் செயல்படுத்தி, பிரச்னைகள் மீண்டும் தலை தூக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், அவை மீண்டும் வருவதற்கு வாய்ப்பு தராதீர்கள். காதல் எதிரிகள் ஒருமுறை நீக்கப்பட்டுவிட்டால், நீங்கள் சமாதானமாகி விடுவீர்கள். உறவுமுறை மேம்பட்டு, இருவரும் அன்புடன் இருக்க இயலும்.

முதல் படி

காதல் எதிரிகளை கண்டறிதல்: யுத்தத்துக்குப் போவதற்கு முன் எதிரி யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். காதல் எதிரிகளோடு மோதும் போது அவை எவ்வாறு தங்களை அழைத்துக் கொள்கின்றன என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். காதல் எதிரிகள் எல்லாமே ஒன்றுக்கு ஒன்று சளைக்காத அரக்கர்கள் போன்றவை. இவற்றில் எது உங்கள் திருமண பந்தத்தை தீவிரமாக அச்சுறுத்துகிறது? எத்தகைய நடத்தை இதில் உள்ளடங்கியிருக்கிறது? இவற்றைக் கண்டறிய வேண்டும்.

எந்த ஒரு விஷயம் ஒருவருக்கொருவர் காயப்படுத்திக் கொள்ள காரணமாக இருக்கிறது என்பதை தம்பதியர் வெளியே கூறுவதில்லை, அவை உணர்வதுமில்லை. நாம் நினைத்துக்கூட பார்த்திராத காதல் எதிரிகள் இரண்டாவது இயல்பான பழக்கங்களாக உருவெடுத்து நம் செயல்பாடுகளில் கலந்துவிடுவதை நாம் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. இப்படி ஒரு நிலையிருந்தால், அதை உணர்ந்து உங்கள் இருவருக்கும் எது வலியைத் தருகிறது என்பதை ஒருவருக்கு ஒருவர் புரிய வைத்துக் கொள்ளுங்கள். இதனால் காதல் எதிரிகளின் அடையாளம் தெரிந்து விடும்.

உங்கள் உறவுமுறையில் காதல் வங்கி தேய்வதற்கு காரணமான எதிரிகளை அடையாளம் காணும் திறமை பெற விரும்பினால், உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களை எடுத்து வரிசையாக எழுதி ஒரு பட்டியலை உருவாக்குங்கள். இந்தப் பட்டியலை ஒருவருக்கு ஒருவர் மாற்றி வைத்துக் கொண்டு, அதை முழுவதுமாகப் படித்துப் பார்த்து, அவருக்குப் பிடிக்காத விஷயம் எது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொருவரின் கேள்விகளையும் நீங்கள் படிக்கும்போது, உங்கள் துணைவரின் பாதுகாப்பை மனதில் வைத்து கவனமாக கேள்விகளுக்கான பதில்களை நீங்களும் துணைவரும் நிறைவு செய்ய வேண்டும். உங்கள் கேள்விகள் அனைத்தும் எந்த இடத்தில் பிரச்னையிருக்கிறது. எந்த இடத்தில் உங்களுக்குப் பாதுகாப்பு தேவை, எந்த விஷயத்தில் முன்னேற்றம் தேவை என்பதை உணர்த்துவதாக இருக்க வேண்டும்.உங்கள் துணைவர் வெளிப்படுத்தியிருக்கிற விஷயங்களில் நீங்கள் இதுவரை தவறுகள் இழைத்து வந்த விவரங்களைக் குறிப்பிட்டு இருக்கலாம்.

அவற்றை அவர் சுட்டிக் காட்டியிருந்தால் என்ன காரணத்தினால் இதைச் செய்ய நேர்ந்தது என்பதை ஒளிவு மறைவில்லாமல் தெளிவுபடுத்துங்கள். பிடிக்காத விஷயத்தை நிறுத்திக் கொள்ள மாற்று வழியை கூறுமாறு அவரிடம் ஆலோசனை கேளுங்கள். இருவரும் அந்த ஆலோசனைப்படி ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டால், ஒருவரை ஒருவர் பாதுகாப்பது சம்பந்தமாக சிறப்பான பணியை மேற்கொள்ள இயலும்.

இரண்டாவது படி

காதல் எதிரிகளை தரம் பிரித்தல்: திருமணங்களில் உள்ள உறவுமுறைகளை 6 விதமான காதல் எதிரிகள் அழித்து விடுகின்றன. பெரும்பாலான திருமணங்களில் இரண்டோ மூன்றோதான் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்குகின்றன. ஆகவே, எது மிக மோசமான விளைவை உண்டாக்குகிறதோ, அதன் மீது கவனம் செலுத்த வேண்டும். அந்த ஒன்றை நீக்கும் முயற்சியில் நீங்கள் ஈடுபட்டாலே போதும், அடுத்த எதிரிகள் அஞ்ச ஆரம்பிக்கும்.

ஒன்று அல்லது இரண்டின் மீது மட்டும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தினால் திருமண பந்தத்துக்குத் தடையாக இருக்கிற எதிரிகளின் மீது நீங்கள் வெற்றிகரமாக செயல்பட முடியும். ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் ஜெயித்து விடலாம் எனப் போராடினால் ஜெயிப்பது கடினம்தான்.எந்த காதல் எதிரியை முதலில் கையாள்வது எனத் தேர்வு செய்வதற்கு உதவியாக, உங்களை எது அதிகமாக பாதிக்கிறது என்பதை நீங்கள் இருவரும் தெளிவாக பேசிக் கொண்டு, அதன் அடிப்படையில் அவற்றை தரம் பிரித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறே உங்கள் உறவை சீரழிக்கிற ஒவ்வொன்றையும் கடைசி வரை தரம் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது படி

காதல் எதிரிகளை அழிக்க இருவருமே ஒப்புக் கொள்ளுதல்: உங்கள் துணைவர் உங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன என்பதைப் புரிந்து கொள்வது சுலபம். அவரைபாதுகாப்பதற்காக உங்களை ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வதோ மிகக் கடினம். நீங்கள் ஒருவரை ஒருவர் பாதுகாப்பது என உறுதி செய்து கொண்டால், அந்த மாற்றம் மிகவும் அவசியம் என்பதை முழுமையாக நம்ப வேண்டும். நீங்கள் அடையாளம் கண்ட காதல் எதிரிகளை அழிக்க அர்ப்பணிப்போடு உங்களை ஒப்புக் கொடுத்து செயல்பட வேண்டும்.

முதலில் தனித்தனியாக காதல் எதிரிகள் எவை என்பதை எழுதிக் கொள்ளுங்கள். பிறகு அவற்றை ஒரே தாளில், ‘இவளுக்கு இருக்கும் காதல் எதிரி’, ‘இவனுக்கு இருக்கும் காதல் எதிரி’ என எடுத்து எழுதி, ‘இந்தக் காதல் எதிரி களை இந்த தேதியில் இருந்து விட்டுவிட உறுதி செய்கிறோம்’ எனக் கையெழுத்திட்டு வைத்துக் கொள்ளுங்கள். இந்த உறுதிமொழிப் பத்திரத்தை தினந்தோறும் பின்பற்ற வேண்டும்.ஒருவரை ஒருவர் பாதுகாப்பதை உறுதி செய்து கொள்வதற்கு நீங்கள் மேற்கொள்ளும் வழிகளைப் பற்றி குறித்துக் கொள்ள அதில் இடம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். நிச்சயம் இப்படி செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

நான்காவது படி

காதல் எதிரிகளை வெற்றி கொள்ளுதல்சிலர் தாங்கள் பின்பற்றி வரும் கெட்ட பழக்கங்களையும் நடத்தைகளையும் விட்டுவிட வேண்டும் என தீர்மானித்தாலே அவற்றை நிறுத்தி விடுகிறார்கள். வெறுப்பு காட்டுவதை தவிர்க்க வேண்டுமென நினைத்த உடனே அதை நிறுத்திவிட்டு சிலர் அன்பு காட்டத் தொடங்குவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதனால், காதல் எதிரியான வெறுப்பை அட்டவணையில் சேர்க்கும் அவசியம் இல்லாமல் போய் விடுகிறது. சிலர் நீண்ட நாள் பழக்கத்தையும் விட்டுவிட தீர்மானித்த உடனே விட்டு விடுகிறார்கள். சிலருக்கு அதை எவ்வாறு நீக்க வேண்டும் என்பதற்கான திட்டம் தேவைப்படுகிறது. பழைய பழக்கத்தை மாற்றுவதற்கு புதிய பழக்கத்தை உருவாக்க திட்டமிட வேண்டியிருக்கிறது.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட யாரேனும் ஒருவர் அவர்களை தாங்கிப் பிடிக்க வேண்டியிருக்கிறது. அவரது ஆலோசனைப்படி காயப்படுத்துவதை நிறுத்தி விடலாம்.திட்டம் தீட்டிய பிறகும் தொடர்ந்து உங்கள் துணைவரை நீங்கள் காயப்படுத்துவதைத் தொடர்ந்தால் கண்டிப்பாக உங்களுக்கு மனநல ஆலோசகர் தேவைப்படுவார். மேல்நாடுகளில் சர்ச் அல்லது வேறுவித கம்யூனிட்டி குரூப் அமைப்பினரால் உருவாக்கப்பட்ட குழுவினர் இத்தகைய திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுவதற்காக அதாவது, தம்பதியருக்கு உதவிட, ஆலோசனைகளைத் தருகிறார்கள்.

தம்பதியரை சீரழிக்கும் காதல் எதிரிகளை அழிப்பதற்கான முயற்சியில் ஆலோசனைகள் தருவதோடு, அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்களா என்பதையும் அவ்வப்போது பரிசோதித்துப் பார்க்கிறார்கள். அதே போன்ற நிலையை நீங்களும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். திருமண பந்தத்தை வேரறுக்கும் பழக்கங்களிலிருந்து உங்களை மீட்கும் திறன் பெற்ற ஆலோசகரைத் தேர்வு செய்வது உத்தமமானது. அவர் பிரச்னைகளை உடனடியாகத் தீர்க்கக் கூடியவராகவும், நல்ல ஆலோசனைகளைத் தயங்காமல் கூறுபவராகவும் இருக்க வேண்டும். அத்தகைய திறன் அவருக்கு இல்லாத பட்சத்தில் வேறு யாரையேனும் அந்தப் பணிக்கு நியமித்துக் கொள்ளலாம்.

காதல் எதிரிகள் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்குவதால் அவற்றை அழிப்பதற்கு முன்னுரிமை தந்து, அவை உங்கள் திருமண பந்தத்தில் எந்த வடிவிலும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் உறவு முறை சிறப்பாக இருக்க, காதல் எதிரிகளின் வேர்களை அறிந்து கொள்ள வேண்டும். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஏற்ற சமாதான வாழ்க்கை முறையைப் பின்பற்றி, வெறுப்பை உண்டாக்கும் பழக்கங்களையும் யதேச்சதிகார போக்கையும் நீக்கி விடுங்கள்.ld4377

Related posts

பற்களை துலக்குவதில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகள்!!!

nathan

நோயின் அறிகுறியை வெளிப்படுத்தும் தலைவலி

nathan

ஆறாத புண்ணை குணப்படுத்தும் செவ்வரளி

nathan

பெண்களை தாக்கும் கருப்பை கட்டிக்கு சிகிச்சை முறைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா தொண்டை கட்டிச்சுன்னா உடனே சரியாகறதுக்கு என்ன செய்யணும்?

nathan

மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

சூப்பர் டிப்ஸ் குழந்தைப் பேறு தரும் அரசமரப் பழம்!!கர்ப்பப்பை, ஆண் உயிரணுக்களை வலுவாக்க அரச இலை சூரணம் !!

nathan

இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் நாவல்

nathan