எஸ்பிபியின் நினைவஞ்சலி கூட்டத்தின் போது பேசிய கங்கை அமரன், அவர் இப்போது இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என கண்ணீருடன் கூறியுள்ளார்.
பாடகர் எஸ்பிபி கடந்த 25ஆம் திகதி உயிரிழந்தார், அவரின் மறைவு கொடுத்த துக்கத்தில் இருந்து திரையுலகினர் இன்னும் மீளவில்லை.
இந்த நிலையில் எஸ்பிபி-யின் நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கங்கை அமரன் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவர் பேசிய வீடியோ பதிவு திரையிடப்பட்டது. அதில் அவர் பேசுகையில், எஸ்பிபி போவதற்கு 4 நாட்களுக்கு முன்பே எனக்கு ஆரம்பிச்சுடுச்சு. என்னமோ நடக்கப் போகுதே என்ற உணர்வு.
அவர் இறந்துவிட்டார் என்று சொன்னதிலிருந்து பிடித்தது தான். எஸ்பிபிக்கு நெருங்கிய நண்பன் என்பதை எல்லாம் கடந்து பிரம்மாண்டமான ஆள். எவ்வளவு சாதனை செய்த ஒரு ஆள். ரொம்ப எளிமையாக நடந்து கொள்ளக் கூடிய ஒரு மனிதர். அவர் இல்லை என்பதை என்னால் தாங்க முடியவில்லை.
நானே இவ்வளவு வருத்தப்படும் போது, அவரது குடும்பத்தினருக்கு எவ்வளவு வருத்தம் இருக்கும். நாங்கள் எப்படியாவது தேறி வந்துவிடுவோம். குடும்பத்தினர் தினமும் பதறாமல் இருங்கள்
ஒரு குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு கனவில் வருவார்கள் என்று சொல்வார்கள். அந்தக் கனவு வரும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதிலாவது அவனைப் பார்க்கலாமே என்று என கண்ணீருடன் கூறியுள்ளார்.