கொடைன் எனும் மூலக்கூறு கலப்புள்ள சில இருமல் மற்றும் வலிநிவாரண மருந்துகளை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் எடுத்துக் கொள்ள கூடாது என உணவு மற்றும் மறுத்து நிர்வாகம் (FDA) தனது சமீபத்திய அறிக்கை ஒன்றில் கூறியிருக்கிறது.
மேலும், இந்த மூலக்கூறு கலப்புள்ள மருந்துகளை குழந்தைகளுக்கு அளிக்க கூடாது என கடுமையாக கட்டுப்பாடுகளும், தடைகளும் கொண்டுவரவுள்ளது….
பெற்றோர் கவனத்திற்கு! பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் உடல்நலம் சரியில்லாத போது இருமல் அல்லது வலி நிவாரண மருந்து வாங்கும் பொது அந்த மருந்தில், கொடைன் (Codeine) அல்லது டிரமடால் (Tramadol) கலப்பு இருக்கிறதா என கவனமாக பார்க்க வேண்டும் என அறிவுறுத்தப் படுகின்றனர்.
எப்.டி.எ, ஏப்ரல் 20… நேற்று எப்.டி.எ தனது விதி வரம்புக்ளில் சில மாற்றங்கள் கொண்டுவந்துள்ளது. அதில் கொடைன் கலப்பு உள்ள மருந்துகளை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தருவதால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் மூலமாகஉயிருக்கு அபாயம் ஏற்படலாம். இது, குறிப்பாக உயிரை பறிக்க கூட நேரிடும் என எச்சரித்துள்ளனர்.
1969 – 2015! 1969 முதல் 2015 வரை இந்த இடைப்பட்ட காலத்தில் எப்.டி.எ கொடைன் கலப்பு கொண்ட மருந்துகளை உட்கொண்டு சீரியசான மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்ட குழந்தைகள் குறித்து ரிப்போர்ட் பெற்றிருக்கிறது.
24 மரணம்! 64 குழந்தைகளில், 24 பேர் உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலையும் எப்.டி.எ வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலான குழந்தைகள் 12 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் தான் கொடைன் கலப்புள்ள இருமல் மருந்துகளை 12 வயதுக்கு கீழான குழந்தைகளுக்கு தரவேண்டாம் என எப்.டி.எ வலியுறுத்தி இருக்கிறது.
டிரமடால் (Tramadol)! கொடைன் மட்டுமின்றி, வலிநிவாரண மருந்தான டிரமடாலும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எடுத்துக் கொள்ளக்கூடாது என எப்.டி.எ எச்சரித்துள்ளது. மேலும், தாய் பாலூட்டும் பெண்களும் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள கூடாது என எப்.டி.எ அறிவித்துள்ளது.
ஓபியாயிட்! கொடைன் மற்றும் டிரமடால் ஆகிய இரண்டுமே ஓபியாயிட் மருந்துகள் ஆகும். இதில் கொடைன் இருமல் மருந்திலும், டிரமடால் வலிநிவாரண மருந்துகளிலும் சேர்க்கப்படுகின்றன. 2013-லேயே இந்த மருந்துகள் குறித்து எப்.டி.எ எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
பக்கவிளைவுகள்! 12 வயதுக்கு கீழே அல்லது 18 வயது வயது வரை கொடைன் மூலக்கூறு கலப்புள்ள மருந்துகள் குழந்தைகள் உட்கொள்வதால், சீரியசான நுரையீரல் நோய்கள், கடுமையான மூச்சுத்திணறல் பிரச்சனைகள் உண்டாகலாம் என எப்.டி.எ மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தாய்மார்கள்! தாய் பால் ஊட்டும் தாய்மார்கள் கொடைன் மற்றும் டிரமடால் கலப்பு கொண்ட மருந்துகள் உட்கொள்ள வேண்டாம் என அறிவுரைக்கப்படுகின்றனர். ஏனெனில், இந்த மருந்தின் தாக்கம் குழந்தைகளிடம் பரவும். இதனால் அதிகப்படியான தூக்கம், மூச்சுத்திணறல், மரணம் ஏற்பட இது காரணியாக இருக்கிறது.
அல்ட்ரா ரேபிட் மெட்டபாலிசம்! யாரிடம் எல்லாம் அல்ட்ரா ரேபிட் மெட்டபாலிசம் தென்படுகிறதோ, அவர்கள் மத்தியில் இந்த மூலக்கூறுகள் சார்ந்த பக்கவிளைவுகள் அதிகமாக காண முடிகிறது. இவர்களது உடலில் இந்த மூலக்கூறுகள் மிக வேகமாக அபாய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.