தேவையான பொருட்கள்:
பெ.வெங்காயம் பொடியாய் நறுக்கியது – 1
சீரகம் – அரை டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
பச்சை பட்டாணி, உருளை, பீன்ஸ், கேரட் காய்கள் வேக வைத்தது – 3 கப்
தக்காளி பொடியாய் நறுக்கியது – 1 கப்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
கொ.மல்லி தழை நறுக்கியது – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
• எண்ணெய் ஒட்டாத கடாயில் முதலில் ஜீரகத்தினைப் போட்டு சிறிது வறுத்து, பிறகு வெங்காயத்தினை போட்டு வதக்கவும்.
• சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
• இத்துடன் இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்கி, பின் தக்காளி சேர்த்து வதக்கி வேக வைத்த காய்கறிச் சேர்க்கவும்.
• மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நீர் விட்டு 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.