24.5 C
Chennai
Tuesday, Dec 17, 2024
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

எடை இழப்பதற்கான‌ டாப் 5 காய்கறி மற்றும் பழங்கள் ஷேக்ஸ்

Green-Shakes-For-Weight-Lossசில அற்புதமான பானங்களை அருந்துவதன் மூலம் நீங்கள் கூடுதல் கலோரிகளை எரிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் சரியான இடத்திற்குதான் வந்து இருகிறீர்கள். பசுமையான காய்கறி மற்றும் பழங்கள் ஷேக்ஸ் நீங்கள் அருந்துவதன் மூலம் மிக விரைவில் எடை இழக்க உதவுவதோடு,  அதிக புத்துணார்ச்சியையும், இளமையான‌ தோற்றத்தையும் தருகிறது. 60% பச்சை காய்கறிகள் மற்றும் 40% பழங்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்த ஷேக்ஸ் நீங்கள் வழக்கமாக உட்கொள்ளும் காய்கறி மற்றும் பழங்களை விட இது ஒரு சிறந்த வழியாகும். இந்த ஷேக்ஸ் பழச்சாறுகளுக்கு நேர் எதிரானவை, மேலும் இந்த ஷேக்ஸ் இரும்புச் சத்தை அப்படியே வைத்து இருப்பதால் இது மிகவும் நம் உடம்பிற்கு நன்மை தருகிறது. தினமும் இந்த‌ காய்கறி மற்றும் பழங்கள் ஸ்மூத்தீஸ் சாப்பிடுவது தினமும் கீரைகள் சாப்பிட்ட பலனை தருவதோடு இது ஒரு நல்ல பழக்கம் என்றும் கூறலாம்.


ஷேக்ஸ் மற்றும் ஸ்மூத்தீஸ் தோற்றமானது பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருந்தாலும், இதன் சுவை மிக அருமையாக இருக்கும். சரியான விகிதத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை மிக்சியில் போட்டு அரைப்பதில்தான் இதன் சுவைக்கான தந்திரம் உள்ளது. பழங்களில் உள்ள‌ சுவையை இந்த ஸ்மூத்தீஸ் கவர்ந்து விடுவதோடு, காய்கறிகள் தேவையான இனிப்பை சமன் செய்து விடுகிறது.  எனவே வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் எளிதாக நமக்கு கிடைப்பதோடு, நம் உடம்பிற்கும் அதிகபட்ச நன்மைகளை கொடுக்கிறது. காய்கறி மற்றும் பழங்கள் ஷேக்ஸ் நம் உடலுக்கு ஆரோக்கியமான காரத்தன்மை கொடுப்பதோடு, ஆரோக்கியமாகவும் வைத்து இருக்க உதவுகிறது. இது சர்க்கரை அளவினை நம் உடலில் குறைத்து, மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் சாப்பிடுவதை அறவே தவிர்த்து எளிதில் எடை இழக்க‌ உதவுகிறது. இது உடலில் இருந்து நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை நீக்குவதோடு, உடலை சுத்தமாகவும் வைக்கிறது.
எடை இழக்க காய்கறி மற்றும் பழங்கள் ஷேக்ஸ்:
இதோ உங்களுக்கான‌ எடை இழப்பதற்கான‌ டாப் 5 காய்கறி மற்றும் பழங்கள் ஷேக்ஸ் தயாரிக்க எளிய வழிமுறைகள்:
1. செலரி மற்றும் ஆப்பிள் ஷேக்:
தேவையான பொருட்கள்:
நீர் – 1 கப்
ரோமைன் கீரை – 1 கட்டு, நன்கு நறுக்கியது
ஆர்கானிக் செலரி – 3 தண்டுகள்
முளைக்கீரை – ½ கட்டு
பேரிக்காய் – 1, முன்னுரிமை கரிம முறையில் தயாரானது
பச்சை ஆப்பிள் – 1, முன்னுரிமை கரிம முறையில் தயாரானது
ஒரு எலுமிச்சை பழ சாறு – புதிதாக தயாரித்தது
செய்முறை:
ரோமைன் கீரையை மிக்சியில் குறைந்த வேகத்தில் நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் முளைக்கீரை, செலரி, பேரிக்காய் மற்றும் ஆப்பிள் இவற்றை சேர்த்து அதிக வேகத்தில் அரைத்துக் கொள்ளவும்.
பின் இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து ஜில்லென்று பரிமாறவும்.
குறிப்புகள்:
அற்புதமான சுவைக்கு கொத்தமல்லி அல்லது பச்சை பூக்கோசு சேர்க்கலாம்.
2. வெள்ளரிக்காய் மற்றும் புதினா ஷேக்:
தேவையான பொருட்கள்:
முளைக்கீரை – 1 கட்டு, நன்கு நறுக்கியது
புதினா – 1 கொத்து
பச்சை பூக்கோசு – 1 கொத்து
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
வெள்ளரிக்காய் – 1, முன்னுரிமை கரிம முறையில் தயாரானது
செலரி தண்டுகள் – நன்கு நறுக்கியது 1 கப்
இஞ்சி – 1 அங்குல துண்டு, தோல் உரித்து, நன்கு நறுக்கியது
ஐஸ் கட்டிகள் – 4
செய்முறை:
ஐஸ் கட்டிகள் தவிர, மேற்கூறிய அனைத்தையும் மிக்சியில் போட‌வும்.
இதை அதிக வேகத்தில் ஒரு ஸ்மூத்தீஸ் பதத்திற்கு வரும் வரை அரைக்கவும்.
இதை ஒரு உயரமான கண்ணாடி டம்ளரில் மாற்றி, இதன் மேல் ஐஸ் கட்டிகள் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.
3. எல்லாம் கலந்த‌ காய்கறி மற்றும் பழங்கள் ஷேக்ஸ்:
நீர் – ¾ கப்
பச்சை திராட்சை – 1 கப்
அன்னாசி – ¼ கப்
முளைக்கீரை – 1 கப், நன்கு நறுக்கியது
ரோமைன் கீரை – 1 கப்
ஐஸ் கட்டிகள் – 1 கப்
செய்முறை:
ஐஸ் கட்டிகள் தவிர, மேற்கூறிய அனைத்தையும் மிக்சியில் போட‌வும்.
இதை அதிக வேகத்தில் ஒரு ஸ்மூத்தீஸ் பதத்திற்கு வரும் வரை அரைக்கவும்.
இதை சிறிது ஆறவிட்டு, இதன் மேல் ஐஸ் கட்டிகள் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.
4. சிட்ரஸ் காய்கறி மற்றும் பழங்கள் ஷேக்ஸ்:
தேவையான பொருட்கள்:
நீர் – 1 கப்
ப்ரோக்கோலி – 8 சிறுபூக்கள், நடுத்தர அளவில், நறுக்கியது
செலரி – 4 தண்டுகள், நடுத்தர அளவிலானது
சிறிய ஆரஞ்சுப் பழம் / கிச்சிலி பழம் – 1, பெரியது
இஞ்சி – ½ தேக்கரண்டி, நன்றாக துருவியது
செய்முறை:
அதிக வேகத்தில் சுமார் 30 விநாடிகள் கிச்சிலி பழம் மற்றும் செலரி தண்டை நீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
இதனுடன் ப்ரோக்கோலி மற்றும்
இஞ்சி சேர்த்து சுமார் 60 விநாடிகள் அதிவேகமாக அரைக்கவும்.
ஒரு கண்ணாடி கவளையில் இதை ஊற்றி, ஜில்லென்று பரிமாறவும்.
5. அன்னாசி முளைக்கீரை ஷேக்:
தேவையான பொருட்கள்:
அன்னாசி – 1 கப், நன்கு நறுக்கியது
முளைக்கீரை – 1 கப், நன்கு நறுக்கியது
புதிய கொத்தமல்லி – ¼ கப்
இஞ்சி – ½ தேக்கரண்டி, நன்றாக துருவியது
செய்முறை:
அனைத்து பொருட்களையும் மிக்சியில் சேர்க்கவும்.
சுமார் 1 நிமிடம் வரை இதை நன்கு அரைக்கவும்.
ஒரு உயரமான கண்ணாடி கவளையில் இதை ஊற்றி, ஜில்லென்று பரிமாறவும்.
குறிப்புகள்
1. இந்த அனைத்து ஷேக்ஸ் – ம் கண்டிப்பாக காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டும்  கொண்டு தயாரிக்க‌ வேண்டும்; எனவே இதில் பால் பொருட்கள், தயிர் மற்றும் பால் உட்பட அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
2. மறந்தும் கொழுப்புகள் அடங்கியுள்ள பொருட்களை இதனுடன் சேர்க்க கூடாது, தேங்காய் கூட சேர்க்க கூடாது, ஏனென்றால் இதில் கூட‌ கொழுப்பு உள்ளது. அதிகப்படியான‌ கொழுப்பு உடலை குண்டாக‌ தூண்டுவதற்கும் மற்றும் உடலின் கார்போஹைட்ரேட்டை உறிஞ்சுவதால் சில இடையூறும் ஏற்படலாம்.
ஒரே மாதிரியான  ஷேக்ஸ் – யை எப்போதும் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொரு நாளைக்கும் வெவ்வேறான ஷேக்ஸ் பயன்படுத்துவதால் சிறந்த பலன்களை பெறுலாம்.
காய்கறி மற்றும் பழங்கள் ஷேக்ஸ் மற்றும் ஸ்மூத்தீஸ் நிச்சயமாக நீங்கள் எடை இழக்க உதவுகிறது, ஆனால் நீங்கள் நீடித்த நன்மைகள் பெற உங்கள் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை கட்டாயம் மாற்ற வேண்டும். ஏன் நீங்கள் இப்போதிலிருந்தே காய்கறி மற்றும் பழங்கள் ஷேக்ஸ் மற்றும் ஒரு ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி சேர்த்து செய்வதன் மூலம்  எடை இழக்க தொடங்கலாமே?

Related posts

ஆரோக்கியத்தைத் தரும் கம்பு கூழ்! சுவைத்து மகிழுங்கள்

nathan

பார்லி தண்ணீர் தினமும் முடிந்தால் ஒரு முறையாவது குடியுங்கள்!

nathan

எலுமிச்சையை வேக வைத்த நீரை தினமும் காலையில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? சூப்பரா பலன் தரும்!!

nathan

கறிவேப்பிலைப் பொடி

nathan

மனநலத்தை காக்கும் ஆரோக்கியமான உணவுகள்

nathan

உங்களுக்கு தெரியுமா சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தாலே பல நோய்கள் தீர்ந்து விடும்!

nathan

சூப்பர் டிப்ஸ்! இந்த பழத்தை தினமும் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மையா?

nathan

கொய்யாவில் மருத்துவப் பொருட்கள் அடங்கியுள்ளது !!

nathan

சிறுநீரக கோளாறு, உடல் சூட்டை குறைக்கும் சுரைக்காய்

nathan