காய்கள் ஒவ்வொன்றும் பிரதிபலன் பாராமல் உடலுக்கு நன்மைகளை அளித்துக் கொண்டிருக்கின்றன. விதவிதமான நிறங்களில் காய்கறிகளை வாங்கி வாரம் முழுவதும் சமைத்து சாப்பிடுங்கள். எந்த நோய் உங்களை நெருங்குகிறது என பார்க்கலாம். அப்படியான பல சத்துக்களை வாரி தரும் ஒரு காய்தான் டர்னிப். அதனைப் பற்றி சில விஷயங்கள் உங்களுக்காக!!
டர்னிப் : டர்னிப் காய்கறி முள்ளங்கி வகையை சேர்ந்தது . இதன் சுவை முட்டைகோஸின் சுவையை ஒத்தது. அதுவும் ஊதா நிற டர்னிப் பச்சை நிற டர்னிப்பை விட மிகவும் சுவையுடையது. இது குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே விளையாமல், எல்லா காலத்திலும் கிடைப்பது நல்ல விஷயமாகும்.
சத்துக்கள் : இதில் அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளது. (இருந்தாலும் குறைவான கலோரி) அதிக நார்சத்து கொண்டது. அது தவிர புரோட்டின், கொழுப்பு ஆகியவைகளும் உள்ளது. விட்டமின் சி நிறைந்துள்ளது.மினரல் கால்சியம் , இரும்பு ஆகிய மினரல் சத்துக்களும் அதிகமாக உள்ளது. இது முதுமைக்கு எதிராக செயபடுகிறது. உடலுக்கு கேடு தரும் ஃப்ரீ ரேடிகள்ஸை விரட்டி அடிக்கிறது.
சர்க்கரை வியாதிக்கு : இதயத்தை பாதுகாக்கிறது. ரத்தத்திக்ல் குளுகோஸ் அள்வை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
ரத்த சோகைக்கு : இதில் அதிக அளவு விட்டமின் சி உள்ளதால் இரும்பு சத்தை உறிய உதவி புரிகிறது. இதனால் ரத்த சோகை உள்ளவர்கள் உண்டால் ரத்த விருத்தி உண்டாகும்.
சிறுநீரக கற்களை கரைக்க : ஊதா நிற டர்னிப்பை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சிறு நீரகத்தில் ஏற்பட்டுள்ள கற்களை கரையும். அதோடு இந்த காய் ரத்த அழுத்தத்தை சம நிலை படுத்துகிறது
குடல் புற்று நோயை தடுக்க : ஊதா நிற டர்னிப் குடல் புற்று நோயை வர விடாமல் தடுக்கும் என ஊட்டச் சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். பற்கள், எலும்பு, ஈறு பலத்தை அதிகப்படுத்துகிறது.
உடல் எடை குறைய : அதிக நார்சத்தும் குறைவான கலோரியும் இருப்பதால் உடல் எடை குறைய உதவி புரிகிறது. இதனை சாப்பிடும்போது நீண்ட நேரம் பசி ஏற்படாமல் , வயிறு நிறைவை தருகிறது. தினமும் சாப்பிடுவதால் உடல் எடை கணிசமாக ஒரு மாதத்தில் குறையும்.