26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
lose weight scale image
எடை குறைய

உடற்பருமனை குறைக்க Dr.க.சிவசுகந்தன் இன் நீங்கள் செய்யவேண்டியவை சில தகவல்கள்

நீங்கள் உங்கள் நிறையில் 10% ஐ குறைத்தால்.

உங்கள் குருதியமுக்கம்10 mm Hg இனால் குறையும்
உங்கள் கொலஸ்ட்ரோல் 10-15% வரை குறையும்
நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 50% இனால் குறையும்.
நீரிழிவு நோயாளர்களாயின் குருதியில் வெல்லத்தின் அளவு குறையும்
உடல் பருமனை குறைக்க எண்னென்ன வழிகளுண்டு?

உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தல்
உடற்பயிற்சி செய்தல்
நிறையை பேணுவதற்கு மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தல்.
மருந்துகளை பாவித்தல்
சத்திரசிகிச்சை செய்தல்
உணவு கட்டுப்பாட்டு முறைகள் எவை?

அதிக கொழுப்பு அடங்கிய உணவுகளை தவிருங்கள்
ஒவ்வொரு முறையும் சாப்பிடும் போது குறைந்தளவு உணவையே உள்ளெடுங்கள்
பிரதான சாப்பாட்டு வேளை களுக்கிடையில் நொறுக்கு தீனி உண்பதை தவிருங்கள்
தேவையான சத்துகளற்ற வெறும் சக்தி அடங்கிய உணவுகளை உள்ளெடுப்பதை தவிருங்கள் மென்பானங்கள், இனிப்புகள்)
நார்ச்சத்துள்ள உணவுகளை உள் ளெடுப்பதை கூட்டுங்கள்.
உணவை சாப்பிடாமலிருப்பது பின் அதிகளவு உணவை சாப்பிடுவது போன்றவற்றை தவிருங்கள்.
நான் எவ்வாறான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்?

குறைந்தது 30 நிமிடங்கள் செய்ய வேண்டும். ஒரு வாரத்துக்கு 5 முறையாவது செய்ய வேண்டும்.
இவ் உடற்பயிற்சிகள் அவரவர் வயதுக்கும் உடல்நிலைமைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.
சாதாரணமாக உடற்பயிற்சிக்கு எவ் வளவு சக்தி விரயமாகிறது?

இருத்தல், எழுதுதல், type செய்தல் 120-130 கிலோ கலோரி (kcal/hr)
உடை கழுவுதல், மெதுவாக நடத்தல், வீட்டுத்தோட்டம் செய்தல் 150-3ookcal/hr
சற்று வேகமாக நடத்தல், நடனமாடல் 60 300-400 kcal/hr
துள்ளுதல், நீந்துதல். tennis விளையாடுதல், சைக்கிள் ஓடுதல், மிக வேகமான நடை- 400-600
kcal/hr எவ்வாறு 1ookcal ஐ உள்ளெடுத்து அதை விரயமாக்குவது?

பின்வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 1oo kcal உள்ளெடுக்கப்படும்

3/4 கப்சோறு, 11/2 துண்டு பாண்.1கப் பால், 2 சிறிய வாழைப்பழம், 3 கரண்டி சீனி
பின்வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 1oo kcal விரயமாகும்.

25 நிமிடவேகநடை , 15நிமிடதுள்ளல், 15நிமிட சைக்கிளோட்டம், 15 நிமிடம் டெனிஸ் விளையாட்டு
உடல் நிறையை குறைக்க ஏதேனும் மருந்து களை பாவிக்கலாமா?

ஆம் பாவிக்கலாம்.

மேற்கூறிய நடவடிக்கைகளுக்கு உடல்நிறைகுறையா விடின் மட்டுமே பாவிக்கப்படும்.

சதையி இனால் சுரக்கப்படும் நொதியங்களின் தொழிற்பாட்டை எதிர்த்தல்
உடலின் இயக்கத்தை கூட்டும் மருந்துகள்
பசியை குறைக்கும் மருந்துகள்
இதற்கு சத்திரசிகிச்சை உண்டா?

ஆம்.

இடைச்சிறுகுடலையும் பின் சிறுகுடலையும் குறுக்காக இணைத்து சக்தியை அகத்துறிஞ் சும் மேற்பரப்பை குறைத்தல்
இரைப்பையின் அளவை சிறிதாக்கல் மூலம் உணவு சேமிக்கும் அளவை குறைத்தல் இதனால் கொஞ்சம் சாப்பிட்டவுடனே வயிறு நிரம்பிவிடும்.
lose weight scale image

Related posts

உடல் எடையால் கஷ்டப்படுகிறீர்களா? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!!

nathan

உங்களுக்கு தெரியுமா யோகர்ட்டை 7 நாட்களும் இப்படி சாப்பிடுங்க? விரும்பும் அளவிற்கு எடை கிடு கிடுனு குறையும்….!

nathan

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் .

nathan

உடல் எடையை எளிதாக குறைக்க ஒரு அற்புதமான வழி…..

sangika

நீங்கள் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதியா?…அப்ப இத படிங்க!

nathan

பட்டினி கிடந்தால் உடல் எடை குறையாது

nathan

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் ஆளி விதை

nathan

குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கும் டிரெட்மில் பயிற்சி

nathan

ஒரு மாதத்தில் தொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்

nathan