தோசை, சப்பாத்தி, பூரி, சாத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த முட்டை பீன்ஸ் பொரியல் அருமையாக இருக்கும். இன்று இந்த பொரியலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முட்டை பீன்ஸ் பொரியல் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
முட்டை – 3
நெய் – தேவையான அளவு
பீன்ஸ் – 250 கிராம்
பச்சைமிளகாய் – 4
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
வெங்காயம் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
பீன்ஸ், ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், கறிவேப்பிலை, ப.மிளகாயை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பீன்ஸ் போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பீன்ஸ் நன்றாக வெந்தும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி கைவிடாமல் கிளறி விடவும்.
முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான முட்டை பீன்ஸ் பொரியல் ரெடி.