இது இரைப்பை பிரச்னைகளுக்கு நல்ல மருந்து. பாகற்காயை ஜூஸ் ஆக்கிக் குடிப்பது குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகளைக் கொல்ல உதவும். ஒவ்வாமை, வீக்கம், கட்டிகளையும் பாகற்காய் போக்கும்.
இதன் விதைகள் இதய நோய்களிலிருந்து நம்மைக் காக்கும். தேவையற்ற கொழுப்புகளை எரித்து, இதய தமனி அடைப்பு ஏற்படுவதில் இருந்து காப்பாற்றும். புற்றுநோய், லூக்கீமியா, ரத்தசோகை போன்றவை வராமல் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.
இதன் சாற்றை எலுமிச்சைச் சாற்றில் கலந்து காலை வெறும் வயிற்றில் ஆறு மாத காலம் குடித்துவர, முகப்பரு பிரச்னை நீங்கும். தோல் பிரச்னைகளான சிரங்கு, அரிப்பு, சொரியாஸிஸ், படர்தாமரை, அலர்ஜி போன்றவற்றுக்குத் தீர்வு தரும்.
இதன் சாற்றை தயிரில் கலந்து தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால், முடி பளபளப்பாக மாறும். இதன் சாற்றுடன் சீரகத்தை அரைத்து பூசிவர, பொடுகுப் பிரச்னைகள் நீங்கும். இதன் சாற்றுடன் வாழைப்பழத்தை அரைத்து தலையில் தேய்த்தால், தலை அரிப்பு நீங்கும். பாகற்காய் சாற்றோடு கொஞ்சம் சர்க்கரை சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் பூசிவர, முடிகொட்டுவது குறையும்.
பாகற்காய் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
பாகற்காய் “ஜூஸ்” குடித்து வந்தால், செரிமான அமிலம் சுரப்பது மேம்படும்., எனவே பசியும் அதிகரிக்கும். கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தினம் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும். பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது.