25.1 C
Chennai
Tuesday, Dec 17, 2024
21 1508558493 2
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா தேனில் ஊறிய பூண்டு வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் இத்தனை பலன்களா!!

உடல் நலனுக்கு அஞ்சுவோர் இன்று அதிகம். எங்கே தன்னை நோய் பாதித்து விடுமோ என்கிற பயத்திலேயே பல்வேறு உணவுகளை தவிர்ப்பதும் பிடிக்கவில்லை என்றாலும் வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்வதும் தொடர்கிறது.

நாம் சாப்பிடும் உணவில் தான் உடல் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது. அதோ நம் உடலில் ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளை நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளிலிருந்தே தவிர்க்க முடியும். தினமும் காலையில் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மருந்து : ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்துகிற பொருட்களைக் கொண்டே மருத்துவம் பார்க்கப்பட்டது. அப்போதிருந்தே பூண்டு மற்றும் தேன் இரண்டையும் மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுத்தி வந்தனர். அதேபோல் எகிப்து, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இவையிரண்டும் சிறந்த மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது

தயாரிப்பு முறை : உங்களுக்கு தேவையான அளவு பூண்டு எடுத்து நன்றாக தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். கண்ணாடி பாட்டிலில் அதனைப் போட்டு பூண்டு மூழுகும் அளவுக்கு தேன் ஊற்ற வேண்டும். குறைந்தது ஒரு நாள் முழுவதுமாவது பூண்டு தேனில் ஊறவேண்டும். இதற்கு கெமிக்கல் கலப்படமில்லாத தூய தேன் வாங்குவது சிறந்தது.

சாப்பிடும் முறை : தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தாலே போதுமானது. ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து ஆறு முறை இதை அரை ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிடலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் தான் பலன் அதிகம் . உணவு உண்டபிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். எனவேதான் காலையில் எழுந்த தும் உட்கொள்ளகூறப்படுகிறது.

வைரஸ் காய்ச்சல் : பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் போன்றவற்றை தவிர்க்க முடியும். பூண்டு இன்ஸுலின் சுரப்பை அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி : பூண்டில் “அலிசின்” என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதில் பூண்டு முதன்மையானது. அதைத் தவிர அஜீரணம், வாயுத்தொல்லை, ரத்த அழுத்தம் போன்றவற்றையும் நீக்க பெரிதும் உதவுகிறது.

மாரடைப்பு : வயது ஏற ஏற, விரிவடையும் திறனை தமனிகள் இழக்கத் தொடங்குகிறது. இதனை குறைக்க பூண்டு முக்கியப் பங்காற்றுகிறது. மேலும், ஆக்சிஜன் இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் இதயத்தை காக்கும். பூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். அதே போல பூண்டில் உள்ள அஜோனின் இரத்த உறைதல் எதிர்ப்பி குணங்களால், இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும்.

அலர்ஜி : டையாலில் சல்பைடு மற்றும் தியாக்ரெமோனோன் ஆகியவை பூண்டில் இருப்பதால் அவை அலர்ஜியால் ஏற்படும் ஒவ்வாமைகளை தடுத்திடும். அலர்ஜியால் ஏற்படும் சுவாசப் பிரச்சனைகளைக் கூட பூண்டு எளிதாக தீர்க்கிறது.

செரிமானம் : நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது.

பல்வேறு பிரச்சனைகள் : இதில் உள்ள இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும் இதனால் வயிறு மந்தமாக இருப்பது, சோர்வு,பசியின்மை போன்ற பிரச்சனைகளை இது தீர்த்திடும். இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோக்ளைசீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் இது மிகுந்த பயனுள்ளது.

கொழுப்பு : தேன் மற்றும் பூண்டு இரண்டிலுமே கொழுப்பை கரைக்ககூடிய ஆற்றல் இருக்கிறது. இவற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அந்த என்சைம்கள் நம் உடலுக்குள்ளும் சென்று கொழுப்பை கரைத்திடும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாரளமாக இதனைச் சாப்பிடலாம்.

ரத்த சோகை : உடலில் போதுமான ரத்த அளவு இல்லாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே விளங்குகிறது. தேன் ரத்தம் விருத்தியடையச் செய்கிறது. தினமும் வெறும் வயிற்றில் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். அதோடு இது நரம்புத் தளர்ச்சியையும் சரி செய்கிறது.

இருமல் : சிலருக்கு லேசாக தட்பவெட்பம் மாறினாலே தொடர் இருமல் வந்திடும். அல்லது சிலருக்கு உடல் வறட்சியாலோ அதிக சூட்டினாலோ இருமல் வரும். அவர்கள் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைத்திடும். சளியினால் ஏற்ப்பட்ட இருமலாக இருந்தால் மருத்துவரிடம் காண்பிப்பது தான் நல்லது.

பாரம்பரியம் : பண்டைய காலம் முதலே பூண்டு வெறும் உணவாக இன்றி, மருத்துவ பொருளாக தான் பயன்படுத்தி வரப்படுகிறது. எகிப்தில் இருந்து நமது தமிழ் கலாச்சாரம் வரை பூண்டை ஓர் மருத்துவ பொருளாக தான் பயன்படுத்தியுள்ளனர். பண்டைய கிரேக்கத்தில் விளையாட்டு மற்றும் போர் வீரர்களின் உடற்திறனை மேம்படுத்து பூண்டை பயன்படுத்தி வந்துள்ளனர்.21 1508558493 2

Related posts

உங்களுக்கு தெரியுமா இதை மென்று தின்றால் ஆண்மை அதிகரிக்குமாம்?

nathan

ட்ரை ஃபுரூட்ஸ் மாம்பழ லஸ்ஸி

nathan

சத்துமாவு. ஆம்….பல தானியங்கள். பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும்…

nathan

உங்களுக்கு தெரியுமா மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த வெந்தயக் கீரை…!!

nathan

ஆண்களின் உடல் சக்தியை அதிகரிக்க உதவும் ஆறு வகையான தேநீர்!!!

nathan

இதயத்தில் கொழுப்பு அறவே சேராமல் இருக்க வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்ச‍ம் பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால்

nathan

இதோ மாதம் ஒருமுறை முள்ளங்கி ஜூஸைக் குடிங்க கிடைக்கும் நன்மைகள் !இத படிங்க!

nathan

காபியும் டீயும் உடலுக்கு நல்லதா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

nathan