26.5 C
Chennai
Thursday, Dec 19, 2024
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா தினமும் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பப்பாளியை அப்படியே சாப்பிட்டாலும் சரி அல்லது ஜூஸ் போட்டு குடித்தாலும் சரி, இதில் உள்ள நன்மைகளை முற்றிலும் பெறலாம். முக்கியமாக பப்பாளியை அன்றாடம் சாப்பிட்டு வந்தால், நல்ல பொலிவான முகத்தைப் பெறலாம். இங்கு பப்பாளியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்

பப்பாளியை சாப்பிட்டால், உடலின் ஈஸ்ட்ரோஜென்னானது தூண்டப்பட்டு, உடலின் வெப்பநிலை சீராக இருக்கும். இப்படி உடலின் வெப்பநிலை சீராக இருந்தால், மாதவிடாய் சுழற்சி சீராக நடைபெறும்.

செரிமானத்தை மேம்படுத்தும்

செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் பப்பாளியை நட்கொண்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கும்.

மலச்சிக்கலை தடுக்கும்

வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், மலச்சிக்கல் பிரச்சனைக்கு உள்ளாகக்கூடும். அப்படி நீங்கள் திடீரென்று மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டால், பப்பாளி சாப்பிடுங்கள். அதில் உள்ள நார்ச்சத்தினால் உடனே மலச்சிக்கல் குணமாகும்.

இதய பிரச்சனைகள்

பப்பாளியில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் இருப்பதால், இதனை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், இதயம் ஆரோக்கியமாக பிரச்சனையின்றி இருக்கும்.

புற்றுநோய்

தினமும் பப்பாளியை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள லைகோபைன் புற்றுநோய் செல்களை அழிக்கும். இதனால் கல்லீரர், மார்பகம் மற்றும் கணையம் போன்ற இடங்களில் வரும் புற்றுநோயைத் தடுக்கலாம்.

கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம்

பப்பாளியில் பாப்பைன் மற்றும் சைமோ பாப்பைன் இருப்பதால், இவை உடலில் உள்ள உட்காயங்களை குறைக்கும். இதனால் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

எடையை குறைக்கும்

பப்பாளியில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், இதனை அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

ஆய்வு ஒன்றில் பப்பாளியை தினமும் உட்கொண்டு வந்தால், அவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே பப்பாளியை சாப்பிட்டு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

பொலிவான சருமம்

தினமும் பப்பாளியை உட்கொண்டு வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிப்பதைக் காணலாம்.

Related posts

இந்த ஒரு விஷயத்தை கரெக்ட்டா செஞ்சுட்டு வந்தா 1/2 கிலோ வரை உடல் எடை குறைக்கலாம் தெரியுமா?

nathan

இதயநோய்கள் TOP 10 தவறுகள்!

nathan

‘செக்’ பண்ணி பாருங்க! உங்கள் ‘பிளட்’ குரூப்பை வைத்து…. நீங்கள் எப்படிப்பட்டவர்? ‘என்பதை’ கணிக்கலாம்…

nathan

இளநரையை போக்கும் உணவுமுறை

nathan

கட்டாயம் இதை படியுங்கள்,, வெந்தயம் தரும் நன்மைகள் என்ன?

nathan

பெண்களே இந்த ராசிக்காரர்களிடம் காதல் உறவில் இருக்கிறீர்களா?

nathan

உங்களுக்கு தெரியுமா 50க்கும் மேற்பட்ட நோய்களை விரட்டியடிக்கும் சின்ன வெங்காயம்

nathan

கை, விரல்களில் வலிகள் தீர செய்ய வேண்டிய பயிற்சிகள்

nathan

இந்த 5 ராசி ஆண்கள் பெண்களை கவர்வதில் மன்மதனாக இருப்பார்களாம்…

nathan