இன்றைய பரபரப்பான உலகத்தில் நாம் செய்யும் பல்வேறு வேலைகளுக்கு நேரம் என்பதே போதுமானதாக இருப்பதில்லை.
இந்த களேபரத்தில் நாம் சரியான உணவை, சரியான நேரத்தில் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை.
எதிலும் வேகத்தை எதிர்ப்பார்க்கும் நாம் உணவையும் வேகமாக எதிர்ப்பார்க்க ஆரம்பித்து விட்டோம்.
அப்படி தலைத்தூக்கியது தான் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம். ஆனால் அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றி நம்மில் பல பேர் இன்று உணர்ந்து கொண்டோம். அதற்கான மாற்றாக நமக்கு கிடைத்தது தான் ஓட்ஸ்.
ஓட்ஸ் என்பது உங்கள் உடல் நலத்தை மேம்படுத்தும் மிகச்சிறந்த முழு தானிய காலை உணவாக விளங்குகிறது.
இந்த தானியத்தில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது.
மேலும் உங்கள் உடல்நலத்திற்கு தேவையான சக்தி வாய்ந்த ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது.
ஓட்ஸ் உணவால் கிடைக்கும் உடல்நல பயன்களை ஊக்குவிக்க நட்ஸ், பழங்கள் அல்லது மசாலாக்களை அதில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்த்துக் கொள்ளாதீர்கள். மாறாக, பழங்கள் மற்றும் மசாலாக்களின் இயற்கையான நறுமண சுவைகள் அதன் சுவையை மேம்படுத்தும்.
ஓட்ஸில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகமாக உள்ளது. காலையில் உண்ணக்கூடிய மற்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில், இது நிலையான ஆற்றலை அளிக்கும் மூலமாக விளங்குகிறது.
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், உங்கள் உடல் அதை மெதுவாக செரிக்க செய்யும்.
இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையில் திடீர் உயர்வு இருக்காது.
ஓட்ஸ் போன்ற முழு தானியங்களை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால், டைப் 2 சர்க்கரை நோய் உண்டாவது குறையும் எனவும் அறிவியல் சார்ந்த ஆய்வுகள் கூறுகிறது.
அது மட்டும் அல்ல, மிதமான இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு சுருக்கியக்க மற்றும் உச்சிவிரிவு இரத்த கொதிப்பை குறைக்க ஓட்ஸ் உதவுகிறது என 2002 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறியுள்ளது.
இரத்த கொதிப்பை குறிப்பாக கட்டுப்படுத்த, ஓட்ஸ் தவிடு மற்றும் முழு தானிய ஓட்ஸ் உதவுகிறது.
கூடுதலாக, ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் இரத்த உறைக்கட்டி ஏற்படுவதை குறைக்கும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
முழு ஓட்ஸ் மற்றும் இதர முழு தானியங்களை தினமும் உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால், உங்கள் இரத்த அழுத்தம் கட்டுப்பட்டு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.