உடலில் இரத்தம் சுத்தமாக இல்லையெனில் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் போக்கு, மற்றும் வயிறு சார்ந்த கோளாறுகள், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாக நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
உங்கள் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது மிக கடினமானக் காரியம் எல்லாம் இல்லை. நீங்கள் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் உணவுகளை சரியான முறையில் சாப்பிட்டு வந்தாலே இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
சரி, இனி இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் பற்றியும். அதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் தெரிந்துக் கொள்ளலாம்…
பீட்ரூட்
பீட்ரூட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
செம்பருத்திப் பூ
செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரை
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழி முட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும்.
நாவல் பழம்
நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தியாகும்.
இஞ்சி
இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
தக்காளி
தக்காளியை தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால் வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
இலந்தைப் பழம்
இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டும் அல்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.
தயிர்
தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.
சீரகம்
கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப்பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும், இரத்த அழுத்தம் விரைவில் குறைந்துவிடும்.
அகத்திக் கீரை
அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாபிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.