26.6 C
Chennai
Saturday, Dec 21, 2024
31 1375260624 11 depression
மருத்துவ குறிப்பு

இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையே மாத விடாய் ஏற்படுகின்றது. ஆலோசனை வழங்கவும்.

கேள்வி எனது வயது 22 ஆகும். எனது உடற்பருமனானது சிறிது சிறிதாக அதிகரித்துச் செல்கின்றது. எனக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையே மாத விடாய் ஏற்படுகின்றது. இது தொடர்பாக ஆலோசனை வழங்கவும்.

பதில் உங்களைப் போன்ற இளம் பெண்களுக்கு உடற்பருமன் அதிகரித்தலானது இன்றைய கால கட்டத்தில் ஒருபெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. பிழையான உணவுப் பழக்க வழக்கங்களும் தேக அப்பியாசமற்ற வாழ்க்கை முறையுமே இதற்குக் காரணங்களாகும். உடற்பருமனானது அதிகரித்து மாதவிடாய் ஒழுங்கற்ற நிலை ஏற்படுவதற்குப்பிரதானமான காரணமாக அமைவது சூலகத்தில் சிறுகட்டிகள் ஏற்படுகின்ற நிலை (Poly cystic ovarian syndro me) என அழைக்கப்படுகின்றது. இந்நோய் உள்ள பெண்களுக்கு முகம் மற்றும் உடல் பகுதிகளில் ஆண்களைப் போன்று அதிக உரோம வளர்ச்சியும் ஏற்படலாம். இதேபோல நீரிழிவு ஏற்படுகின்ற சாத்தியக் கூறு மற்றும் அதிகளவு கொலஸ்திரோல் உடலில் சேருதல் என்பனவும் ஏற்பட வாய்ப்புண்டு. இதேபோன்று மணம் முடித்த பெண் களில் கர்ப்பம் தரித்தலும் தாமதமடைய நேரிடலாம்

உடற்பருமன் அதிகரிக்கும்போது மேலே குறிப்பிட்ட பலவிதமான தொற்றா நோய்களின் தாக்கம் அதிகரிக்கநேரிடுகிறது. உங்களுக்கு பல விதமான இரத்த தைரொயிட் போன்றஹோர்மோன் பரிசோதனைகள், வயிற்று ஸ்கான் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

எனவே, இன்று முதல் ஆரோக்கிய உணவுகளை உள்ளெடுத்து மாச்சத்து சீனி மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்து போதியளவு தேக அப்பியாசத்தை மேற்கொண்டு உங்கள் உடற்பருமனைக் குறைத்தல் அவசியமாகும். நீங்கள் காலம் தாழ்த்தாது வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது இன்றியமையாததாகும். உங்களின் பரிசோதனை முடிவுகளின்படி வைத்தியரானவர் தேவைப்பட்ட சிகிச்சை முறைகளை ஆரம்பிப்பார். இது பற்றிய மேலதிக விவரங்களை யாழ்.போதனா வைத்தியசாலை அகஞ்சுரக்கும் தொகுதியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

மருத்துவர் எம்.அரவிந்தன் -நீரிழிவு அகம்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர் (ஹோர்மோன்) யாழ்.போதனா வைத்தியசாலை,31 1375260624 11 depression

Related posts

அவசியம் படிக்க..இந்த ஆறு அறிகுறி இருந்தா பெண்கள் கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்…

nathan

பெண்களுக்கு செல்போன் தொந்தரவா?

nathan

கர்ப்ப காலத்தில் நீங்கள் எப்போது எல்லாம் மருத்துவரிடம் செல்ல வேண்டும் ?

nathan

தினமும் சிறிது துளசி இலைகளை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் பெறும் நன்மைகள்!

nathan

உங்கள் குழந்தைகள் கைசூப்புகின்றதா? உங்களுக்குதான் இந்த விஷயம்!

nathan

இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால், உடனடியாக உங்கள் சிறுநீரகத்தை பரிசோதிக்கவும்.

nathan

கர்ப்ப காலத்தில் ஆன்டி பயாடிக் மருந்துகளை சாப்பிடலாமா?

nathan

உங்களுக்கு தெரியுமா நெஞ்செரிச்சலுக்கு முக்கிய காரணம்

nathan

அதிக நேரம் கணினியில் வேலை செய்பவரா நீங்கள் ? : பிரச்சனைகளும் தீர்வுகளும்…!

nathan