நிறைய தம்பதியர்களுக்கு இரட்டைக் குழந்தை பிறக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் 1% தான் வாய்ப்புள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இருப்பினும் குறிப்பிட்ட சில வழிகள், இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்க உதவும்.
ஆனால் இந்த வழிகள் ஆய்வுகளில் நிரூபிக்காவிட்டாலும், ஒருசில தம்பதியர்கள் இந்த முறையைப் பின்பற்றி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர். இருந்தாலும், இரட்டைக் குழந்தையைப் பெற்றெடுக்க முயலும் முன் மருத்துவரை கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள். இதனால் அவர்களும் ஒருசில டிப்ஸ்களை வழங்குவார்கள்.
சரி, இப்போது இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவும் சில வழிகளைக் காண்போம்.
டிப்ஸ் #1
சில ஆய்வுகள் சரியான அளவில் ஃபோலிக் அமிலம் எடுத்து வந்தால், கருவளம் சிறப்பாக அமைந்து, ஒன்றிற்கு மேற்பட்ட கருமுட்டை வெளியிடப்படும். ஆனால் இதுக்குறித்து உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
டிப்ஸ் #2
இறுதி மாதவிடாயை நெருங்கும் பெண்கள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன. ஏனெனில் இறுதி மாதவிடாய் நெருங்கும் போது, கருப்பையில் இருந்து ஒன்றிற்கு மேற்பட்ட கருமுட்டைகள் வெளியிடப்படும். அதற்காக குழந்தைப் பெற்றெடுப்பதைத் தள்ளிப் போடாதீர்கள்.
டிப்ஸ் #3
பால் பொருட்கள், கேஸாவா, மாகா வேர் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதன் மூலம், இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகரிப்பதாக கூறுகின்றனர். இருப்பினும் அது உறுதியல்ல.
டிப்ஸ் #4
உங்களுக்கு ஏற்கனவே குழந்தை இருந்தால், அக்குழந்தைக்கு தாய்ப்பால் அதிகம் கொடுங்கள். இதனால் மறுமுறை கருத்தரிக்கும் போது இரட்டைக் குழந்தைப் பிறக்கும் வாய்ப்பு உள்ளதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
டிப்ஸ் #5
உயரமான பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதேப்போல் அதிகளவு உடல் எடையைக் கொண்ட பெண்களுக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புள்ளதாக மார்ச் 2005 இல் வெளியான மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் இதழில் ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
டிப்ஸ் #6
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரையை தொடர்ந்து 6 மாதங்களாக எடுத்து வருபவராயின், உடனே அதை நிறுத்துங்கள். இதனால் ஹார்மோன் அளவு அதிகரித்து, நிறைய கருமுட்டைகள் வெளியிடும் வாய்ப்பு அதிகரிக்கும்.
டிப்ஸ் #7
கருத்தரித்த பெண்ணின் பரம்பரையில் இரட்டைக் குழந்தைகள் ஏற்கனவே பிறந்திருந்தால், மரபணுக்கள் காரணமாக, இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். எனவே உங்கள் அம்மாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.