26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
20526706 478178239209810 106399870 n
மருத்துவ குறிப்பு

இப்படி ப்ரபோஸ் பண்ணா பிடிக்கும் – பெண்களின் ஆசைகளும், எதிர்பார்ப்புகளும்!

காதலை இப்படி தான் ப்ரபோஸ் செய்ய வேண்டும் என எந்த ஒரு விதிமுறையும் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயங்கள் கொண்டிருப்பார்கள்.
ஆனால், தி மோசட் சக்சஸ் ஃபார்முலா என ஒன்று இருக்கும் அல்லவா. பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்கும், பிடிக்காது. இப்படி ப்ரபோஸ் செய்தால் சக்சஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என சில விஷயங்கள் அறிந்துக் கொண்டால். பன்னு வாங்கமா, பிளாக் ஆகாமல் காதலில் வெற்றிக்கனி பறிக்கலாம்.
அந்த வகையில் பெண்கள் எப்படிப்பட்ட ப்ரபோஸ்களை எதிர்பார்க்கிறார்கள், எப்படி ப்ரபோஸ் செய்ய முயல்வார்கள் என்பது பற்றி இந்த தொகுப்பில் காணலாம்..
20526706 478178239209810 106399870 n
சினிமாட்டிக்!
சினிமாட்டிக் என்றவுடன் பி.ஜி.எம் ரீரெக்கார்டிங் அளவிற்கு யோசிக்க வேண்டாம். நார்மலாக இல்லாது, கொஞ்சம் சுவாரஸ்யமாக ப்ரோபோசல் இருந்தால் நிச்சயம் காதல் வர வாய்ப்புகள் இருக்கின்றன. சினிமாட்டிக் விஷயம் மட்டும் போதாது, அந்த பெண்ணிற்கு பிடிக்கும் விதத்திலும் கொஞ்சம் நடந்துக் கொள்ள வேண்டும்.
28 1501224216 2
இடம், பொருள், ஏவல்!
ப்ரபோஸ் செய்வதாக முடிவு செய்தவுடன் முந்திரிக்கொட்டை போல நடந்துக் கொள்ள வேண்டாம். காதலில் பொறுமை மிகவும் அவசியம். எனவே, சரியான சூழல் வரும் வரை காத்திருந்தால், அல்லது அந்த சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒரு ரொமாண்டிக் சூழலில் தான் ரொமாண்டிக்கான விஷயத்தை வெளிப்படுத்த வேண்டும்.
28 1501224235 3
இது கூடவே கூடாது!
மெசேஜ் மூலமாக ப்ரபோஸ் செய்வதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். நேருக்கு நேர் பார்த்து சொல்வதில் தான் பெரிய சுவாரஸ்யமே இருக்கிறது. வாழ்க்கையின் மறக்க முடியாத தருணமாக இருக்க போகும் நிகழ்வை, அதற்கு அந்த பெண் எப்படி ரியாக்ட் செய்கிறார் என்பதை மனதில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டாமா? மெசேஜ் வெறும் வார்த்தைகளை தான் அனுப்பும், உணர்வுகளை அல்ல.
28 1501224263 4
ஈர்ப்பு!
பெண்கள் ஆண்களிடம் ப்ரபோஸ் செய்யும் முன்னர், முதலில் அந்த ஆணுக்கு தாங்கள் அவர்களை தான் பார்க்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் படி சில செயல்கள் செய்வார்களாம். ஃபேஸ்புக் போஸ்ட் அனைத்திற்கும் லைக்ஸ் போடுவது, அவர்கள் கண்ணெதிரே நின்று, தங்கள் பக்கம் திரும்பும்படி ஏதேனும் செய்வது போன்றவற்றை செய்வார்களாம்.
28 1501224291 5
க்ரஷ்!
ஓர் ஆணை பிடித்துவிட்டால், அந்த ஆணிடம் தனக்கு உன் மேல் க்ரஷ் இருக்கிறது என கூறிவிடுவார்களாம். பின்னாட்களில் பழகி பிடிக்காமல் போனால் வெறும் க்ரஷ் என கூறி எஸ்கேப் ஆகிவிடுவார்கள். பிடித்து போனால், டேட்டிங், லவ் என அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்லலாம்.
28 1501224303 6
புதிர் விளையாட்டு!
நேரடியாக போட்டு உடைக்காமல், புதிர் விளையாட்டு போல ப்ரபோஸ் செய்தால் சுவாரஸ்யமாக இருக்கும். அது பொக்கிஷமான நினைவுகளாக சேமிப்பாகும் எனவும் ஒருசில பெண்கள் கூறுகிறார்கள். அதற்கென கமல் ட்வீட் போல புதிர் போட வேண்டாம். ரியாக்ஷன் எதிர்வினையாகும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
28 1501224524 9
அலையவிடுவது!
அதாவது, தங்களுக்கு அவர்கள் மீது பொசசிவ்னஸ் இருப்பதை வெளிப்படுத்திவிட்டு, பிறகு ஆண்களாக தங்களிடம் காதலை வெளிப்படுத்தும் படி செய்வார்களாம் பெண்கள். ஏம்மா இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா. என்று கேட்டால். இதில் என்ன தவறு, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்கிறார்கள். என்னவோ போங்க!
28 1501224313 7
இந்த ரோஸ், லெட்டர்..
ரோஜா பூ தருவது, காதல் கடிதங்கள் எழுதுவது எல்லாம் இப்போ ஓல்ட் ஸ்டைலில் சேர்ந்துவிட்டதாம். இது, வாட்ஸப், ஃபேஸ்புக் காலம். அப்படியே யாரேனும் இரிட்டேட் செய்தாலும், உடனே எளிதாக பிளாக் செய்துவிடலாம் என்கிறார்கள்.
28 1501224327 8
லவ்வபல் இடியட்!
சச்சினில் ஷாலினியிடம் சச்சின் வெளிப்படுத்தும் காதலை போல, இரிட்டேட் செய்து, சண்டை போட்டு காதலை ஒரு தருணத்தில் வெளிப்படுத்துவது. ஆனால், இதெல்லாம் சினிமாவில் ஓகே. ரியாலிட்டியில் கொஞ்சம் மிதமிஞ்சினாலும் ஈவ்டீசிங் கேஸ் தான். பார்த்துக்குங்க!

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கால்சியம் சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! ரத்தக்கொதிப்பை குறைக்கும் வழிகள்

nathan

மருத்துவரின் பரிந்துரையின்றி பெண்கள் சாப்பிடக்கூடாத மாத்திரைகள்!!!

nathan

30 வயதில் கருமுட்டையை இழக்கும் பெண்கள்

nathan

எச்சரிக்கை முக்கியம்!!செல்ல பிராணிகளிடம் இருந்து இந்த வியாதிகள் எல்லாம் பரவுகிறதா,

nathan

இரும்புச் சத்துக்காக மாத்திரைகள் சாப்பிடலாமா?கண்டிப்பாக வாசியுங்க….

nathan

துப்பட்டாவே ஆயுதம் ஆகும்!

nathan

உங்களுக்கு தெரியுமா மருத்துவ குணம் மிகுந்த மூலிகைகளும் அதன் பயன்களும்…!!

nathan

இந்த பிரச்சனைகள் தான் மாதவிடாய் சரியாக வராததற்கு காரணம்

nathan