26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
healthydrink
ஆரோக்கிய உணவு

இந்த ஸ்மூத்திகளை காலையில் குடித்தால் உடல் எடை குறையும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

காலை உணவு மிகவும் இன்றியமையாதது. அதிலும் காலையில் சாப்பிடும் காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்த ஒன்றாக இருந்தால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நினைப்போர் காலையில் தவறாமல் சாப்பிட வேண்டும். எடையைக் குறைக்கிறேன் என்று பட்டினி கிடப்பதைத் தவிர்க்க வேண்டும். டயட் என்ற பெயரில் பட்டினி கிடப்பதால் மட்டும், உடல் எடையைக் குறைக்க முடியாது.

சொல்லப்போனால் பட்டினி கிடப்பதால், அந்த ஒரு வேளை சாப்பிடாமல் இருக்கலாம். ஆனால் மறுவேளை சாப்பிடும் போது, கட்டுப்பாடு இல்லாமல் அதிகமாக சாப்பிட வேண்டியிருக்கும். இதன் விளைவாக உடல் எடை அதிகரிக்கத் தான் செய்யும். எடையைக் குறைக்க நினைக்கும் பலருக்கு காலையில் எந்த உணவை சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும் என்று தெரியாமல் இருக்கும். ஆனால் எடையைக் குறைக்க நினைப்போர் காலையில் ஊட்டச்சத்து நிறைந்த பானங்களைப் பருகுவது நல்லது.

இதனால் உடல் எடைக் குறைவதோடு, ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்திற்கும் வேண்டிய சத்துக்கள் கிடைக்கும். இக்கட்டுரையில் எடையைக் குறைக்க நினைப்போர் காலையில் குடிக்க ஏற்ற சில சிறப்பான மற்றும் ஆரோக்கியமான ஸ்மூத்திகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, அவற்றில் பிடித்ததை காலை வேளையில் குடித்து மகிழுங்கள். சரி, இப்போது எடையைக் குறைக்க டயட்டில் இருப்போருக்கான சில சுவையான ஸ்மூத்திகளைக் காண்போம்.

1. பீச் மற்றும் க்ரீம் ஓட்ஸ் ஸ்மூத்தி

இந்த ஸ்மூத்தி சுவையான ஒன்றாக இருப்பதோடு, ஆரோக்கியமான ஓர் காலை உணவாகவும் இருக்கும். இதில் புரோட்டீன்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இந்த பானம் எடையைக் குறைப்பதோடு, கொலஸ்ட்ராலையும் குறைக்க உதவும்.

தேவையான பொருட்கள்:

* உறைய வைக்கப்பட்ட பீச் துண்டுகள் – 1 கப்

* க்ரீன் தயிர் – 1 கப்

* ஓட்ஸ் – 1/4 கப்

* வென்னிலா எசன்ஸ் – 1/4 டீஸ்பூன்

* பாதாம் பால் – 1 கப்

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸி/பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, பின் குடியுங்கள்.

2. தேங்காய் மாம்பழ ஷேக்

இந்த ஷேக் மிகவும் ருசியாக இருப்பதுடன், வயிற்றையும் நிரப்பும். இந்த ஷேக் தயாரிப்பதற்கு இரவிலேயே ஒருசில விதைகளை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் இந்த பானம் ஓர் அற்புதமான காலை உணவாக அமையும்.

தேவையான பொருட்கள்:

* சியா விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்

* தேங்காய் பால் – 1 கப்

* வென்னிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன்

* மாம்பழம் – 1/2 கப்

* துருவிய தேங்காய் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸி/பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, பின் குடியுங்கள்.

3. பெர்ரி வாழைப்பழ ஸ்மூத்தி

இந்த ஸ்மூத்தியில் உள்ள பெர்ரிப் பழங்களில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஏராளமான அளவில் உள்ளது. மேலும் இந்த ஸ்மூத்தி மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதோடு, உடல் எடையைக் குறைக்கும் மற்றும் எடையை சீராக பராமரிக்கவும் உதவும்.

தேவையான பொருட்கள்:

* வாழைப்பழம் – 1

* ஸ்ட்ராபெர்ரி – 1/2 கப்

* ப்ளூபெர்ரி – 1/2 கப்

* ராஸ்ப்பெர்ரி – 1/2 கப்

* ஆப்பிள் – 1

* பாதாம் பால் – 1 கப்

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸி/பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, பின் குடியுங்கள்.

4. ஆரஞ்சு பாதாம் ஸ்மூத்தி

இந்த ஸ்மூத்தி சற்று வித்தியாசமான சுவையில் இருந்தாலும், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த ஸ்மூத்தியில் ஏராளமான அளவில் வைட்டமின் சி உள்ளது. அதோடு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பொருட்களும் நிறைந்துள்ளது.

தேவையான பொருட்கள்:

* தோல் நீக்கப்பட்ட ஆரஞ்சு – 1

* வென்னிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்

* தேன் – 1 டீஸ்பூன்

* பாதாம் பால் – 1/4 கப்

* க்ரீக் தயிர் – 1/4 கப்

* ஐஸ் – 1/2 கப்

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸி/பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, பின் குடியுங்கள்.

5. அன்னாசி சியா விதை ஸ்மூத்தி

அன்னாசியுடன் சியா விதைகள் சேர்ந்திருப்பது, இந்த ஸ்மூத்தியின் ருசியையே தனித்து காட்டும். மேலும் இந்த ஸ்மூத்தி காலையில் குடிப்பதற்கு ஏற்ற அற்புதமான பானம். இந்த பானம் தயாரிப்பதற்கு சியா விதைகளை இரவு தூங்கும் முன்பே ஊற வையுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சியா விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்

* தேங்காய் பால் – 1 கப்

* அன்னாசி துண்டுகள் – 1 கப்

* க்ரீக் தயிர் – 1/2 கப்

* தேங்காய் துருவல் – 1 டீஸ்பூன்

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸி/பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, பின் குடியுங்கள்.

6. சாக்லேட் வாழைப்பழம் பாதாம் வெண்ணெய் ஸ்மூத்தி
6. சாக்லேட் வாழைப்பழம் பாதாம் வெண்ணெய் ஸ்மூத்தி
சாக்லேட் வாழைப்பழ ஸ்மூத்தியில் புரோட்டீன்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இது வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைத்திருப்பதோடு, இதன் சுவையும் அற்புதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* பாதாம் பால் – 1 கப்

* வாழைப்பழம் – 1

* சாக்லேட் சிரப் – 1 டேபிள் ஸ்பூன்

* பாதாம் வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* ஐஸ் – 1 கையளவு

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸி/பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, பின் குடியுங்கள்.

7. வாழைப்பழ ஓட்ஸ் ஸ்மூத்தி

வாழைப்பழ ஓட்ஸ் ஸ்மூத்தி சுவையான மற்றும் ஆரோக்கியமான ஓர் பானம். இதில் புரோட்டீன்கள், கரையக்கூடிய நார்ச்சத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் ஆற்றலை வழங்கும் சத்துக்கள் அதிகம் உள்ளது. அதோடு இந்த ஸ்மூத்தியில் ஸ்ட்ராபெர்ரி, பீச் அல்லது அன்னாசி போன்றவற்றில் பிடித்ததை சேர்த்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

* ஓட்ஸ் – 1/4 கப்

* கொழுப்பு குறைவான தயிர் – 1/2 கப்

* வாழைப்பழம் – 1

* பாதாம் பால் – 1/2 கப்

* தேன் – 1 டீஸ்பூன்

* பட்டைத் தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸி/பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, பின் குடியுங்கள்.

8. ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழ ஸ்மூத்தி

உங்களுக்கு இன்னும் சுவையான, அதே சமயம் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த ஸ்மூத்தி வேண்டுமானால், இதை முயற்சித்துப் பாருங்கள். இதில் ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழங்களுடன், பசலைக்கீரையும் சேர்த்து செய்வதால், வித்தியாசமான சுவையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* ஸ்ட்ராபெர்ரி – 1/2 கப்

* வாழைப்பழம் – 1

* பசலைக்கீரை – 1 கப்

* பாதாம் பால் – 1/2 கப்

* வென்னிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸி/பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, பின் குடியுங்கள்.

9. சாக்லேட் வாழைப்பழ ஸ்மூத்தி
9. சாக்லேட் வாழைப்பழ ஸ்மூத்தி
சாக்லேட் வாழைப்பழ ஸ்மூத்தியில் புரோட்டீன்கள் அதிகம் உள்ளது. மேலும் இது பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் விரும்பி குடிக்கக்கூடிய ஓர் சுவையான பானமும் கூட. இது எடையைக் குறைக்க உதவுவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

தேவையான பொருட்கள்:

* வாழைப்பழம் – 1

* பாதாம் – 10

* பாதாம் பால் – 1 கப்

* க்ரீக் தயிர் – 1 கப்

* கொக்கோ பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

* ஸ்ட்ராபெர்ரி அல்லது பெர்ரி – 1 கப்

* பாதாம் அல்லது வேர்க்கடலை வெண்ணெய் – 1 டீஸ்பூன்

* தேங்காய் துருவல் – 1 டீஸ்பூன்

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸி/பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, பின் குடியுங்கள்.

10. பெர்ரி க்ரீன் ஸ்மூத்தி

பசலைக்கீரையை ஸ்மூத்திகளுடன் சேர்த்துக் கொள்வது, அந்த ஸ்மூத்தியின் சுவையையே வேறுபடுத்திக் காட்டும். மேலும் இந்த ஸ்மூத்தியில் கால்சியம், பொட்டாசியம் போன்றவைகளும் அதிகம் இருக்கும். அதோடு உடலின் மெட்டபாலிசமும் மேம்பட்டு, உடல் எடையும் குறையும்.

தேவையான பொருட்கள்:

* ஸ்ட்ராபெர்ரி – 1/2 கப்

* ப்ளூபெர்ரி – 1/2 கப்

* ராஸ்ப்பெர்ரி – 1/4 கப்

* பசலைக்கீரை – 2 கப்

* தண்ணீர் – 1 கப்

* ஐஸ் – 1 கப்

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸி/பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, பின் குடியுங்கள்.

Related posts

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்கும் உணவுகள்!!!

nathan

தயிரின் அற்புதங்கள்

nathan

வெறும் வயிற்றில் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால்

nathan

சுவையான சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன்

nathan

திராட்சை இந்த பொருட்களுடன் கலந்து பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா?அப்ப இத படிங்க!

nathan

காபி குடிக்கும் போது இந்த பொருட்களை தெரியாமல் கூட சாப்பிட்ராதீங்க! தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

இதோ எளிய நிவாரணம்! ரத்ததில் கலக்கும் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர..

nathan

இரவு தூங்கும் முன் சிறிது செலரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – தெரிஞ்சிக்கங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்! உடல் சோம்பல், வாய் துர்நாற்றத்தை போக்கும் மருத்துவ குணம் கொண்ட மிளகு

nathan