26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
banana eat too much SECVPF
ஆரோக்கிய உணவு

இந்த பிரச்சனை இருக்குறவங்க தெரியாம கூட வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாதாம்…

வாழைப்பழம் சுவையானது மட்டுமல்ல, அதிக சத்துள்ள பழங்களும் கூட. ஆரோக்கியமான சிற்றுண்டியாக மட்டும் சாப்பிட முடியாது, ஆனால் பல உணவுகளுடன் சேர்த்து சுவையாகவும் சாப்பிடலாம். இந்த அற்புதமான பழம் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது, எடை குறைக்க உதவுகிறது, வயிற்று அமிலத்தை குறைக்கிறது, இதயத்தை பாதுகாக்கிறது, சிறுநீரக கல் உருவாவதை தடுக்கிறது மற்றும் அஜீரணத்தை நீக்குகிறது.

வாழைப்பழத்தின் அனைத்து ஆரோக்கிய நன்மைகள் இருந்தபோதிலும், சில குறைபாடுகளும் உள்ளன.குறிப்பாக வாழைப்பழங்களை அதிகமாக சாப்பிடுவது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக உங்களுக்கு சுவாச பிரச்சனைகள், சளி, இருமல் போன்றவை இருந்தால், இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இல்லையெனில், வாழைப்பழம் சாப்பிடுவதால் உங்கள் உடலில் சளி அதிகமாக சேரும்.

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்
வாழைப்பழத்தில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட், நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் பி6 போன்ற அனைத்துமே உள்ளன. இந்த அனைத்து சத்துக்களும் ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, உறுப்புகள் சீராக செயல்பட உதவக்கூடியவை.

வாழைப்பழம் சாப்பிடுவதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்:

எலும்புகளுக்கு நல்லது

குளிர்காலத்தில் எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். இம்மாதிரியான சூழ்நிலையில், கால்சியம் அதிகம் நிறைந்த வாழைப்பழத்தை தினமும் ஒன்று சப்பிட்டு வந்தால், எலும்புகளுக்கு வேண்டிய கால்சியம் கிடைத்து, எலும்புகளின் அடர்த்தியும், வலிமையும் பராமரிக்கப்படும்.

உடல் எடை கட்டுப்படும்

வாழைப்பழம் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும். ஏனெனில், இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. கரையக்கூடிய நார்ச்சத்து செரிமானத்தை தாமதமாக்கும். இதனால் நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். ஆகவே அடிக்கடி பசி எடுக்காது மற்றும் உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இதயத்திற்கு நல்லது

ஆய்வுகளின் படி, நார்ச்சத்துள்ள உணவுகள் இதய நோய்கள் மற்றும் கரோனரி தமனி நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் இரத்த அழுத்தமும் எகிறாமல் இருக்கும்.

நல்ல தூக்கம் கிடைக்கும்

வாழைப்பழத்தை தினமும் மாலையில் சாப்பிடுவது மிகவும் நல்ல பழக்கம். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், நாள் முழுவதும் கடினமாக உழைத்த தசைகளை ரிலாக்ஸ் அடைய உதவுகிறது. ஆகவே தினமும் மாலையில் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழத்தை சாப்பிடுவது, உடல் சோர்வைக் குறைத்து, இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.

யாரெல்லாம் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது?

இன்று பலர் அவதிப்படும் ஓர் பொதுவான பிரச்சனையாக சைனஸ் பிரச்சனை உள்ளது. இப்பிரச்சனை இருப்பவர்கள் சளியை உடலினுள் அதிகம் உருவாக்கும் அல்லது தேக்கும் உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதுவும் பழங்களில், வாழைப்பழத்தை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது அல்லது அளவாக சாப்பிடலாம்.

சைனஸ் பிரச்சனை என்றால் என்ன?

மருத்துவ மொழியில் சைனசிடிஸ் என்று அழைக்கப்படும் பிரச்சனை தான் சைனஸ் பிரச்சனை என்று மக்களால் பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்த பிரச்சனையில், நோயாளியின் நாசி எலும்பு அதிகப்படியான குளிர்ச்சியின் காரணமாக பெரிதாகிறது. குளிர்ச்சியான உணவுகள் அல்லது விஷயங்களைத் தவிர்த்தால், இந்த பிரச்சனை தானாகவே சரியாகிவிடும். ஆனால் நீண்ட காலமாக இப்பிரச்சனை உள்ளவர்கள் மூக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

இதுப்போன்ற ஆரோக்கிய பிரச்சனை இல்லாதவர்கள், வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் வாழைப்பழத்தை அளவாக சாப்பிட்டால் தான் அவற்றின் நன்மை கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Related posts

ஒரு நாளைக்கு எவ்வளவு நட்ஸ் சாப்பிடலாம்?

nathan

எது நல்ல உணவு? நமக்கான ஃபுட் ரூல்ஸ்!

nathan

உங்களுக்கு தெரியுமா அசைவம் சாப்பிடுவோரை விட சைவம் சாப்பிடுவோருக்கு பக்கவாதம் வரும் ஆபத்து..!

nathan

ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்…சர்க்கரை மிகுந்த பானங்கள் புற்றுநோயை உண்டாக்குமா?

nathan

தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

உங்கள் பிள்ளைகளின் எடையை அதிகரிப்பதற்கான சில ஆரோக்கிய குறிப்புகள்!

nathan

பூசணிக்காயை விரும்பி சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள்

nathan

உங்களுக்கு இயற்கை உணவுகள் உங்களுக்கு பிடிக்குமா? இத ட்ரை பண்ணி பாருங்க,…

nathan

கெட்ட கொழுப்பை குறைக்க சூப்பர் டிப்ஸ்….

nathan