26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
hqdefault
சிற்றுண்டி வகைகள்

இந்த கேக் செய்து பாருங்க- 10 நிமிஷத்தில் காலியாகிடும்

குழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகைகளில் ஒன்று கேக், மிகவும் ருசியான வெறும் ரவையை மட்டும் வைத்து கேக் செய்யலாம் என்று உங்களுக்கு தெரியுமா?

இதற்கு தேவையான பொருட்கள்,

சர்க்கரை – 1/2 கப்
பால் – 1 1/2 கப்
நெய் – 1 தேக்கரண்டி
ரவை – 1/4கப்
முட்டை – 2

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் தடவி வைத்துக்கொள்ளுங்கள்.

மீண்டும் மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1/4 கப் சர்க்கரையை போட்டு தண்ணீர் ஊற்றாமல் கேரமல் தயாரிக்கவும் .

அந்த சூட்டுடன் நெய் தடவிய பாத்திரத்தில் சர்க்கரை பாகுவை (கேரமல் ) மாற்றிக்கொள்ளுங்கள்.

கடாயை அடுப்பில் வைத்து 1 1/2 கப் பால் ஊற்றி அதில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து மேலும் 1/4 கப் சர்க்கரை சேர்த்து ,சர்க்கரை கரைந்ததும் 1/4 கப் ரவை சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

பாதி அளவு கெட்டியானதும் அடுப்பை அணைத்திடுங்கள்.

பின் வேறொரு பாத்திரத்தில் 2 முட்டையை நன்றாக அடித்து கொள்ளுங்கள். பிறகு ரவை கலவையை இதில் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து ,இக்கலவையை நாம் முன்னதாக தயார் செய்த சர்க்கரை பாகு (கேரமல் ) மேல் ஊற்றவும்.

பின் அதை இட்லி பாத்திரத்தில் மூடி போட்டு 20 நிமிடம் வைத்து இறக்கவும்.

நன்றாக ஆற வைத்து குளிர்சாதன பெட்டியில் 10 நிமிடம் வைத்து தட்டிற்கு மாற்றி சிறிய துண்டுகளாக வெட்டினால் சுவையான ரவா கேக் தயார்.

Related posts

30 வகை கறுப்பு – சிவப்பு (அரிசி) ரெசிபி tamil recipes

nathan

சுவையான பேரிச்சம்பழம் லட்டு செய்முறை!

nathan

வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி

nathan

கொண்டைக்கடலை கட்லெட்

nathan

பூசணி அப்பம்

nathan

அவல் வேர்க்கடலை பக்கோடா…

nathan

கம்பு இட்லி

nathan

இஞ்சித் தொக்கு

nathan

சோயா தட்டை

nathan