26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
p63a1
மருத்துவ குறிப்பு

இதயநோய் வராமல் தடுக்கும் சீதாப்பழம்

சீதாப்பழத்தில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, புரதம், தாதுஉப்புகள், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகம். இரத்த விருத்திக்கும், இரத்தசோகைக்கும் இது நல்லதொரு மருந்தாகும். இதயநோய் வராமல் தடுக்க உதவும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
இதயநோய் வராமல் தடுக்கும் சீதாப்பழம்
இதய வால்வுகளில் உள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை சீதாப்பழத்திற்கு உண்டு. சோர்வுடன் இருக்கும் குழந்தைகளுக்கு, சீதாப்பழத்தை தினமும் கொடுக்கலாம். நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். இதில் உள்ள தாமிரச் சத்து, குடலுக்கு மிகவும் நல்லது. காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு பழம் சாப்பிட்டுவர, அமிலத்தன்மையைச் சரிசெய்யும்.
சீதாப்பழத்தை, கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையாவதுடன், பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கும். பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய் எதிர்ப்புச்செயல்களில் இந்தப் பழத்தின் பங்கு அதிகம். பழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளுக்கு நிவாரணி. மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும்.
இந்த மரத்தின் பட்டைகள், நீரிழிவு நோய்க்கும் இதன் இலைகள் நோய்த்தடுப்புக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. சீதாப்பழம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதால், இரவு நேரங்களில் சாப்பிடும்போது, வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து அதன் வெப்பநிலை சற்று உயர்ந்தவுடன் சாப்பிடலாம். எல்லா வயதினரும் உண்ணக்கூடியது.p63a(1)

Related posts

பெண்களே தொிந்துகொள்ளுங்கள்! இரண்டாவது முறை கருத்தரிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

nathan

ஏன் அக்கால ஆண்களுக்கு வயாகராவின் அவசியமே இருந்ததில்லை என்பதற்கான காரணங்கள்!

nathan

குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது எப்படி?

nathan

உங்கள் கைரேகை இப்படி இருக்கிறதா? அப்படின்னா நீங்க கோடீஸ்வரர் தான்!

nathan

அலுவலக வேலையை திட்டமிட்டு செய்யுங்க

nathan

கைக்குழந்தை விடாமல் தொடர்ந்து அழுதால் .

nathan

ரத்தசோகையைப் போக்க…!

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…நீங்கள் செய்யும் இந்த காரியங்கள் உங்கள் குழந்தைகளை வெறுப்படைய செய்யும் என தெரியுமா?

nathan