6a76
சட்னி வகைகள்

இட்லிக்கு தொட்டுக்க சுவையான பொடி செய்வது எப்படி?

காலையில் இட்லிக்கு தொட்டுக்கொள்ள சட்னி சாம்பார் என பல வகை சாப்பிட்டு இருப்போம்… ஆனால் அதெல்லாம் அலுத்துபோனவர்களுக்காக கை கொடுப்பது இட்லி பொடி தான்.

வெறும் 4 பொருட்களை கொண்டு அற்புதமான இட்லி பொடியை எப்படி தயார் செய்வது என்பது பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு – 1 கை(1/2 ஆழாக்கு), உளுத்தம் பருப்பு – 2 கை(1 ஆழாக்கு), காய்ந்த மிளகாய் – 10, பெருங்காய தூள் – 1 டீ ஸ்பூன், கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை

முதலில், அடுப்பில் கடாயை வைத்து அதில் கடலை பருப்பை சேர்த்து, பருப்பு நன்கு சிவக்கும் வரை வறுக்க வேண்டும். வறுத்த கடலைப்பருப்பை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொண்டு, கடாயில் உளுத்தம் பருப்பை சேர்த்து நன்கு சிவக்கும் வரை வறுக்க வேண்டும்.

அடுத்து, உளுத்தம் பருப்பை சற்று நேரம் வறுத்த பிறகு அதில் பெருங்காய தூளை சேர்த்து வதக்க வேண்டும். உளத்தம்பருப்பு செந்நிறம் ஆன பிறகு அதை கடலை பருப்பு இருக்கும் பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இப்போது கடாயில் காய்ந்த மிளகாயை போட்டு அதை சற்று நேரம் வதக்கி, பிறகு பருப்புகளோடு சேர்த்துவிட வேண்டும். அடுத்ததாக தேவையான அளவு கல் உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பிறகு இவை அனைத்தையும் மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரவென்று அரைக்க வேண்டும். இப்போது, அருமையான இட்லி போடி தயாராகிவிட்டது. சாப்பிடும்போது நல்லெண்ணெய் சேர்த்து இதை சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.

சற்று வேறு விதமான சுவை தேவை பட்டால் இதில் சிறிதளவு எல் சேர்த்து கூட அரைக்கலாம். இனிப்பு விரும்பிகள் இதில் வெல்லம் சேர்த்தும் அரைக்கலாம்.

Related posts

காலிஃபிளவர் சட்னி

nathan

இடி சம்பல் (அ) இடிச்ச சம்பல்

nathan

சீனி சம்பல்

nathan

வயிற்று உபாதைகளுக்கு ஏற்ற பூண்டு சட்னி -சூப்பர் டிப்ஸ்

nathan

வல்லாரை துவையல்

nathan

சூப்பரான கேரட் தக்காளி சட்னி

nathan

சுவையான பூண்டு சட்னி

nathan

வயிற்று உபாதைகளுக்கு ஏற்ற பூண்டு சட்னி

nathan

குழந்தைகளும் விரும்பும் சுவையான வெங்காய சட்னி

nathan