உணவு என்பது நம் வாழ்வின் ஒரு முக்கியமான பகுதியாகும். நாம் எவ்வாறு உண்கிறோம் என்பதை விட எதை உண்கிறோம் என்பது மிகவும் முக்கியம். நாம் உணவு உண்பதில் முறையான விதிகளை பின்பற்றினால், அஜீரணக் கோளாறால் ஏற்படும் எந்த ஏற்ற தாழ்வுகளும் நம்மை நெருங்காது.
அதேப்போல் நீங்கள் சரியான உணவுகளை தவான முறையில் எடுத்துக் கொள்ளும் போது, வாயு மற்றும் அஜீரணம் போன்றவை ஏற்படலாம். நீங்கள் இந்த உணவுப் பழக்கங்களை பின்பற்றி, சரியான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது உங்கள் செரிமானம் அதிகரிப்பதோடு உகந்த செரிமானத்தை உங்களால் உணர முடியும்.
டிப்ஸ்: 1 உணவை விழுங்குவதற்கு முன் அதனை சீராகும் வரை நன்கு மெல்லவும்.
டிப்ஸ்: 2 தொலைக்காட்சியால் கவன சிதறல், அதிகப்படியான உரையாடல் அல்லது வாசிப்பின் போது உணவு எடுத்துக் கொள்ள வேண்டாம்.
டிப்ஸ்: 3 சாப்பிடுவதற்கு முன் குளிர்பானங்களை அருந்த வேண்டாம். இவை செரிமானத்தை தாமதப்படுத்தும்.
டிப்ஸ்: 4 உணவின் போது அதிக திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். இது செரிமானத்தின் தீவிரத்தினைக் குறைக்கும். உலர் உணவுகளுக்கு நீர் தேவைப்படலாம். ஈரப்பத உணவுகளான சூப் போன்றவற்றிற்கு தேவையில்லை. மேலும் உணவின் போது ஒரு வாய் மது அருந்திக் கொள்ளலாம்.
டிப்ஸ்: 5 அன்பான முறையில் அன்பான கைகளால் செய்யப்பட்ட உணவுகளையே எடுத்துக் கொள்ளுங்கள். சமைப்பவரின் சக்தி உணவிலும் இருக்கும். வெறுப்புணர்ச்சியுடன் தயாரிக்கும் உணவை தவிர்த்திடுங்கள்.
டிப்ஸ்: 6 புனித சடங்குகளின் போது உண்ணும் போது, ஒரு கணம் நின்று, தளர்வாக கருணையுடன் தொடங்குங்கள்.
டிப்ஸ்: 7 உணவிற்கு பின் அடுத்த வேலையை செய்வதற்கு முன்பாக உணவு செரிக்க சற்று ஓய்வளியுங்கள்.
டிப்ஸ்: 8 அவசரமாக உணவு உண்பதை தவிர்த்து, மிதமான வேகத்தில் சாப்பிடுங்கள்.
டிப்ஸ்: 9 உணவிற்கு இடையே செரிப்பதற்காக 3 மணிநேரம் இடைவெளி கொடுங்கள்.
டிப்ஸ்: 10 சூரியன் உச்சத்தில் இருக்கும் போது செரிமானம் அதிகம் நடக்கும். உடலானது பிரபஞ்சத்தை பிரதிபலிக்கிறது. எனவே அதிக உணவை நண்பகலில் எடுத்துக் கொள்வது நல்லது. காலை மற்றும் இரவில் இலகுவான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
டிப்ஸ்: 11 நீரை அறை வெப்பநிலையில் அல்லது சூடாக எடுத்துக் கொள்ளவும். குளிர் பானங்கள் செரிமானத் தீயை குறைத்து, செரிமானத்தின் வேகத்தை குறைக்கின்றன.
டிப்ஸ்: 12 உணவு செரிப்பதற்காக 3 மணிநேரம் இடைவெளி கொடுக்கவும். இது மக்களுக்கு நாள் ஒன்றுக்கு மூன்று முதல் ஐந்து முறை உணவுக்கான அனுமதி அளிக்கின்றது. சமநிலை இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு 5 முறை உணவு எடுத்து கொள்ளலாம்.