முருங்கைக்காய் சாப்பிடுவதால் உடலில் ஏராளமான மாற்றங்கள் நடக்கிறது. ஏனெனில் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
அடிக்கடி முருங்கைக்காய் உணவில் சேர்த்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் சத்துகள் முருங்கைக்காயில் அதிகளவில் உள்ளதால், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு, தொடர்ந்து உணவில் முருங்கைக்காயை சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
முருங்கை காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும்.
இளம் வயது ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாடு பிரச்சனைக்கு இந்த முருங்கைக்காய் சிறந்த மருந்தாகிறது.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உணவில் அடிக்கடி முருங்கைக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தைக்கு மிகவும் நல்லது.