சீத்தா பழத்தை சுடுநீரில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் நமது உடலின் ஆரோக்கியத்திற்குத் தேவைப்படும் அத்தியாவசிய சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, புரதம், தாது உப்புகள், நார்ச்சத்து உட்பட பல்வேறு சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ள அற்புத பழம், சீத்தா பழம். இந்த சீத்தாபழம், அதிகளவு குளிர்ச்சி உடையது.
இந்த பழத்தில் பகலில் அப்படியே சாப்பிடலாம் ஆனால் இரவு நேரத்தில் சாப்பிடும் போது, சுடுநீரில் சில நிமிடங்கள் ஊற வைத்து அதன் பிறகு அந்த சீத்தா பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலுக்குள், சீத்தா பழத்தின் குளிர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டு, அதில் உள்ள மேற்கூறிய அனைத்து சத்துக்களும் உடலுக்கு கிடைத்து உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும்.