மது அருந்துபவர்கள் அவர்களுக்கு தோன்றும் ஒரு சில அறிகுறிகளை வைத்தே அடுத்த கட்ட பெரும் பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ள விழித்துக் கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அதை யார் எப்போது எந்த அளவிற்கு பயன்படுத்துகின்றனர் என்பதை பொறுத்தே அவர்கள் எந்த அளவிற்கு பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அடிக்கடி மது அருந்தினால் கல்லீரல் கணையம் பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாக சிறுநீரகம் பெரும் பாதிப்புக்குள்ளாகும். சிறுநீரகம் பாதித்தாலே உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு.
இந்த நிலையில் மது அருந்துவதால் என்றாவது ஒருநாள் திடீரென வயிறு வீக்கமோ அல்லது வாய் குமட்டல், ரத்தவாந்தி ஏற்படுமாயின் அப்போதைக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டு பிறகு மது அருந்துவதை முற்றிலும் தவிர்ப்பது தான் நல்லது. இல்லையேல் உயிருக்கு ஆபத்து என்பதை உணர வேண்டும். எனவே மதுவுக்கு அடிமையானவர்கள் இந்த பதிவை படித்து இப்போதே விழித்துக் கொள்ளுங்கள். இல்லையேல் விளைவு நமக்கு தான்..!