‘தூக்கத்தில் குறட்டை விடுவது நோய் பாதிப்புகளின் அறிகுறி’ என்கிறது மருத்துவம். அது எந்த நோய்க்கான அறிகுறி என்பதைக் கண்டறிந்து சரிசெய்யாவிட்டால், அந்த நோயும் தீவிரமாவதோடு மூச்சுக்குழாய் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படும்.
குறட்டை விடுவது தீவிரமாகி இரவுத் தூக்கம் பாதிக்கப்படுவது, மூச்சுத்திணறல் போன்ற கூடுதல் பிரச்னைகள் ஏற்படுவது ‘ஸ்லீப் ஆப்னியா’ என்று அழைக்கப்படுகிறது
‘ஸ்லீப் ஆப்னியா பிரச்னை இருப்பவர்களுக்கு, தூக்கத்தில் மூச்சுத்திணறல் தீவிரமாகி மாரடைப்புகூட’ ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இந்தப் பிரச்னையை முழுமையாகச் சரிசெய்ய முடியாது என்றாலும், சில உபகரணங்களின் உதவியுடன் கட்டுப்படுத்த முடியும்.
ஆய்வாளர்கள்குறட்டைவிடும் பெண்களுக்கு, சருமப் புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகம்
இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, ஐரோப்பாவின் கோத்தன்பெர்க் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. அதன்முடிவில், ‘ஸ்லீப் ஆப்னியாவுக்கு சிகிச்சை பெறாமல் அலட்சியப்படுத்தினால், புற்றுநோய் பாதிப்புகூட ஏற்படலாம்’ என்பது தெரியவந்துள்ளது.
ஏறத்தாழ 20,000 ஸ்லீப் ஆப்னியா நோயாளிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 2 சதவிகிதம் பேருக்கு மட்டும் ஏற்கெனவே புற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகள் இருந்துள்ளன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் வயது, புகை மற்றும் மதுப்பழக்கம், உடல் எடை போன்ற யாவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஸ்லீப் ஆப்னியாவால் அவர்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் கண்காணிக்கப்பட்டுள்ளன.
Sleep apnea Device
அதன் அடிப்படையில், ‘ஆண்களுக்கு இதயப் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதும் பெண்களுக்குப் புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதும்’ ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, ‘சருமப் புற்றுநோய்க்கான வாய்ப்புதான் அதிகம்’ எனக் குறிப்பிட்டுள்ளார் ஆய்வாளர்களில் ஒருவரான க்ரூட்.