31.2 C
Chennai
Saturday, Oct 19, 2024
161336
மருத்துவ குறிப்பு

அதிமதுரம் கஷாயம் குடிப்பதன் நன்மைகள்!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு, மக்கள் தேவையான பழங்கள், காய்கறிகளை எடுத்து வருகின்றனர்.

மேலும் மஞ்சள் கலந்த பால், துளசி கஷாயம் போன்ற ஆயுர்வேத வைத்தியங்களும் பின்பற்றப்படுகின்றன.

தற்போது ஆயுர்வேதத்தில் அதிக பலன் அளிக்கும், அதிமதுரம் கொரோனாவினை எதிர்த்து போராடுகின்றது.

கால்சியம், ஆண்டியாக்சிடெண்டுகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் புரதங்கள் நிறைந்த அதிமதுரம் ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகையாகும்.

அதிமதுரம் நம் உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒவ்வொரு நாளும் வெறும் வயிற்றில் அதிமதுரம் கொண்டு செய்யும் கஷாயத்தைக் குடிக்கத் துவங்கினால், அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயனளிக்கும்.

அதிமதுரம் கொண்டு கஷாயம் தயாரிப்பது எப்படி?
ஒரு கிளாஸ் தண்ணீரில் 6-7 கருப்பு மிளகை அரைத்து அல்லது பொடி செய்து போடவும். அதில் ஒரு துண்டு அதிமதுரத்தைப் போடவும்.

அதனுடன் துளசியின் (Tulsi) 7-8 இலைகளை சேர்க்கவும். இதற்குப் பிறகு, ஒரு துண்டு இஞ்சியை எடுத்து அரைத்து தண்ணீரில் சேர்த்து குறைந்த சூட்டில் கொதிக்க விடவும்.

இது கொதித்து பாதியாக குறைந்தவுடன், ​​அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு அல்லது மூன்று கொதி வரவிடுங்கள். இதற்குப் பிறகு, இதை வடிகட்டி, ஆற வைத்து சிறிதளவு தேன் சேர்த்து குடிக்கவும். இந்த அதிமதுரத்தின் கஷாயத்தை காலையில் குடிப்பதால் அதிக நன்மைகள் ஏற்படும்.

அதிமதுரம் கஷாயம் குடிப்பதன் நன்மைகள்
அதிமதுரம் கஷாயம் கொரோனா வைரஸைத் (Coronavirus) தவிர்க்க உதவுவது மட்டுமல்லாமல், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மீட்பு செயல்முறையை விரைவுபடுத்தவும் உதவுகிறது (மீளும் வேகத்தை அதிகரிக்கிறது).

அதிமதுரத்தில் ஆண்டியாக்சிடெண்டுகள் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளன. அவை கீழ்வாதத்தால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும். கீழ்வாதம் நோயாளிகளுக்கு, அதிமதுரம் கஷாயம் கொடுப்பது நன்மை பயக்கும்.

Related posts

ஆரோக்கியமான இதயத்துடன் வாழ

nathan

பொருளாதார விஷயத்தில் உதவ வேண்டியது பிள்ளைகளின் கடமை

nathan

உடலும், மனமும் பாதிக்கப்பட்டால் அல்சர் வருவது உறுதி

nathan

மனைவி கர்ப்பமாக இருக்கும் போது இதெல்லாம் பண்ணிருக்கீங்களா ?அப்ப இத படிங்க!

nathan

புதிய உறவுகளுக்காக பழைய உறவுகளை உதாசீனப்படுத்தாதீங்க

nathan

பரிசுக்கு ஆசைப்பட்டு பணத்தை இழக்காதீர்

nathan

உங்கள் உடல் வகை வாதமா? பித்தமா? கபமா?

nathan

நகம் கடித்தால் புற்று நோய் வரும்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் இரத்தக்கசிவு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

nathan