26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
4 stomachulcer 1
மருத்துவ குறிப்பு

அடிக்கடி மேல் வயிறு வலிக்கிறதா? உங்களுக்குதான் இந்த விஷயம்

ஒவ்வொருவரும் கட்டாயம் வயிற்றின் மேல் பகுதியில் வலியை உணர்ந்திருப்போம். அப்படி வலி ஏற்படும் போது, நம்மில் பலர் அதை சாதாரணமாக நினைத்து விட்டுவிடுவர். ஒருவரது வயிற்றின் மேல் பகுதியில் ஏற்படும் வலியானது உணவுக்குழாய் அல்லது இரைப்பையில் உள்ள பிரச்சனையைத் தான் குறிக்கும். சில சமயங்களில் மேல் வயிற்று வலி வேறு பல காரணங்களாலும் வரக்கூடும். அதில் சில தற்காலிகமான வலியையும், இன்னும் சில தீவிர பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கும்.

மேல் வயிற்று வலி ஒருவருக்கு கடுமையாக இருந்தால், எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாமல் போகும். எனவே மேல் வயிற்று வலியை ஒருவர் அடிக்கடி சந்தித்தால், முதலில் இயற்கை வைத்தியங்களின் மூலம் சிகிச்சை அளியுங்கள். அதையும் தாண்டி வலி ஏற்பட்டால், சாதாரணமாக விடாமல், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறுங்கள்.

முக்கியமாக வயிற்றின் மேல் பகுதியில் எப்போதெல்லாம் வலி ஏற்படுகிறது, மேல் வயிற்று வலியின் போது வேறு எந்த பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க நேரிடுகிறது என்பதை கூர்ந்து கவனியுங்கள். இதனால் உங்கள் வயிற்று வலியின் தீவிரத்தை அறிந்து கொள்ள முடியும்.

சரி, இப்போது ஒருவருக்கு எந்த காரணங்களுக்கு எல்லாம் வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்படலாம் என்பது குறித்தும், அதற்கான சில இயற்கை வைத்தியங்கள் குறித்தும் விரிவாக காண்போம்.

மேல் வயிற்று வலிக்கான காரணங்கள்:

மேல் வயிற்று வலி பித்தப்பை அல்லது கல்லீரலில் பிரச்சனைகளால் வரக்கூடும். பித்தப்பை கற்கள், ஹெபடைடிஸ், கல்லீரல் சுருக்கம் போன்றவற்றாலும் மேல் வயிற்று வலி வரும். மொத்தத்தில் மேல் வயிற்று வலியானது காயங்கள் அல்லது தொற்றுக்களின் தாக்கத்தால் வருவதாகும்.

ஒருவேளை வலியானது வயிறு அல்லது உணவுக்குழாயில் இருந்து ஆரம்பமானால், அதற்கு நெஞ்செரிச்சல், இரைப்பைக் குடல் அழற்சி நோய் அல்லது ஹேயாடல் குடலிறக்கம் போன்றவைகள் காரணங்களாகும்.

இரைப்பை அழற்சி என்பது இரைப்பையின் உட்சுவரில் வைரஸ் அல்லது பாக்டீரியாக்களின் தாக்கத்தால் ஏற்பட்ட அழற்சியாகும். இதனால் வயிற்றின் மேல் பகுதியில் வலியை சந்திக்கக்கூடும். இன்னும் சில சமயங்களில் இரைப்பையில் புண் அல்லது அல்சர், உணவு அழற்சி அல்லது சகிப்புத்தன்மை போன்றவற்றாலும் மேல் வயிற்று வலி வரும்.

மேல் வயிற்றின் மையப்பகுதியில் வலிப்பதற்கான காரணங்கள்:

உங்களுக்கு மேல் வயிற்றின் மையப் பகுதியில் வலி ஏற்பட்டால், அதற்கு வயிறு மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள உறுப்புக்களில் உள்ள பிரச்சனையைக் குறிக்கும். இங்கு எந்த பிரச்சனைகள் இருந்தால், மேல் வயிற்றின் மையப்பகுதியில் வலி ஏற்படும் என்று காண்போம்.

* இரைப்பை வாதம்

* வயிற்றுப் புண்

* வயிற்று புற்றுநோய்

* கணைய கோளாறுகள்

* குடலிறக்கம்

* தண்டுவடக் கோளாறுகள்

* குருதி நாள நெளிவு

* மாரடைப்பு

* நிணநீர் சுரப்பி புற்றுநோய்

செரிமான பிரச்சனைகளால் மேல் வயிற்று வலி ஏற்பட்டால் சந்திக்கும் அறிகுறிகள்:

மேல் வயிற்று வலி செரிமான பிரச்சனையால் ஏற்பட்டால், அத்துடன் ஒருசில அறிகுறிகளும் தென்படும். அவையாவன:

* அடிவயிற்று வலி அல்லது வீக்கம்

* வயிற்று உப்புசம்

* அடிக்கடி ஏப்பம்

* இரத்தம் கலந்த மலம் வெளியேறுதல்

* குடலியக்கத்தில் மாற்றம்

* மலச்சிக்கல்

* வயிற்றுப்போக்கு

* வாய்வுத் தொல்லை

* வெறும் குமட்டல் உணர்வு

வேறு பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்:

மேல் வயிற்று வலி வேறு சில பிரச்சனையால் ஏற்பட்டால், அப்போது வேறு சில அறிகுறிகள் தென்படும். அவையாவன:

* உடல் வலி

* இருமல்

* வீக்கமடைந்த கல்லீரல் மற்றும் சுரப்பிகள்

* காய்ச்சல்

* தசைப் பிடிப்புகள்

* வலி மற்றும் மருத்துப் போதல்

* அரிப்பு

* திடீர் எடை குறைவு

மருத்துவரை அணுக வேண்டியதை உணர்த்தும் அறிகுறிகள்:
மருத்துவரை அணுக வேண்டியதை உணர்த்தும் அறிகுறிகள்:
ஒருவருக்கு மேல் வயிற்று வலியுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒருசில அறிகுறிகளை உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். ஏனெனில் இவை உயிர் ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளாகும்.

* உணர்வு அல்லது விழிப்புத்தன்மையில் மாற்றம்

* நெஞ்சு வலி

* அதிகளவு காய்ச்சல்

* இதய படபடப்பு

* குடலியக்கத் திறன் குறைந்திருப்பது

* வேகதாக இதயத் துடிப்பு

* மூச்சு பிரச்சனைகள்

* கடுமையான மற்றும் கூர்மையான வயிற்று வலி

* இரத்த வாந்தி, மலப்புழையில் இரத்தக்கசிவு அல்லது இரத்தம் கலந்த மலம் வெளியேறுவது

இயற்கை வைத்தியங்கள்:

மேல் வயிற்று வலி ஏற்படும் போது, அவற்றை ஒருசில இயற்கை வைத்தியங்களின் மூலம் சரிசெய்ய முடியும். அதோடு ஒருசில வாழ்க்கை முறை மாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். சரி, இப்போது மேல் வயிற்று வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் சில எளிய இயற்கை வழிகளைக் காண்போம்.

தண்ணீர்

மேல் வயிற்று வலி நிமோனியா அல்லது சிறுநீரக தொற்றுக்களால் ஏற்பட்டிருந்தால், தினமும் குடிக்கும் நீரின் அளவை அதிகரிப்பதன் மூலம், டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டு, மேல் வயிற்று வலியில் இருந்து விடுபடலாம். ஒருவர் சரியான அளவில் நீரைக் குடித்தால் செரிமானம் ஆரோக்கியமாக நடைபெறும். எனவே தினமும் போதுமான அளவு நீரைக் குடியுங்கள். அத்துடன் எலுமிச்சை ஜூஸ், இளநீர், நற்பதமான பழங்கள் அல்லது காய்கறி ஜூஸைக் குடியுங்கள். முக்கியமாக காப்ஃபைன் கலந்த பானங்கள் மற்றும் மது பானங்களை, வயிற்று வலி போகும் வரை குடிக்காதீர்கள்.

சுடுநீர் ஒத்தடம்

சுடுநீர் ஒத்தடம் மேல் வயிற்று வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். இப்படி சுடுநீர் ஒத்தடம் கொடுக்கும் போது, வயிற்று தசைகள் ரிலாக்ஸ் அடைந்து, வலியைக் குறைக்கும். அதற்கு ஒரு பாட்டிலில் நன்கு கொதிக்க வைத்த நீரை நிரப்பி, பின் அந்த பாட்டிலை மூடிக் கொள்ள வேண்டும். அதன் பின் அந்த பாட்டிலால் வயிற்றுப் பகுதியில் ஒத்தடம் கொடுங்கள். இல்லாவிட்டால் தினமும் இரண்டு வேளை சுடுநீர் குளியலை 15 நிமிடம் மேற்கொள்ளுங்கள். இதனால் வயிற்று வலி நீங்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் மேல் வயிற்று வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். இது செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் உடலில் பல்வேறு உறுப்புக்களின் முறையான செயல்பாட்டிற்குத் தேவையான pH அளவைப் பராமரிக்கும். அதோடு அனைத்து வகையான தொற்றுக்களையும் எதிர்த்துப் போராடும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் 2 வேளை, மேல் வயிற்று வலி போகும் வரை குடிக்க வேண்டும்.

விளக்கெண்ணெய்

குடல்வால் அழற்சியால் மேல் வயிற்று வலி ஏற்பட்டிருந்தால், அதை விளக்கெண்ணெய் சரிசெய்யும். மேலும் இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, குடலியக்கத்தை சீராக்கி, குடல் வால் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதற்கு ஒரு துணியில் 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் தரையில் படுத்து, வயிற்றின் மேல் அந்த துணியை வைத்து, அதன் மேல் 30 நிமிடம் சுடுநீர் பாட்டிலைக் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை என 2-3 மாதம் செய்யுங்கள். ஆனால் இந்த முறையை மாதவிடாய் காலத்தில் பெண்களும், கர்ப்பிணிகளும் செய்யக்கூடாது. குடல்வால் அழற்சி இருப்பவர்கள், இந்த முறையை மேற்கொள்ளும் முன், மருத்துவரை அணுகி ஆலோசித்துக் கொள்ளுங்கள்.

இஞ்சி

இஞ்சி மற்றொரு சிறப்பான மேல் வயிற்று வலியைப் போக்கும் அற்புத பொருள். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வயிற்றில் உள்ள அழுற்சியைக் குறைத்து, வயிற்று வலியில் இருந்து விடுவிக்கும். அதற்கு இஞ்சியை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து வெதுவெதுப்பான நிலையில் குடிக்கலாம் அல்லது இஞ்சி துண்டை வாயில் போட்டு நாள் முழுவதும் மென்று கொண்டிருக்கலாம்.

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின், வயிற்றில் உள்ள அழற்சியைக் குறைக்க உதவும். மேலும் மஞ்சள் வயிற்றில் அமில உற்பத்தியைத் தூண்டி, வயிற்றில் pH அளவைப் பராமரித்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதோடு மஞ்சள் செரிமான பிரச்சனைகளைத் தடுத்து, வயிற்று வலியையும் தடுக்கும். அதற்கு 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை 1 டம்ளர் சூடான பாலில் போட்டு கலந்து, தினமும் 2 வேளை குடிக்க வேண்டும்.

அதிமதுரம்

அதிமதுரம் மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகை. இது பல்வேறு வயிற்று பிரச்சனைகளை சரிசெய்து வயிற்று வலியைப் போக்க வல்லது. அதற்கு 1 கப் சுடுநீரில் 1 டீஸ்பூன் அதிமதுர பொடியை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, ஒரு நாளைக்கு 2-3 முறை என ஒரு வாரம் குடிக்க வேண்டும்.

சோம்பு

சோம்பில் இரைப்பைக் குடல் வலி நீக்கி, சிறுநீர்ப் பெருக்கி பண்புகளுடன், வலியைக் குறைக்கும் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகளும் உள்ளது. இவை மேல் வயிற்று வலிக்கான காரணிகளை எதிர்த்துப் போராட உதவும். முக்கியமாக சோம்பு வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம் போன்ற அஜீரண கோளாறுகளையும் தடுக்கும். அதற்கு ஒரு கப் சுடுநீரில் 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து 8-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தேன் கலந்து, தினமும் 2-3 கப் குடியுங்கள்.

Related posts

சளி குறைய – பாட்டி வைத்தியம்

nathan

ஆண்களுக்கு வரும் வலிகளும் அவை உணர்த்தும் நோயின் அறிகுறிகளும்

nathan

உங்களுக்கு தெரியுமா கடுகு எண்ணெய் மற்றும் உப்பு பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்வது எப்படி?

nathan

உங்களுக்கு ரெட்டை குழந்தை எப்படி உருவாகும்னு தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

மாரடைப்பு இதயவலியை போக்க நன்றாக உறங்குங்கள்

nathan

தாய்மைக்கு தலை வணங்குவோம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் தைராய்டு வந்தால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

nathan

சிறுநீரக செயல்பாட்டை சீர்செய்ய உதவும் உணவு முறைகள்!

nathan

ஞாபகமறதி நோய் ( தொடர்ச்சி)

nathan