24.5 C
Chennai
Wednesday, Dec 18, 2024
333
அசைவ வகைகள்

அசத்தலான ‘லெமன் சிக்கன்’ !

333

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ… வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ‘லெமன் சிக்கன்’ அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.
தேவையானவை:
எலும்பு நீக்கிய சிக்கன்  – அரை கிலோ
தோல் நீக்கிய இஞ்சி – ஒரு சின்ன துண்டு
தோல் நீக்கிய பூண்டு – 10 பல்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்  – 100 கிராம்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
மல்லித்தூள் – 3 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
புளிக்காத தயிர் – 100 மில்லி
எலுமிச்சை சாறு  – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லித்தழை – அரை டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 30 மிலி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
தயிரை கட்டியில்லாமல் நன்கு அடித்துவைக்கவும். சிக்கனை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி, சுத்தம் செய்து கொள்ளவும். அதனுடன் சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். இஞ்சி, பூண்டை அம்மியில் தட்டிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியவுடன் ஊறவைத்திருக்கும் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். சிக்கன், வெங்காயம் இரண்டும் சேர்த்து சிறிதளவு பொன்நிறமாக வந்தவுடன் தட்டிய இஞ்சி, பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து பச்சை வாசனை நீங்கும்வரை நன்றாக வதக்கி அடுப்பை அணைக்கவும்.
எலுமிச்சை சாறு, கட்டியில்லாமல் நன்கு அடித்து வைத்த தயிர், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சிக்கன் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கலவையை இரண்டு நிமிடங்கள் வரை வைத்து கலக்கிவிட்டு, குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்.
லெமன் சிக்கனை, சாதம் அல்லது சப்பாத்தி வகைகளுடன் சாப்பிடலாம்.
குறிப்பு: எலுமிச்சை சாறு, தயிர் சேர்க்கும்போது அடுப்பை எறிய விட்டால், திரிந்து போக வாய்ப்புள்ளது. எனவேதான், அடுப்பை அணைத்து வைத்து எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து கலக்கிவிட்டு பின்னர் அடுப்பில் வைத்து சிறிது நேரம் வேகவிடலாம். லெமன் சிக்கன் செய்யும்போது, இந்த விஷயத்தைநினைவில் வைத்துக்கொள்ளவது பயன்தரும்

Related posts

சுறா புட்டு செய்ய…!

nathan

கிராமத்து ஸ்டைலில் கம கமக்கும் மீன் குழம்பு…

nathan

மகாராஷ்டிரா ஸ்டைல் மல்வானி இறால் குழம்பு!!

nathan

சிக்கன் குழம்பு: பேச்சுலர் ஸ்பெஷல்

nathan

வான்கோழி வறுவல் -வீடுகளில் செய்து சுவைக்கலாம்.

nathan

முட்டை மசாலா பிரட் டோஸ்ட்

nathan

சுவையான கொங்குநாடு ஆட்டுக்கறி குருமா

nathan

சிம்பிளான… நாட்டுக் கோழி குழம்பு

nathan

செட்டிநாட்டு இறால் வறுவல்

nathan