27.5 C
Chennai
Sunday, Dec 15, 2024
p67c
மருத்துவ குறிப்பு

ஃபுட்பாய்சன் பற்றி பாரம்பரிய மருத்துவம் சொல்வது என்ன?

ஃபுட்பாய்சன் பற்றி பாரம்பரிய மருத்துவம் சொல்வது என்ன?

– ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பால்.

“ஃபுட் பாய்சனில் நிறைய விதங்கள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான வீட்டு வைத்தியத்தை நாம் கொடுக்கக்கூடாது. பாதிப்பைப் பொருத்து வைத்தியம் செய்ய வேண்டும். வெயில் காலங்களில் ஐஸ் போட்ட ஜூஸ்களைக் குடிப்போம். சுத்தமில்லாத தண்ணீரில் தயாரிக்கும் ஐஸ், குல்பி போன்றவற்றால் கூட ஃபுட் பாய்சன் ஏற்படும். எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் வாந்தி, வயிற்றுப்போக்கை உடனடியாக நிறுத்தக் கூடாது. அப்படிச் செய்தால், கெட்ட கழிவுகள் உள்ளேயே தங்கி, உடலுக்குப் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும்” என்ற சாந்தி விஜய்பால், சில மருத்துவ முறைகளைச் சொன்னார். அவை இங்கே உங்களுக்காக…

வயிற்றுப் போக்குக்கான வீட்டு வைத்தியம்:

* சீரகத்தை வெறும் வாணலியில் கருப்பாக்கித் தீயும் அளவுக்கு வறுத்துப் பொடி செய்து… ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கால் டம்ளர் மோரில் கலந்து குடிக்க வேண்டும்.

* சிலருக்கு வாந்தி வருவதுபோல தோன்றிக்கொண்டே இருக்கும். அதனால் எதுவும் சாப்பிட முடியாது. அப்படி இருந்தால், ஒரு டேபிள்ஸ்பூன் தேனில் அதே அளவு எலுமிச்சைச்சாற்றைக் கலந்து அவ்வபோது நாக்கில் தடவினால் சரியாகும்.

* கோடையில் கிடைக்கும் மாம்பழம், பலாப்பழம் ஆகியவற்றை அளவுக்கு மீறி சாப்பிட்டாலோ, அல்லது சரியாகக் கழுவாமல் சாப்பிட்டாலோ அஜீரணம் ஏற்படும். இதனால் மலம் கழிக்கும்போது புளித்த வாடையுடன் நெஞ்சு எரிச்சலும் ஏற்படும். சீரகத்தையும் வெந்தயத்தையும் சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பசுநெய்யில் பெருங்காயக்கட்டியைப் பொரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் அரைத்த பொடியுடன் இரண்டு சிட்டிகை பெருங்காயக்கட்டியைக் கலந்து, பசுநெய்யில் கலக்கி ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டால், அஜீரணம் சரியாகும்.

* உடல் சூட்டினாலும் ஃபுட்பாய்சன் ஏற்படும். இதனால், அடிவயிற்றில் வலி அதிகமாக இருக்கும். வயிற்று வலியை உடனே குறைக்க நாமக்கட்டியை குழைத்து அடிவயிற்றில் தடவ வேண்டும். வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். ஒரு பிடி சீரகத்தை லேசாக வறுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு லேசாகக் கொதிக்க வைத்துக் குடித்தால் உடல் சூடு தணியும்.

மாதுளம் பழத்தோலைக் காய வைத்துப் பொடி செய்து… ஒரு டேபிள்ஸ்பூன் பொடிக்கு ஒன்றரை டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்கவைத்து குடித்தாலும் சூடு தணியும். சூடு உடம்புக்காரர்கள், அடிக்கடி இளநீர் குடிக்கலாம்.

மோரில் எலுமிச்சைச்சாற்றைப் பிழிந்து அதில் சிறிது ராக் சால்ட் (கடைகளில் கிடைக்கும்) கலந்து வெயில் காலங்களில் குடித்து வர உடல் சூடு தணியும். இது பித்தத்தையும் தணிக்கும்.

*ஒரே நேரத்தில் பல விதமான மாமிசங்கள் சாப்பிட்டாலும் ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்புள்ளது. சிக்கனில் ஒரு விதமான புரோட்டீன் இருக்கும். மீனில் வேறுவிதமான புரோட்டீன் இருக்கும். மட்டனில் உள்ள புரோட்டீன் இன்னொரு தன்மையில் இருக்கும். ஒரே நேரத்தில் சிக்கன், மட்டன், மீன் என்று சேர்த்து சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும். பாலுடன் முட்டையைக் கலந்து பிரெட் டோஸ்ட் சாப்பிடுவது; மாமிசம் சமைக்கும் போது அதில் தயிர், பால் சேர்ப்பது ஆகியவையும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் வயிறு உப்புசம் ஏற்படும். சிறிது இஞ்சியை நசுக்கி, இதில் கல்உப்பைச் சேர்த்து மென்றால் உப்புசம் சரியாகி விடும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் காலத்தில் சுகாதாரம் ஏன் மிகவும் முக்கியம் என்று தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா பூண்டை காதில் வைப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ?

nathan

உங்களுக்கு தெரியுமா கண்களின் அழகை பராமரிப்பதில் இவ்வளவு நன்மைகளா..!

nathan

படர்தாமரையை போக்கும் பூண்டு

nathan

வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம்?உங்களுக்கு எங்க ஐடியா!!

nathan

தெரிஞ்சிக்கங்க…தேமல் நோய் வருவதற்கான காரணமும்.. தீர்க்கும் வழிமுறைகளும் இதோ

nathan

உங்களுக்கு தெரியுமா விறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்

nathan

ந‌மது மூச்சு காற்றில் இவ்வ‍ளவு விஷயங்களா? ஆச்சரியத் தகவல்

nathan

உங்களுக்கு தெரியுமா சிறுநீரகத்தில் கற்கள் சேராமல் தடுப்பது எப்படி?

nathan