26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
201609200753263013 Symptoms of dengue fever SECVPF
மருத்துவ குறிப்பு

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

டெங்கு பாதிப்பு உடைய பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு 14 நாட்களுக்குள் டெங்கு வரும் வாய்ப்பு கூடுதல் என்பதால் கவனம் தேவை.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்
கொசுக்கடியால் பரவும் டெங்கு வைரஸ் டெங்கு ஜுரத்தினை உண்டாக்குகின்றது. பாதிக்கப்பட்ட 3-4 நாட்களில் ஜுர அறிகுறிகள் தெரியும். தலைவலி, உடல் வலி என்று ஆரம்பிக்கும் இது 2-4 நாட்களுக்குள்ளும் கட்டுப்படலாம். சிலருக்கு ரத்த கசிவினை ஏற்படுத்தி ஆபத்தான நிலையிலும் கொண்டு விடலாம். ஜுரத்தினால் குறைந்த அளவு ப்ளேட்லட்ஸ் எண்ணிக்கை ரத்தத்தில் ஏற்படும் பொழுது, ரத்த அழுத்த நிலை அதிகம் குறையும் பொழுது இது உயிரிழப்பு வரை கொண்டு செல்ல முடியும்.

ஏடெஸ் பிரிவு கொசுவினால் பரவும் இந்த வைரஸ் 5 பிரிவு படுகின்றது. ஒரு பிரிவினால் ஒரு முறை பாதிப்பு ஏற்படும் பொழுது அப்பிரிவில் எதிர்ப்பு சக்தி ஏற்படலாம். ஆனால் மற்ற நான்கு பிரிவுகளில் எந்தப் பிரிவு வைரசினாலும் பாதிப்பு ஏற்படலாம். இதை தடுப்பதற்கான வாக்சின் மருந்து இன்னும் ஆய்வில் உள்ளது. ஆகவே இதனை வருமுன் காப்பதாக தடுப்பதுதான் சிறந்த முறையாக உள்ளது.

வீட்டைச் சுற்றியும், பொது இடங்களிலும் தண்ணீர் தேங்காது வைத்தலே முதல் நிவாரணம். தண்ணீர் தேங்கும் இடங்கள் எல்லாம் கொசுக்கள் பெருகும் இடம் என்பதனை நினைவில் கொள்க. இரண்டாவதாக உடலை நன்கு மூடிய ஆடைகளை அணியுங்கள். கொசுவின் பாதிப்பிலிருந்து இது உங்களை காப்பாற்றும்.

‘எலும்பு உடைக்கும் ஜுரம்’ என இந்த டெங்கு ஜுரம் கூறப்படுகின்றது. ஜுரத்திலிருந்து நிவாரணம் பெற்றாலும் மூட்டு வலி, எலும்பு வலியிலிருந்து நிவாரணம் பெற கூடுதல் காலம் ஆகின்றது. ஜுரம் இருக்கும் பொழுது சிலருக்கு உடலில் சிவப்பு புள்ளிகள் போல் இருக்கும். இது உடைந்த சிறு சிறு ரத்தக் குழாய்களிலிருந்து ஏற்படும் ரத்தக் கசிவு. சிலருக்கு மூக்கு, வாய் இதனிலிருந்தும் ரத்தக் கசிவு ஏற்படலாம். இது ஓரிரு தினங்களில் சரியாகி விடும்.

ஆனால் ஒரு சிலருக்கு ரத்த குழாய்களிலிருந்து ப்ளாஸ்மா எனும் திரவ கசிவு ஏற்படலாம். இது நெஞ்சு, வயிறு பகுதிகளில் சேருவது கூடுதல் பிரச்சனையினை ஏற்படுத்தும். மேலும் ரத்தத்தின் திரவ நிலை கெட்டிப்படும் பொழுது ரத்த ஓட்டம் சீராய் இராது. இதனால் உடல் உறுப்புகள் சரியாய் இயங்க இயலாது. ரத்த கசிவு கூடலாம். ஆபத்தில் கொண்டு விடலாம். முறையான சிகிச்சை மூலம் உடல் முன்னேற்றம் பெறலாம். சில சமயம் மூளையைக் கூட பாதித்து விடும். கர்ப்பிணி பெண்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்படும் பொழுது குறை பிரசவம், எடை குறைந்த குழந்தை அல்லது கருச்சிதைவு போன்றவை ஏற்படலாம்.

ஏடெஸ் கொசு டெங்கு வைரஸ் கொண்ட ஒருவரின் ரத்தத்தினை எடுத்துக் கொள்ளும் பொழுது 2-10 நாட்களில் அதனுள் வைரஸ் கிருமி பரவுகின்றது. அது அக்கொசுவின் ஆயுள் வரை அதனுள் இருக்கும் அக்கொசு மற்றவரை கடிக்கும் பொழுது வைரஸ் நோய் பரவுகின்றது. இவ்வகை கொசு நம் வீட்டின் அருகில், மனிதர்களுக்கு அருகில் வீட்டில் தண்ணீர் இருக்கும் இடங்களிலேயே வாழ்கின்றது.

சிறு குழந்தைகளை மிகவும் அதிகம் பாதிக்கின்றது. மேலும் ஆரோக்யமான குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். பெண்கள், சற்று எடை கூடியவர்கள் ஆகியோரும் பாதிக்கப்படுகின்றனர். ரத்தத்தில் பளேட்லெட் எண்ணிக்கையை குறைக்கின்றது. இது ரத்தம் உறைய, கெட்டிபட காரணமான ஒன்று. இதன் அளவு குறையும் பொழுது ரத்தப் போக்கு எளிதில் அதிகமாகி விடுகின்றது.

ரத்தப் பரிசோதனையே இதனை கண்டறிய உதவும். இதற்கென்று தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை. பாதிப்பின் அறிகுறிகளுக்கேற்ற சிகிச்சையே அளிக்கப்படுகின்றது. திரவ உணவினை நன்கு குடிக்க முடிந்தாலும், சிறுநீர் வெளிபோக்கு முறையாய் இருக்கும் வரை சற்று எளிதாய் கையாள முடியும். டெங்கு பாதிப்பு உடைய பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு 14 நாட்களுக்குள் டெங்கு வரும் வாய்ப்பு கூடுதல் என்பதால் கவனம் தேவை. எல்லோருக்கும் மிக அதிக பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்றாலும் எல்லோரும் கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டியவர்களே. ஏனெனில் சில சமயங்களில் கல்லீரல், இருதயம் கூட பாதிக்கப்படுகின்றது.

இந்த குறிப்பிட்ட வகை கொசு வீட்டினுள், பாத்ரூமினுள், உணவு உண்ணும் இடங்களில் இருக்கும். மேஜை, நாற்காலி அடியில் இருந்து கால்களை கடிக்கும் சுத்தமான நீரில் முட்டையிடும் 1 1/2 -2 வாரங்களுக்குள் இம்முட்டைகள் கொசுவாகும். ஆப்பிரிக்காவில் உருவான இவ்வகை இன்று உலகமெங்கும் பரவியுள்ளது. எனில் இதன் வேகத்தினைஉணரலாம். இவ்வகை கொசுக்கள் வேகமாய் பறக்கும். நம் நாடு போன்ற சீதோஷ்ண நிலை உள்ள நாடுகளில் வருடம் முழுவதும் உயிர் வாழும் 400 மீ வரைதான் இருக்கும் இடத்திலிருந்து பறக்கும் வீடுகளை சுற்றியே இருக்கும். ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை இந்த பாதிப்பு அதிகம் இருக்கும்.

* அதிக மக்களிடம் பாதிப்பினை ஏற்படுத்தும் டெங்கு ஜுரம் 104-105 எப் வரை கூட செல்லும். எலும்பை உடைக்கும் வலி கொண்ட ஜுரம் என்பதால் பாதிக்கப்பட்டோர் நடையே மாறுபட்டு இருக்கும்.
* பாதிப்பு உடைய கொசுக்களால் அசுத்தம் இல்லாத இடத்திலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
* குளிர் காலத்திலும் கொசுக்கள் தங்கி வாழ்வதால் இதன் தீமை வளர்ந்து கொண்டே இருக்கின்றது.
* பல இடங்கள், ஊர்கள், வெளிநாடுகள் செல்லும் பயணிகளால் பாதிப்பு இல்லாத இடத்திலும் பாதிப்பு ஏற்படுகின்றது.

பாதுகாப்பு முறைகள் :

* பாதிப்பு அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்லாதீர்கள்.
* காலி பக்கெட்டுகள், தண்ணீர் பாத்திரங்களை கவிழ்த்து வையுங்கள், அதிக தண்ணீரை சேகரிக்காதீர்கள். தண்ணீர் உள்ள பாத்திரங்களை நன்கு மூடி வையுங்கள்.
* தொட்டி செடிகளை சுத்தமாக வைத்திருங்கள். நீர் தேங்கச் செய்யாதீர்கள்.
* பகலோ, இரவோ கொசு தவிர்ப்பு கிரீம், உடல் மூடிய ஆடை போன்ற பாதுகாப்பு முறைகளை பின்பற்றுங்கள்.
* ஜன்னலுக்கு கொசு வலை கண்டிப்பாய் அடியுங்கள். கதவுகளுக்கு கீழே இடைவெளி இல்லாது அடையுங்கள்.
* கொசு வலை அவசியம்.
* குப்பை தொட்டிகளை உடனுக்குடன் சுத்தம் செய்யுங்கள்.
* கற்பூரம் ஏற்றும் அறையில் கொசு வராது.
* வேப்பிலை இலை கொண்டு சாம்பிராணி போல் புகை போடுங்கள்.
* காய்ந்த வேப்பிலை பொடி கொண்டு உடலில் தேய்த்துக் குளியுங்கள்.

கை சிகிச்சை முறையாக :

* பப்பாளி இலை சாறு கொஞ்சமாக இருமுறை கொடுக்கின்றனர்.
* பூண்டு, இஞ்சி சேர்க்கின்றனர்
* மஞ்சள் பொடி சேர்த்த பால் கொடுக்கின்றனர். ஆனால் மருத்துவ உதவி மிக அவசியம்.
* டெங்கு ஜுரம் – வைரஸ் பாதிப்பு.
* டைபாய்ட், மஞ்சள் காமாலை போல் இதனை குணப்படுத்த முடியாது. ஆனால் சிகிச்சை கண்டிப்பாய் உதவும்.
* கண்டிப்பாய் மருத்துவ பரிசோதனை தேவைப்படுகின்றது.
* ரத்த பரிசோதனை மற்றும் பாதிப்பின் தீவிரத்திற்கு ஏற்ப மேலும் பரிசோதனைகள் தேவைப்படும்.
* சில நாட்கள் முதல் சில வாரங்களில் குணமாகும்.
* ஒரு முறை பாதிக்கப்பட்டவர்கள், இரண்டாவது முறையும் பாதிக்கப்பட்டால் நோயின் தீவிரம் கூடுகின்றது.
* அதிக ஜுரம், தலைவலி, சருமத்தில் பாதிப்பு, சதை வலி, மூட்டு வலி என இந்த ஜுரம் பாதிக்கப்பட்டவரை வெகுவாய் படுத்தும்.
* மிக அதிக பாதிப்பு இருக்கும் போது ரத்த கசிவு, ஷாக் போன்றவை ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகலாம்.
* வலி நிவாரணம், ஜுரம் மட்டுப்படுத்துதல், தேவையான அளவு நீர் சத்து போன்றவை மிக அவசியம்.
* தொடர்ந்து ஜுரம் கூடும்போது மருத்துவமனை சிகிச்சை அவசியம்.

பாதிக்கப்பட்டவர் :

* வயிற்று வலி, முதுகு வலி, கண் வலி, எலும்பு, மூட்டுகளில் வலி, சதை வலி, தலை வலி, தொண்டை வலி.
* உடல் சில்லிடுதல், சோர்வு, ஜுரம், பசியின்மை.
* வயிற்று பிரட்டல், வாந்தி சில சமயம் ரத்த கசிவு.
* சருமத்தில் சிகப்பு புள்ளிகள் என்ற அறிகுறிகளை கூறுவர்.
அத்தகைய நேரங்களில் உஷாராகி சிகிச்சையை தொடங்கி விடுங்கள்.201609200753263013 Symptoms of dengue fever SECVPF

Related posts

உங்க சரும பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக அமையும் மூலிகை இலை..!சூப்பர் டிப்ஸ்

nathan

தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் சுழற்சி முன்கூட்டியே நின்றுவிடுவதால் பெண்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறதா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பகாலத்தில் தோன்றும் வாந்தியை நிறுத்த சில டிப்ஸ்!.

nathan

சிறுநீரக செயல்பாட்டை சீர்செய்ய உதவும் உணவு முறைகள்!

nathan

வாய்ப்புண் யாருக்கு வரும்?தடுப்பது எப்படி?

nathan

கண்களைப் பாதிக்கும் ஒளிர்திரை!

nathan

பெண்களே நீங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறீர்களா என்பதை எப்படி கண்டறிவது?

nathan

தெரிஞ்சிக்கங்க… அதிக பெண்களுக்கு ஏன் நெஞ்சுவலி வருதுன்னு தெரியுமா?

nathan

புது தாய்மார்கள், தங்களின் வயிற்று சதையை வேடிக்கையான முறையில் குறைப்பது எப்படி?தெரிந்துகொள்வோமா?

nathan