26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
160.90
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! இந்த பழத்தை தினமும் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மையா?

செர்ரிப்பழங்களில் அதிகளவு வைட்டமின் சத்துக்கள் இருப்பதால் நம் உடலுக்கு நிறைய நன்மைகளை ஏற்படுத்துகிறது.

செர்ரிகளில் வைட்டமின்கள் ஏராளமாக இருக்கின்றது. குறிப்பாக வைட்டமின் ஏ, சி, பி, இ இருக்கிறது.

மேலும் கால்சியம், காப்பர், பொட்டாசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும், கார்போ ஹைட்ரேட்டுக்கள், புரோடீன்கள், நார்ச்சத்துக்கள் போன்றவையும் உள்ளடங்கியது.

இந்த பழத்தினை தினமும் சாப்பிடுவதனால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகின்றது.

அந்தவகையில் தற்போது செர்ரிப்பழத்தினை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

செர்ரி பழம் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைப்பதில் பேருதவி புரிகிறது. இந்த பழம் இயற்கையிலேயே ரத்த ஓட்டத்தை தூண்டும் ஒரு பழம் ஆகும்.
தினமும் சாப்பிட்டுவந்தால் உடலின் இரத்த ஓட்டத்தைச் சீராக்கும். செர்ரிப்பழம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்னைகள் நீங்கும்.

செர்ரி உடலில் உள்ள எந்தவொரு புற்றுநோய் உயிரணுக்களையும் சரிபார்க்கவும், கட்டுப்பாடில்லாமல் வளரவிடாமல் தடுக்கவும் உதவுகின்றது.
செர்ரி பழத்தில் வைட்டமின் “ஈ” சக்தி நிறைந்திருப்பதால், இது உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்தை பாதுகாக்கிறது.
செர்ரிப்பழம் சாப்பிடுவதால் நல்ல தூக்கத்தை பெற முடியும். அதோடு சருமம் பளபளக்கும்.செர்ரிகளில் உள்ள மெலடோனின் வேதிப்பொருள், கருப்பட்டி, ஸ்ட்ராபெர்ரிகளை விட ஐந்து மடங்கு அதிகம் மற்றும் தூக்கமின்மையை குணப்படுத்த உதவுகிறது.
நோய் எதிர்ப்புச் சக்தி வீரியமிக்க தாக இருக்க தினமும் செர்ரி பழங்களை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியடையும்.
செர்ரிப்பழத்தை உண்பதால், உடலுக்கு தேவையான மல்டிவைட்டமின் அளவு சத்து கிடைக்கிறது. இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. செர்ரி சாறு கருமையான புள்ளிகளை அழித்துத் தோல் ஒளிர உதவுகிறது. புத்துணர்ச்சியடையச் செய்ய உதவுகிறது.160.90

செர்ரி பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளப்பு தன்மை பெறும் மற்றும் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று செர்ரிப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் போதும். உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படும். உடலுக்குத் தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடும்.
செர்ரிகளில் உள்ள வைட்டமின்கள் முடிக்கு ஊட்டச்சத்து அளிக்கும் திறன் கொண்டவை. செர்ரிகளில் உள்ள வெவ்வேறு வைட்டமின்கள் ஆரோக்கியமான முடியைப் பராமரிக்க உதவுகின்றன.

Related posts

உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாக்கும் பழம்

nathan

கொழுப்பைக் குறைக்கும் தேநீர் வகைகள்

nathan

இட்லி மற்றும் தோசைக்கு பொருத்தமாக இருக்கும் சட்னிக்கள்!!!

nathan

இந்த உணவுகளுக்கு ‘குட்-பை’ சொல்லுங்க… சீக்கிரம் மாரடைப்பு வந்துடும்….

nathan

உங்க உடம்பில் தொப்பையாக அதிகரித்துவிட்டதா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

உடல் எடையைக் கூட்டும் உளுந்தங்களி

nathan

சுவையான காளான் மிளகு சாதம்

nathan

கார்ன் பாலக் கிரேவி

nathan

தினமும் இத ஒரு டம்ளர் குடிங்க.. உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு ‘குட்-பை’ சொல்லுங்க…

nathan