26.4 C
Chennai
Monday, Dec 30, 2024
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தை வளர்ப்பு:குழந்தைக்கு ‘டயாபர்’ பயன்படுத்துறீங்களா…கவனிக்கவும்!

Diaper-jpg-1126குழந்தைகள் பிறந்து, குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்காவது, அவர்களுக்கு, ‘டயாபர்’ அணிவிக்கப்படுகிறது. ஆனால், ‘டயாபர்’கள் பயன்படுத்துவதால், குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பெரும்பாலான பெற்றோர் அறிந்திருப்பதில்லை. அதோடு, சுற்றுச்சூழலுக்கும் மாசும் ஏற்படுகிறது.

முன்பெல்லாம் குழந்தைகளுக்கு துணியினாலான, ‘டயாபர்’களே பயன்படுத்தப்பட்டன. பின்னர், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும், ‘டயாபர்’கள் வரத் துவங்கின. இதன் பிரபலத்தால், துணி, ‘டயாபர்’களின் பயன்பாடு, படிப்படியாக குறைந்து விட்டது. ஆனால், துணி ‘டயாபர்’களால், பல்வேறு நன்மைகள் உள்ளன.

‘டிஸ்போசபிள்’ டயாபர்களால், குழந்தைகளுக்கு ரேஷஸ் எனப்படும் புண்கள், பின்பகுதியில் உராய்வு உட்பட சில பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதனால், குழந்தைகள் மிகவும் அவதிக்கு ஆளாகின்றனர். ஆனால், துணி டயாபர்கள் பயன்படுத்தினால், குழந்தைகளுக்கு ரேஷஸ் போன்றவை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது:

‘டிஸ்போசபிள்’ டயாபர்களின் மேலுறை, தண்ணீ­ர் புகாத, பாலிபுரபலீன் என்ற ரசாயனத்தால் உருவாக்கப்பட்டது. பிளாஸ்டிக் வடிவத்திலான இந்த ரசாயனம், சிதைவடைய 500 ஆண்டுகாலம் தேவை. உலகில் தயாரிக்கப்படும் டயாபர்களில் 70 சதவீதம், காகிதங்களில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. இதனால், உலகளவில், ஆண்டுக்கு 100 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன.

ஒரு மரத்தை உருவாக்க, உரங்கள், பூச்சி மருந்துகள், தண்ணீ­ர் என ஏராளமானவை தேவைப்படுகிறது. டயாபர்கள் தயாரிப்பதற்காக, அதிகளவில் மரங்கள் வெட்டப்படுவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. துணி டயாபர்கள், சிதைவுற 100 ஆண்டுகளே ஆகின்றன. இதே போன்று, சுத்தம் செய்து, மீண்டும் பயன்படுத்தப்படும் டயாபர்களும் உள்ளன. இந்த டயாபர்கள் ஈரமானதும், அவற்றின் உள்ளே இருப்பவற்றை தூக்கி எறிந்து விட்டு, துவைத்த பின், மீண்டும் பயன்படுத்தலாம். முதல் குழந்தைக்கு பயன்படுத்திய, இந்த வகை டயாபர்களை, மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு பயன்படுத்துவதால், உலகம் வெப்பமயமாதல் 40 சதவீதம் குறையும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ரீயூசபிள் டயாபர்’கள் சிதைவடைய, ஆறு மாத காலமே ஆகின்றன.

பணம் சேமிப்பு:

‘டிஸ்போசபிள்’ டயாபர்களுக்கு மக்கள் ஏராளமான அளவில் பணம் செலவழிக்கின்றனர். ஆனால், ‘ரீயூசபிள் டயாபர்’கள், மீண்டும் பயன்படுத்தப்படுவதால், அதற்கான செலவு குறைகிறது. எனவே, ‘டிஸ்போசபிள்’ டயாபர்களுடன் ஒப்பிடும் போது, ‘ரீயூசபிள்’ டயாபர்களால் அதிகளவு பணம் சேமிக்கப்படுகிறது.

பேஷன் டயாபர்கள்:

குழந்தைகளுக்கு பேஷனாக அணிவிக்க விரும்பினால், அதற்காகவே, துணி டயாபர்களில், பல்வேறு வண்ணங்கள் மற்றும் பேஷன்களில் வருகின்றன. இப்போது குழந்தைகளுக்கு எந்த டயாபரை பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்கள் அல்லவா?

Related posts

இனி காண்டம் வேண்டாம்! கருத்தடை மாத்திரை வேண்டாம்!

nathan

கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டியவை

nathan

குடல்வால் பிரச்சினை மற்றும் குடல் வீக்கத்தை கட்டுப்படுத்த!….

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த 8 மோதிரத்துல ஒன்னு சூஸ் பண்ணுங்க, உங்க கல்யாணம் பத்தி நாங்க சொல்றோம்!

nathan

இந்த உடற்பயிற்சி உத்திகளை பின்பற்றி கொழுப்பை குறைக்கலாம்…..

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…2 வயதில் காணப்படும் ‘மதி இறுக்கம்’ என்னும் ஆட்டிசத்தின் குணாதிசயங்கள்!!!

nathan

தொப்பை குறைய உதவும் கயிறு பயிற்சி

nathan

உடல் சூட்டை தடுக்கும் அற்புத வழிகள்…!

nathan

மன அழுத்தம் இல்லாமல் வாழ எளிய வழிமுறைகள்

nathan