30.3 C
Chennai
Saturday, May 18, 2024
hDXgRjp
பழரச வகைகள்

அட்டுக்குலு பாலு

என்னென்ன தேவை?

அவல் – 4 டேபிள்ஸ்பூன்,
வாழைப்பழம் (பூவன்) – 1,
பனங்கற்கண்டு – கால் கப்,
நெய் – சிறிதளவு ,
பால் – 1 கப்,
முந்திரி – சிறிதளவு,
உலர் திராட்சை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவைத்து, குளிர வைத்துக் கொள்ளுங்கள். பனங்கற்கண்டை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த பனங்கற்கண்டோடு வாழைப்பழத்தைச் சேர்த்து கையால் மசித்துக் கொள்ளுங்கள். குளிர வைத்துள்ள பாலை வாழைப்பழக் கலவையில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து, கரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி காய்ந்ததும், அவலையும், உலர் திராட்சை, முந்திரியையும் தனித்தனியாக போட்டு வறுத்து ஆறவைத்துக் கொள்ளுங்கள். பிறகு, கிளாஸ் அல்லது டம்ளரில் சிறிதளவு பால், சிறிதளவு அவல் என்று போட்டு மேலே முந்திரி திராட்சையைப் போட்டு பறிமாறுங்கள். சத்தும், சுவையும் மிக்க இந்த அட்டுக்குலு பாலு குழந்தைகளை வெகுவாக கவரும். hDXgRjp

Related posts

லெமன் பார்லி

nathan

செம்பருத்தி பூ சர்பத்

nathan

மாம்பழம், அன்னாசி மற்றும் வெள்ளரிக்காய் ஸ்மூத்தீ

nathan

குளு குளு புதினா லஸ்ஸி

nathan

சத்தான டிரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி

nathan

மோர்: குளிர்ச்சிக்கு மட்டுமல்ல..

nathan

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மாதுளம் ரைத்தா

nathan

குழந்தைகளுக்கான சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக்

nathan

புத்துணர்வு தரும் கேரட் தக்காளி ஜூஸ்

nathan